தமிழில், ரசிகர்களுக்கு மிகவும் விறுவிறுப்பை கொடுத்த படம் என்றால் அது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், விஜய் சேதுபதி , நவாசுதீன் சித்திக் , சசிகுமார், சிம்ரன், த்ரிஷா கிருஷ்ணன், மேகா ஆகாஷ், மாளவிகா மோகனன் , மகேந்திரன், பாபி சிம்ஹா, குரு சோமசுந்தரம், ஆடுகளம் நரேன், முனிஷ்காந்த், விவேக் சனந்த் ஆகியோர் நடிப்பில் வெளியான மெகா ஹிட் திரைப்படமான "பேட்ட".
இத்திரைப்படத்தை யாராலும் மறக்க முடியாது. அதே போல் இப்படத்தை இயக்கிய, கார்த்திக் சுப்புராஜை தெரியாதவர்களும் யாரும் இருக்க முடியாது. இவரது இயக்கத்தில் உருவாகும் படங்களில் இசைகள், விஷுவல் காட்சிகள், மற்றும் லைட்டிங் காட்சிகள் என அனைத்தும் அருமையாக இருக்கும்.

இப்படி படங்கள் என்றால் வெறித்தனமாக எடுக்க நினைக்கும் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜின் இயக்கத்தில் உருவாகி இருக்கும் "ரெட்ரோ" படத்தில் கதாநாயகனாக நடித்து இருக்கிறார் நடிகர் சூர்யா. இப்படம் சூர்யாவின் 44வது படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் இப்படத்தின் எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது.
மேலும், இப்படத்தில் நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்திருப்பது கூடுதல் ட்ரீட்டாக உள்ளது.ஏற்கனவே, ரெட்ரோ படத்தின் இரண்டு பாடல்கள் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், மே மாதம் 1ம் தேதி படம் வெளியாகும் என்ற அப்டேட்டை Ghibli ஸ்டைலில் கார்த்திக் சுப்புராஜ் மற்றும் சூர்யா இருவரும் வீடியோவாக கொடுத்தனர்.
இதையும் படிங்க: ரெட்ரோ படத்திற்கு சூர்யா ஹீரோ அல்ல.. இவர் தான்..! கார்த்திக் சுப்பராஜின் மாஸ் அப்டேட்..!

இப்படத்தை குறித்து அவ்வப்போது அப்டேட்களை கொடுத்து வரும் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ், சமீபத்தில், இந்த படம் கேங்ஸ்டர் படமாக இருக்காது. குறிப்பாக 'ரெட்ரோ' படம் என்பது ஒரு காலகட்டத்தை குறிக்கும் சொல். இந்தப் படத்தின் கதையும் 1990களில் நடக்கின்ற ஒரு 'காதல் கதை' என்பதால் இப்படத்திற்கு இந்த தலைப்பை வைத்துள்ளோம். இது நீங்கள் நினைப்பதை போல் கேங்ஸ்டர் படம் அல்ல. அழகான காதல் படம். ஆதலால் இப்படத்தில் ஆக்ஷனும் உண்டு, மகிழ்ச்சியான தருணங்களும் உண்டு.

மேலும், ரெட்ரோ படத்தில் சூர்யா, "பாரிவேல் கண்ணன்" என்ற கேரக்டரில் நடிக்கிறார். கதை பல இடங்களில் நடப்பதால் பல தோற்றங்களில் அவர் வருவார். படத்தில் கோபம், அடிதடி என்று வாழ்ந்து, தனக்கான இலக்கு என்ன என்று தெரியாமல் ஓடும் இளைஞன் வாழ்க்கையில் ஒரு பெண் வரும்போது, அந்தப் பெண்ணின் அன்பாலே அவன் தன்னை முற்றிலும் மாற்றிக் கொள்வதும், அந்தப் பெண்ணுக்காக வரும் பெரிய பிரச்சனையை தீர்த்து வைப்பதுமான மிரளவைக்கும் கதை. என தெரிவித்து இருந்தார்.

இதனை அடுத்து, ரெட்ரோ படத்தின் இசை வெளியிட்டு விழாவில் பூஜா ஹெக்டே மற்றும் சூர்யா இருவரும் படத்தை குறித்து பெருமையாக பேசினார்கள், கார்த்திக் சுப்புராஜும் உண்மையில் இந்த படம் முதலில் "ரஜினி"காக எழுதியது. ஆனால் சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக அது அப்படியே மாறி மாறி கடைசியில் சூர்யா சாருக்கு ஏற்றார் போல் உருவானது. ஆதலால் சூர்யாவை இந்த படத்தில் நடிக்க வைத்தேன் என கூறியிருந்தார். இந்த நிலையில், படத்தின் ட்ரெய்லரை பார்த்த ரசிகர்கள் படத்தின் வெளியிட்டு தேதியான "மே 1ம் தேதி"க்காக காத்து கிடக்கின்றனர்.

இந்த சூழலில், இந்த முறை படம் வெளியாக மூன்று நாட்களே உள்ள நிலையில் படம் குறித்த அடுத்த அப்டேட்டை கொடுத்து இருக்கிறார் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ். அதன்படி சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய அவர், "ரெட்ரோ' உண்மையில் ஒரு காதல் கதை. அது தான் இந்த படத்தின் மையமாக உள்ளது. எனது முந்தைய படங்களை கணக்கிட்டு பார்த்தால், என்றுமே உணர்வு பூர்வமான கதையாக தான் இது இருக்கும்.
ஆனால் இந்த முறை, எனது படம் காதல் சார்ந்த அருமையான படமாக இருக்க வேண்டும் என்று நான் விரும்பினேன். ஆனால் அது ஒரு ஆணுக்கும், பெண்ணுக்கும் இடையிலான காதல் கதையாக மட்டும் இருக்க கூடாது, அது சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும் சக்தி வாய்ந்த காதல், கதையாக இருக்க வேண்டும் என நினைத்தேன். ஆக, இந்த படத்தில் சூர்யாவின் கதாபாத்திரம் நன்றாக இருக்கும், ஒரு காலத்தில் மக்கள் அனைவரும் பயந்த ஒரு கேங்ஸ்டராக இருந்த சூர்யா, அதிலிருந்து வெளியே வர முயற்சிக்கிறார் ஆனால் முடியவில்லை. இதனை அடுத்து, சூர்யா காதலில் விழும்போது ஒரு விதமான புத்துணர்ச்சியை பெறுகிறார்.

மேலும் வாழ்க்கையில் அமைதி என்பது எப்படி இருக்கும் என்று துளி கூட தெரியாத ஒரு சிறந்த மனிதரை பற்றிய கதையாக இந்த கதை இருக்கும். இந்த படத்தில் அதிரடித்தனத்தைக் காட்டுவது எளிது. ஆனால், காதலை உண்மையானதாக உணர வைப்பது தான் சவாலாக இருக்கும் எனவே அதைப் பெறுவது தான் கடினம், அதற்காக தான் உழைத்து உள்ளேன்" என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: சூர்யாவா இப்படியெல்லாம் பேசுறாரு..! இசை வெளியீட்டு விழாவில் நடிகர் பேசிய வீடியோ வைரல்..!