பாமகவை அடுத்தக்கட்டத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என நினைத்த பாமக நிறுவனர் ராமதாஸ், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அன்புமணி ராமதாஸ் தலைவராக நியமித்தார். தலைவராக இருந்த ஜிகே மணி கௌரவ தலைவராக நியமிக்கப்பட்டார். அப்போது இருந்து ஜி.கே.மணிக்கும், அன்புமணி ராமதாஸுக்கும் அவருக்கும் இடையே உரசல் ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. இதனால் அன்புமணி மீது கடுப்பில் இருந்த ஜி.கே.மணி ராமதாஸிடம் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் அவரிடம் போட்டுக்கொடுத்து வந்ததாக, போர்க்கொடி தூக்கியிருக்கிறார்கள் பாட்டாளி மக்கள் கட்சி இளைஞர்கள்.
Read more at: https://tamil.oneindia.com/news/chennai/gk-mani-s-dmk-praise-sparks-pmk-rift-will-he-quit-and-join-stalin-698687.html

பாமக பொதுக்குழு கூட்டத்தில் ராமதாஸும் அன்புமணியும் நேரடியாக கருத்து மோதலில் ஈடுபட்டனர். அப்போது கூட ராமதாசுக்கு ஆதரவாக இருப்பது போல் நடித்து அன்புமணியை கட்சி பதவியிலிருந்து நீக்க கங்கணம் கட்டிக் கொண்டார் ஜி.கே மணி. அவருடைய சகுனி வேலையால் தான் இப்போது ராமதாஸுக்கும் அன்புமணிக்கும் இடையே பகைமேகம் சூழ்ந்துள்ளது என பாமக தொண்டர்கள் சோசியல் மீடியாவில் ஜி.கே.மணியை சரமாரியாக விமர்சித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: எந்த நேரத்திலும் திமுக கூட்டணி டமார்.. கொளுத்திப் போடும் மாஜி அதிமுக அமைச்சர்.!!
பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞர்கள் ஜி.கே மணிக்கு எதிராக சமூக வலைதலங்களில் கொதித்து கிடக்கிறார்கள். ஐயாவிற்கும் சின்னையாவிற்கும் இடையே பகையை ஏற்படுத்திய கருங்காளியே ஜிகே மணிதான் என அவர்கள் ஆவேசம் அடைந்து பதிவிட்டு வருகிறார்கள். தன்னுடைய பதவியை பிடுங்கிய அன்புமணியை நேரம் பார்த்து காலி செய்யும் செயல்பாடுகளில் ஜி.கே மணி ஈடுபட்டு வந்ததாகவும் அதற்காகவே ராமதாஸ் மூலம் அவருடைய மகளுடைய மகனான முகுந்தனை இளைஞரணி பதவிக்கு கொண்டுவர ஜி.கே மணி காய் நகர்த்தியதாகவும், தனிப்பட்ட முறையில் முகுந்தனை போய் ராமதாசை சந்தித்து பேச்சொல்லி அவருக்கு கொம்பு சீவி விட்டதே ஜி.கே மணிதான் என்றும் கொந்தளிக்கின்றனர்.

ஜி.கே மணி தன்னுடைய வன்மத்தை தீர்த்து கொள்ள தேர்தல் நேரத்தை பயன்படுத்துவதாகவும், இப்படியான முக்கியத்துவம் வாய்ந்த சூழலில் உட்கட்சி குழப்பத்தை அவர் ஏற்படுத்தி அதில் குளிர்காய் நினைப்பதாகவும் பாமகவினர் பதிவிட்டு வருகின்றனர். பாட்டாளி மக்கள் கட்சியில் இப்படி நிறுவனரும் தலைவரும் சண்டையிட்டு கொண்டால் நம்முடைய கட்சியின் பலமே பலவீனமாக மாறிவிடும் என்பதை கூட நினைத்து பார்க்காத ஜி.கே மணி, அன்புமணியை ஓரங்கட்டி கட்சியை மீண்டும் தனது கட்டுப்பாட்டில் வைத்து கொள்ள ஆடும் சூதாட்டமே இப்படியான மோதல் போக்கிற்கு காரணம் என கட்சியின் மூத்த நிர்வாகிகளே வெளியில் சொல்ல முடியாமல் ஆதங்கப்பட்டு வருவதாக சமூக வலைதலங்களில் பரபரப்பு தகவல் வெளியாகி இருக்கிறது.
எதார்த்தத்தையும் தற்போதைய சூழலுக்கு ஏற்றவாறு முடிவுகளையும் எடுப்புவோரமாக அன்புமணி இருப்பதாலும், கட்சியில் திறமையாக பணியாற்றும் இளைஞர்களுக்கு அவர் வாய்ப்பு கொடுத்து வருவதாலும் அதனை தாங்கி கொள்ள முடியாத ஜி.கே கே மணி கட்சியின் சீனியர்களை தூண்டிவிட்டு அவர்கள் மூலம் மருத்துவர் ராமதாஸை அன்புமணிக்கு எதிராக மடைமாற்றம் செய்துள்ளதாக புகார் எழுந்துள்ளது.

பாட்டாளி மக்கள் கட்சியை தொடர்ந்து வழிநடத்தவும், அந்த கட்சியை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லவும் அன்புமணியால் மட்டுமே இனி முடியும் என்றும், ஜிகே மணி கையில் கட்சி சென்றால் அந்த கட்சி சல்லி சல்லியாக உடைந்து நொருங்கி போய்விடும் என்று கவலைப்படுகின்றனர் பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞர்கள். இதனை உடனடியாக தீர்த்து வைக்க வேண்டுமானால் ஜி.கே.மணி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவரை கட்சியின் முக்கிய செயல்பாடுகளில் தலையிடாதவாறு ஒதுக்கி வைக்க வேண்டும் என்றும் சோசியல் மீடியா மூலமாக கலகக்குரல்கள் ஒலிக்க ஆரம்பித்துள்ளன.
இதையும் படிங்க: பாமக- தவெக கூட்டணிக்கு ராமதாஸ் வைத்த டிமாண்ட்.. இ.பி.எஸை தெறிக்க விட்ட விஜய், அன்புமணிக்கு அடங்குவாரா..?