டெல்லி சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலும் தோல்வியை தழுவினார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் பர்வேஸ் வர்மா, 3, ஆயிரத்து 182 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
டெல்லி சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கியதுமே பாஜகவின் கரம் ஓங்கி இருந்தது. அதிக தொகுதிகளில் பாஜக வேட்பாளர்கள் முன்னணியில் இருந்தனர்.

அதே போல் ஆம் ஆத்மி கட்சியில் முக்கிய தலைவர்கள் பின்னணி இருந்து வந்தனர். அரவிந்த் கெஜ்ரிவால் மட்டும் இடை இடையே முன்னணி பெற்றதால் அவர் போட்டியிட்ட புதுடெல்லி தொகுதியில் மட்டும் இழுபறி நிலை நீடித்து வந்தது.
இதையும் படிங்க: கூட்டமாய் மோடியை பார்த்த அக்கிநேனி நாகார்ஜுனா குடும்பம்..! தெனாலி பொம்மை பரிசளிப்பு
வாக்கு எண்ணிக்கை முடிந்த நிலையில் இறுதியில் கெஜ்ரிவாலும் தேர்தலில் தோற்கடிக்கப்பட்டார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் பர்வேஸ் வர்மா 3 ஆயிரத்து 182 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இவர் டெல்லி முன்னாள் முதலமைச்சரின் மகன் ஆவார்.
27 ஆண்டுகளுக்குப் பிறகு தலைநகர் டெல்லியில் மீண்டும் ஆட்சியை கைப்பற்ற இருக்கிறது, பாஜக. ஆம் ஆத்மியின் கோட்டை என்று கருதப்பட்ட புதுடெல்லி தொகுதியில் அவரை தோற்கடித்த பர்வேஸ் வர்மா பாஜக புதிய ஆட்சியில் முதல்வர் பதவிக்காக முன்னணியில் இருந்த தலைவர் ஆவார்.

இப்போது அவர் கெஜ்ரிவாலை தோற்கடித்து இருப்பதன் மூலம் அவருக்கே முதல்வர் கிரீடம் சூடப்படுவது உறுதியாகிவிட்டது என அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.
ஐஏஎஸ் அதிகாரியான கெஜ்ரிவால் சமூக ஆர்வலரான காந்தியவாதி அண்ணா ஹசாரே வின் ஊழலுக்கு எதிரான போராட்டத்தில் தீவிர பங்கு வகித்து அடையாளம் காணப்பட்ட தலைவர்களில் முக்கியமானவர். பின்னர் அரசியலுக்கு வந்து ஆம் ஆத்மி கட்சியை தொடங்கிய கெஜ்ரிவால் அப்போதைய டெல்லி முதல்வரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ஷீலா தீட்சித்தை தோற்கடித்து 2013 ஆம் ஆண்டில் முதல் முறையாக புதுடெல்லி தொகுதியில் வெற்றி பெற்றார்.
பின்னர் மீண்டும் 2015 மற்றும் 2020 தேர்தல்களில் கூடுதல் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்று புதுடெல்லி தொகுதியை தனது கோட்டையாக மாற்றினார்.

அதி முக்கிய அரசியல் தலைவர்கள் வசித்து வரும் டெல்லி போன்ற ஒரு உயர்மட்ட தொகுதியில் கெஜ்ரிவாலுக்கு எதிராக பர்வேஸ் வர்மாவுக்கு கிடைத்திருக்கும் இந்த வெற்றி, ஒரு அற்புதமான சாதனையாகும்.
இரண்டு முறை மேற்கு டெல்லி தொகுதி எம்பி யாக பதவி வகித்திருக்கிறார் பர்வேஸ்வர்மா. டெல்லியின் முன்னாள் முதல்வர் பாஜகவின் சாஹிப் சிங் வர்மாவின் மகன் இவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஆர் எஸ் எஸ் உடன் நீண்ட காலமாக 'ஹகா பிரமுக்' ஆக இருந்த வர்மா பின்னர் பாஜகவில் முக்கிய பொறுப்புகளை வகித்தார். பிரச்சாரத்தின் போது கெஜ்ரிவாலை நேரடியாக தாக்கி அவர் குற்றம் சாட்டி வந்தார். யமுனை நதியின் மாசுபாட்டையும் அதை சுத்தம் செய்ய
கெஜ்ரிவால் தவறிவிட்டதையும் முன்னிலைப்படுத்திய அவர், கெஜ்ரிவாலின் உருவ பொம்மையை யமனை நதியில் மூழ்கடித்து வித்தியாசமான ஒரு போராட்டத்தையும் நடத்தி நாட்டு மக்களை கவர்ந்தவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: டெல்லியில் பாஜக வெற்றிக்கு முக்கிய 2 காரணங்கள்: "நெட்டிசன்"கள் சொல்வது என்ன?