தமிழ் திரையுலகில் இளையராஜாவை அடுத்து மிகப்பெரிய இசையமைப்பாளர் என்றால் அவர்தான் ஏ.ஆர்.ரகுமான். இவரது பாடல்கள் அனைத்தும் ஹிட் கொடுத்த நிலையில் இவரது பாடலுக்கு என தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. குறிப்பாக தமிழுக்காக இவர் இயற்றிய "செம் மொழியான தமிழ் மொழியாம்" பாடல் இன்று வரை மக்கள் மத்தியில் ஒரு ஊக்கத்தை கொடுத்துள்ளது.
இதுவரை பல படங்களின் பாடல்களை எடுத்துதன் பாணியில் உருவாக்கி வருகிறார் இசையமைப்பாளர் அனிருத் என பலரும் கூறிவந்த நிலையில், தற்பொழுது முதல் முறையாக மற்றொருவரின் பாடலை வைத்து ரகுமான் இசையமைத்து உள்ளார் என கோர்ட்டின் தீர்ப்புக்கு பின்னர் அனைவரும் கூறி வருகினறனர்.

ஆனாலும் ஒருமுறை நடந்த தவறுக்காக அவரது பல வருட உழைப்பை யாரும் பொய் என மறுக்க முடியாது. அந்த வகையில் இன்று பல பாடல்களுக்கு சொந்தக்காரராக இருக்கும் ரகுமான், ஒருகாலத்தில் கஷ்டமான சூழ்நிலைகளை கடந்து வந்தவர் தான். அதன்படி, குடும்பத்தில் வருமானம் இல்லாத காலக்கட்டத்தில் தன் தந்தையின் இசைக்கருவிகளை வாடகைக்கு கொடுத்து வருமானம் ஈட்டி வந்தார். அப்பொழுது கிடைத்த சொற்ப வருமானத்தை வைத்து பியானோ, ஹார்மோனியம் மற்றும் கிதார் முதலிய இசைக்கருவிகளை வாசிக்க கற்று கொண்டார்.
இதையும் படிங்க: தமிழுக்காக சின்னம் உருவாக்கிய இசைப்புயல்..! டிஜிட்டல் படம் விரைவில் கட்டிடமாக மாறும் - ஏ.ஆர்.ரஹ்மான் நம்பிக்கை..!

அதன்பின், தன்ராஜ் மாஸ்டரிடம் முறைப்படி இசை கற்றுக் கொண்டார். தனது 11வது வயதில் 'இளையராஜா' இசைக்குழுவில் கீபோர்டு வாசிப்பதற்காக சேர்ந்து, பின்னர் எம். எஸ். விஸ்வநாதன், ரமேஷ் நாயுடு, ஜாகீர் உசேன் மற்றும் குன்னக்குடி வைத்தியநாதன் உள்ளிட்ட பல இசையமைப்பாளர்களிடம் பணியாற்றி தன்னுடைய திறமையை வளர்த்து கொண்ட ஏ.ஆர்.ரஹ்மான், முறையாக டிரினிட்டி காலேஜ் ஆப் மியூசிக் கல்லூரியில் கிளாசிக்கல் மியூசிக்கில் பட்டம் பெற்றார்.

இதனை அடுத்து, 1992ம் ஆண்டு தனது வீட்டிலேயே "மியூசிக் ரெக்கார்டிங் தியேட்டர்" அமைத்த ஏ.ஆர்.ரஹ்மான், சினிமாவில் இசைப்பயணத்தை தொடங்க காரணமாக இருந்தவர் இயக்குநர் மணிரத்தினம். இவரது இயக்கத்தில் வெளிவந்த 'ரோஜா' திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். இப்படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமான ஏ.ஆர்.ரஹ்மானின் இசை மக்களுக்கு பிடித்து போக அதன்பின், இந்தி, தமிழ், ஆங்கிலம் என பல மொழி திரைப்படங்களுக்கு இசையமைத்து "இசைப்புயல்" என்ற பட்டத்தை மக்களிடம் இருந்து பெற்றார்.

அதன்பின், இவரது உழைப்புக்கு பலனாக, ஆஸ்கார் விருது, கோல்டன் குளோப் விருது, பாஃப்டா விருது, தேசியத் திரைப்பட விருது போன்ற பல புகழ் பெற்ற விருதுகளைப் பெற்றார். மேலும் "ஸ்லம் டாக் மில்லியனியர்" என்ற ஆங்கிலத் திரைப்படத்திற்கு இசையமைத்தமைக்காக ஆஸ்கார் விருதும், 2008 ஆம் ஆண்டுக்கான கோல்டன் குளோப் விருதும், பாஃப்டா விருதும் பெற்றார். அதுமட்டுமல்லாமல் இந்த இரண்டு விருதுகளைப் பெற்ற முதலாவது இந்தியர் என்ற பெருமையையும் தட்டி சென்றவர் ஏ.ஆர்.ரஹ்மான். இதனை தொடர்ந்து, 2010-ஆம் ஆண்டில் இந்திய அரசின் "பத்ம பூசண் விருது" இவருக்கு அளிக்கப்பட்டது.

இந்நிலையில், கடந்த 2023ம் ஆண்டு இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில், விக்ரம், ரவி மோகன், கார்த்தி, திரிஷா, ஐஷ்வர்யா ராய் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த திரைப்படம் தான் "பொன்னியின் செல்வன் 2". இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் தான் இசையமைத்தார். இந்த படம் எப்படி மக்கள் மத்தியில் ஹிட் கொடுத்ததோ அதே போல் இந்த படத்தில் வந்த பாடல்களும் மக்கள் மத்தியில் ஹிட் கொடுத்தது.
இந்நிலையில் இப்படத்தில் இடம் பெற்ற 'வீரா ராஜ வீரா' பாடல் மக்கள் அனைவருக்கும் பிடித்த என்பதால் தற்பொழுது இந்த பாடலின் பெயர் கோர்ட் வரை ஒலித்துள்ளது. இந்த பாட்டின் மீதான காப்புரிமை வழக்கை பாடகரான ஃபையாஸ் வசிஃபுதின் டகர் கடந்த 2023 ம் ஆண்டு தொடுத்தார்.

இதற்காக காரணமாக ஃபையாஸ் வசிஃபுதின் டகர் தெரிவிக்கையில், 'வீரா ராஜ வீரா' பாடல் அவர் தந்தை ஃபையாசுதின் டகர் மற்றும் மாமா ஸாஹிருதின் டகர் இசையமைத்த 'சிவ துதி' பாடலில் இருந்து இசையமைப்பட்டுள்ளதாக தனது குற்றச்சாட்டை முன் வைத்தார். இந்த சூழலில் இந்த வழக்கை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்றம் படத்தின் தயாரிப்பாளர் ஜூனியர் டகர் பிரதர்சுக்கு ரூ.2 கோடியை ரகுமான் அபராதமாக கொடுக்க வேண்டும் எனவும் படத்தில் அவர்களுக்கு கிரெடிட் கொடுக்க வேண்டும் எனவும் தீர்ப்பளித்தது.

இப்படி இருக்க, விசாரணையின்போது 'சிவா ஸ்துதி' பாடலால் ஈர்க்கப்பட்டு அதன் உந்துதலால் தான் ‘வீர ராஜா வீரா’ பாடல் இயற்றப்பட்டதாக ஏ.ஆர்.ரஹ்மான் தரப்பில் இருந்து விளக்கம் கொடுக்கப்பட்டதாக உத்தரவின்போது நீதிமன்றம் பதிவு செய்தது.
இதையும் படிங்க: மனைவிமார்களுடன் நடுவில் மாற்றி நின்ற அஜித்- சிவா... ஆபாசப்படுத்திய சிவாஜி கி.மூ..!