வாரம் வாரம் பல திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியானாலும் ஓடிடி தளங்களில் வெளியாகும் படங்களுக்கு மவுசு கொஞ்சம் அதிகம் என்றே சொல்லலாம். அந்த வகையில் இந்த வாரம் ஓடிடியில் ஆறு படங்கள் வெளியாகி உள்ளன. அதை பற்றி கீழே காண்போம்.

வீர தீர சூரன் - சித்தா பட இயக்குனர் எஸ்.யு.அருண்குமார் இயக்கத்தில், ஜி.வி பிரகாஷ் இசையமைப்பில், விக்ரம், எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சராமுடு, துஷாரா விஜயன், சித்திக் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள படம் தான் 'வீர தீர சூரன் 2'. இந்த படத்தில் நடிகர் விக்ரம் 'காளி' என்ற கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவருக்கு மனைவியாக துஷார விஜயன் நடித்துள்ளார்.
மதுரையை மையமாக வைத்து உருவான கதைக்களமான இப்படம் பல தடைகளை தாண்டி கடந்த மாதம் 27-ம் தேதி மாலை வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இப்படம் உலகளவில் இதுவரை ரூ.70 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. இந்த நிலையில் 'வீர தீர சூரன் 2' படம் பிரபல ஓடிடி தளமான 'அமேசான் பிரைம்' தளத்தில் ஏப்ரல் 24ம் தேதி வெளியானது.
இதையும் படிங்க: அடுத்தடுத்து வெளியாக இருக்கும் 11 ஹிட் படங்கள்...! 2025 முழுவதும் ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்..!

எல் 2 எம்புரான் - நடிகர் பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் மற்றும் மஞ்சு வாரியர் நடிப்பில் கடந்த மார்ச் மாதம் 27ம் தேதி அனைத்து திரையரங்குகளிலும் வெளியான திரைப்படம் தான் ‛எல் 2 :எம்புரான்'. இந்த திரைப்படம் வெளியான நான்கு நாட்களில் வசூலில் பட்டையைக்கிளப்பியது. பின் சில அரசியல் தலையிட்டால் படத்தில் உலா காட்சிகள் நீக்கப்பட்ட படத்தின் வசூலானது அப்படியே குறைந்தது. இந்த நிலையில் ஏப்ரல் 24ம் தேதி பிரபல ஓடிடி தளமான 'ஜியோ ஹாட்ஸ்டார்' தளத்தில் வெளியானது.

நிறம் மாறும் உலகில் - நான்கு கதைகள் கொண்ட ஆந்தாலஜி பாணியில் உருவான திரைப்படம் தான் ‘நிறம் மாறும் உலகில்'. பிரிட்டோ இயக்கத்தில் பாரதிராஜா, ரியோ ராஜ், நட்டி, சாண்டி, யோகி பாபு, ஆர்.ஜே.விக்னேஷ்காந்த், ரிஷிகாந்த், கனிகா, வடிவுக்கரசி, விஜி சந்திரசேகர் ஆகியோரின் நடிப்பில் கடந்த மார்ச் 7ம் தேதி வெளியான இந்த திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்த சூழலில் ‘நிறம் மாறும் உலகில்' திரைப்படம் பிரபல ஓடிடி தளமான 'சன் நெக்ஸ்ட்' தளத்தில் ஏப்ரல் 25-ம் தேதியான இன்று வெளியானது.

மேட் ஸ்கொயர் - சித்தாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ் தயாரிப்பில் கல்யாண் ஷங்கர் இயக்கத்தில் நர்னே நிதின், சங்கீத் ஷோபன், ராம் நிதின், ஸ்ரீ கவுரி பிரியா, அனனாதிகா சனில்குமார், கோபிகா உதயன், விஷ்ணு ஓய் மற்றும் கார்த்திகேய சாமலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து மார்ச் மாதம் வெளியான 'மேட்' படத்தின் அடுத்த பாகம் தான் 'மேட் ஸ்கொயர்'. நகைச்சுவை கலந்த இந்த திரைப்படம் பிரபல ஓடிடி தளமான "நெட்பிளிக்ஸ்" தளத்தில் வெளியாகி உள்ளது.

தி ரிட்டர்ன் - உபெர்டோ பசோலினி இயக்கத்தில் உருவான அட்டகாசமான திரைப்படம் தான் தி ரிட்டர்ன். இந்த படத்தில் ரால்ப் பியன்னெஸ் மற்றும் ஜூலியட் பினோச் இருவரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இரு நாடுகளுக்கு இடையேயான போரை பற்றி விளக்கமாக கூறும் கதையாக உருவான இப்படம் "பாராமவுண்ட் பிளஸ்" என்ற ஓ.டி.டி தளத்தில் வெளியாகி உள்ளது.

தருணம் - புகழ் மற்றும் ஈடன் தயாரிப்பில், அரவிந்த் சிரினிவாசன் இயக்கத்தில், தர்புகா சிவா இசையமைப்பில், கிஷேன் டாஸ் மற்றும் ஸ்மிருதி வெங்கட் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இளமை காதலை மற்றும் சுயஆராய்ச்சியைக் கண்டு பிடிக்கும் ஒரு உணர்ச்சி மிகுந்த திரைப்படம் தான் "தருணம்". ஜனவரி மாதம் 21ம் தேதி வெளியான இந்த படம் பலரது பாராட்டை பெற்றது. இந்த படம் பிரபல ஓடிடி தளமான டெண்ட்கொட்டா தளத்தில் வெளியாகவுள்ளது.

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்களை பார்த்து மகிழுங்கள்.
இதையும் படிங்க: ஓடிடியில் வெளியான 5 படங்கள்..! ஒரே நாளில் இத்தனை படங்களா..! ரசிகர்கள் ஆரவாரம்..!