எல்லாமே மீடியா செட்டிங், பக்கா செட்டிங். செட்டிங் பண்ணுவது தவிர எதுவுமே தெரியாது. என் தலைவரை பார்த்து நடிகர் என்கிறீர்கள். அவருடைய ஒரே கமெண்ட் மட்டும் இருக்கிறது. ஒரே கமிட்மெண்ட் உள்ளது அதன் பின்னர் வாழ்க்கை முழுவதும் மக்களுக்கு என்று டிக்ளர் செய்து விட்டார். ஆனால் என் தலைவரை பார்த்து நீங்கள் ஏன் நடித்துக்கொண்டிருக்கிறீர்கள் அதுவும் அவர் போடுகிற பேண்ட் சட்டையை மாற்றி வைத்தால் கூட பரவாயில்லை. அதே கலர் பேண்ட் சட்டை. இதிலிருந்து ஒன்று தெரிகிறது உங்களுக்கு முதல்வரும் ரசிகர் தான். நாமெல்லாம் அண்ணன் என்று கூப்பிடுவோம், அடுத்த நாள் பார்த்தால் வாரிசு, பிறப்பால் பதவி அடைந்தவர் அண்ணன் என்று போட்டுக்க ஆரம்பித்து விட்டார். என்ன நடக்கிறது என்று தெரியவில்லை.

ஆளுங்கட்சிக்கு என்ன நடக்கிறது என்றால் தூங்கும் பொழுது, நடக்கும் பொழுது இந்த கூட்டத்தை எப்படி அனுப்பறது என்பதுதான் சிந்தனையே. இப்படித்தான் எம்ஜிஆர சொன்னீங்க 77-ல் தூக்கி போட்டார் 89 வரை வர முடியவில்லை. அவர் உயிருடன் இருக்கும் வரை வர முடியவில்லை. ஏளனம் பேசுவதை கைவிடுங்கள், ஒருவரை ஒருமையில் பேசுவதை நிறுத்துங்கள். மக்கள் வரவேற்பார்கள். தன்னுடைய பொருளாதாரத்தை தூக்கி எறிந்த தலைவர்களை தூக்கி பிடிப்பார்கள். ஆட்சி அமைத்து பொருளாதாரத்தை சேர்க்கின்ற அரசாங்கம் தான் பார்த்திருக்கிறோம், பொருளாதாரத்தை தூக்கி எறிந்து நிற்கின்ற தலைவரை பார்க்கிறோம். அதற்கு ஒரு தைரியம் வேண்டும். அதற்குரிய தைரியத்துடன் தான் நாமும் நம்முடைய தலைவரும் இயங்குகிறோம்.
இதையும் படிங்க: 'பாலிசி ஃபெயிலியர்… கபடதாரிகள்…'- திமுக ஆட்சியைப் போட்டுப் பொளந்த ஆதவ் அர்ஜூனா..!

பொதுச் செயலாளர் காலை 6 மணிக்கு வந்து விட்டார், யூடியூபில் அமர்ந்து பேசுகிறார்கள் எனக்கும், பொதுச்செயலாளருக்கும், பொருளாளருக்கும் பிரச்சனை என்று. நாங்கள் ஒற்றுமையாகத்தான் இருக்கிறோம். டைம் வேஸ்ட் பண்ணாதீங்க நாங்க ஃபோகஸ்டாக ஆக இருக்கிறோம். உங்கள் ஆதரவு இல்லாமல் யாராலும் நம்பர் ஒன் ஆக முடியாது .
இதையும் படிங்க: 2026- தேர்தலுக்கு முன் 'யானை' பலம்.. விஜய் வகுக்கும் திட்டம்: களத்தில் இறங்கிய ஆதவ் அர்ஜூனா..!