தற்பொழுது வெளியான குட் பேட் அக்லி படத்தில் வரும் "தொட்டு தொட்டு பேசும் சுல்தானா" என்ற பாடலுக்கு நடனம் ஆடி ஃபேமஸ் ஆகி இருப்பவர் தான் நடிகை பிரியா வாரியார், சமீபத்தில் இப்படத்தின் பிடிஎஸ் புகைப்படங்களை பகிர்ந்து அதில், "உங்கள் மீது எனக்கு இருக்கும் மரியாதையை எந்த அளவுக்கு வார்த்தைகளால் எழுதினாலும் போதாது. முதல் முறை பேசியது தொடங்கி கடைசி நாள் ஷூட்டிங் வரை நன்றாக உணர வைத்தீர்கள். யாரும் வேறு விதமாக உணரக்கூடாது என உறுதி செய்தீர்கள். செட்டில் நீங்கள் இருக்கும் போது அனைவரையும் பார்த்துக் கொண்டீர்கள். அதற்காக அஜித் சாருக்கு நன்றி என தெரிவித்து இருந்தார்.

இந்த படம் உண்மையிலேயே பிரியா வாரியரின் வாழ்க்கையை மாற்றிய படம் என்றே சொல்லலாம். அந்த அளவிற்கு இன்று அவருக்கு ரசிகர்கள் பட்டாளம் குவிந்து வருகினறனர். மேலும், இந்த படத்தின் வெற்றி விழாவானது ஹைத்ராபாத்தில் நடைபெற்றது. அங்கு பேசிய பிரியா வாரியர், "எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது, என்ன சொல்வது என்று தெரியவில்லை. இதனை நான் உண்மையில் எதிர்பார்க்கவில்லை. என்னுடைய செல்போனுக்கு தொடர்ந்து வாழ்த்து மடல்கள் வந்து கொண்டே இருக்கின்றன. அதாவது, யாரும் எதிர்பாராத வகையில், 2018-ம் ஆண்டு வெளியான 'அடார் லவ்' படத்தில் நான் வைரலானது போல, மீண்டும் வைரல் ஆகிவிட்டேன் என்று என்னிடம் சொல்கிறார்கள்.
இதையும் படிங்க: சிம்ரன் இடத்தை கொடுத்து அழகு பார்த்த இயக்குனர்..! நெகிழ்ச்சி பொங்க பேசிய பிரியா வாரியர்..!

அதுமட்டுமில்லாமல், நடிகை சிம்ரன் ஆடிய 'தொட்டு தொட்டு பேசும் சுல்தானா' பாடலுக்கு, நான் சரியாக ஆடி அதற்கு ஏற்ற பங்களிப்பை கொடுப்பேன் என்று நம்பிய இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரனுக்கு நன்றி. மேலும், நடிகர் அஜித் சாருக்கு தீவிர ரசிகையாக மாறிவிட்டேன். அந்த அளவிற்கு அவர் எனக்கு உறுதுணையாக இருந்தார். வெளியே பார்ப்பதை விட உண்மையில் ஜாலியான மனிதர். அவரிடமிருந்து கற்றுக்கொள்ள நிறைய விஷயங்கள் இருக்கின்றன" என பெருமையாக பேசியனார்.

இப்படி இருக்க, சமீபத்தில் ஒரு தனியார் சேனலின் விருது விழா ஒன்றில் கலந்து கொண்டார் பிரியா வாரியர். அப்போது அங்கிருந்த தொகுப்பாளர் ஒரு வீடியோவை திரையில் காண்பித்து பிரியா வாரியரை பார்க்கச் சொன்னார். திடீரென, அந்த வீடியோவில் நடிகர் விஜய் இருப்பதை பார்த்து ஷாக் ஆனார், அந்த வீடியோவில் நடிகர் விஜய், பிரியா வாரியரின் நடிப்பையும் நடனத்தையும் பாராட்டியதுடன் இதேபோல இன்னொரு நடனத்தை எனக்காக ஆடுமாறு கேட்டுள்ளார்.
இதனை பார்த்து முதலில் வெட்கப்பட்ட பிரியா, அடுத்தக்கனம் விஜயா, தன்னை இப்படி பாராட்டுகிறார். இது உண்மை தானா என மகிழ்ந்து மீண்டும் அந்த வீடியோவை ஃபிளே செய்யுங்கள் என ஆர்வமுடன் கேட்டுள்ளார்.

உடனே நிகழ்ச்சி தொகுப்பாளர் அவரிடம் சிரித்தபடி இது ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட சித்தரிக்கப்பட்ட வீடியோ என்று கூற, அவரது ஆசையெல்லாம் கருகிப்போனது. மேலும் இதனால் அதிர்ச்சியான பிரியா வாரியர் உடனே கோபமடைந்து கொஞ்சம் நாகரிகத்துடன், "இது ரொம்பவே டூ மச்.. உண்மையிலேயே இது தப்பான விஷயம்" என்று தனது எதிர்ப்பை அணிவர் முன்பும் வெளிப்படுத்தி சென்றார்.

இந்த வீடியோவை பார்த்த பலரும் நடிகர் விஜயை வைத்து இப்படி செய்ததற்காகவும் பிரியா வாரியரை ஏமாற்றியதற்காகவும் தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகினறனர்.
இதையும் படிங்க: சிம்ரன் இடத்தை கொடுத்து அழகு பார்த்த இயக்குனர்..! நெகிழ்ச்சி பொங்க பேசிய பிரியா வாரியர்..!