2025 ஐபிஎல் சீசனின் இன்றைய போட்டியில் சென்னை அணியும் ஹைதராபாத் அணியும் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. புள்ளிப் பட்டியலில் ஒன்பதாவது மற்றும் பத்தாவது இடங்களில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் உள்ளன. இந்த இரண்டு அணிகளும் 8 போட்டிகளில் விளையாடி இரண்டு வெற்றிகளை மட்டுமே பெற்று, நான்கு புள்ளிகளுடன் புள்ளிப் பட்டியலில் கடைசி இரண்டு இடங்களில் உள்ளன. இந்த இரண்டு அணிகளில் வெற்றி பெறும் அணிக்கு பிளே ஆஃப் வாய்ப்பு சற்று அதிகரிக்கும்.

ஆனால் தோல்வியடையும் அணியின் பிளே ஆஃப் வாய்ப்பு கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துவிடும் என்ற நிலை உள்ளது. இந்த போட்டியில் சிஎஸ்கே அணி தரப்பில் 3 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ரச்சின் ரவீந்திரா, விஜய் சங்கர் மற்றும் ஜேமி ஓவர்டன் ஆகிய 3 பேர் நீக்கப்பட்டு டிவால்ட் பிரெவிஸ், தீபக் ஹூடா மற்றும் சாம் கரண் ஆகிய 3 பேரும் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த சீசனில் சிஎஸ்கே அணி சொந்த மண்ணில் ஆடிய 4 போட்டிகளில் 3ல் தோல்வியை சந்தித்துள்ளது. டாஸுக்கு பின் பேசிய சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனி, நாங்கள் பவுலிங் செய்யவே விரும்பினோம்.
இதையும் படிங்க: ஜடேஜா பேட்டிங்கில் முன்னேற்றம் தேவை.. சிஎஸ்கே அணியின் பயிற்சியாளர் பிளமிங் கருத்து!!

அதற்கு பனிப்பொழிவு மட்டுமே காரணம். பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங்கில் சிறப்பாக செயல்பட வேண்டும். எங்களுக்கு மட்டுமல்லாமல் ஐதராபாத் அணிக்கும் அழுத்தம் இருக்கிறது. போட்டியில் அடிப்படைகளை சரியாக செய்ய வேண்டும். இனி வரும் 6 போட்டிகளிலும் அதனை செய்ய வேண்டும். 6 போட்டிகள் என்று நினைக்காமல், ஒவ்வொரு போட்டியாகவே வெற்றிபெற வேண்டும் என்று திட்டமிட்டுள்ளோம். சொந்த மண்ணில் சில காம்பினேஷன்களை முயற்சித்து வருகிறோம். அதேபோல் அனைத்து வீரர்களின் மீதும் நம்பிக்கை இருக்கிறது. இந்த பிட்ச் எப்படி இருக்கும் என்று தெரியவில்லை.

இந்த போட்டிக்காக 2 மாற்றங்கள் செய்துள்ளோம். ரச்சின் ரவீந்திரா மற்றும் விஜய் சங்கர் நீக்கப்பட்டு, பிரெவிஸ் மற்றும் தீபக் ஹூடா சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். அவரை தொடர்ந்து பேசிய பேட் கம்மின்ஸ், நாங்கள் பவுலிங்கை தேர்வு செய்கிறோம். சிஎஸ்கே அணிக்கு எதிராக விளையாடுவது எப்போதும் மிகப்பெரிய ஆட்டமாகவே இருக்கிறது. கடந்த 2 போட்டிகளிலும் தோல்வியை சந்தித்துள்ளோம். ஆனால் இம்முறை புதிய அணிக்கு எதிராக, புதிய மைதானத்தில் விளையாடுகிறோம். எங்களின் பேட்ஸ்மேன்கள் நிச்சயம் சிறப்பாக செயல்படுவார்கள் என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: வெளியில் மட்டுமல்ல; சொந்த மண்னிலும் ஜெயிப்போம்... செய்து காட்டிய RCB!!