தமிழ் சினிமாவில் ஹரோக்களுக்கு ஹீரோயின்கள் இருக்கிறார்களோ இல்லையோ கண்டிப்பாக காமெடிக்கு சந்தானம் இருக்க வேண்டும் என்ற காலத்தை மீண்டும் மக்கள் மனதில் கொண்டு வந்த படம் சுந்தர் சியின் மத கஜ ராஜா, இந்த படத்தை பார்த்த பின் நடிகர் சந்தானம் ஹீரோவாக நடித்தாலும் ஓரிரு படங்களில் ஆர்யா மற்றும் சிம்புவுடன் மீண்டும் நடித்தால் நன்றாக இருக்கும் என்ற குரல் தமிழ்நாடு எங்கும் ஒலித்துவருகிறது. மேலும், நடிகர் சந்தானம், பல முன்னணி நடிகர்களுடன் காமெடியனாக பல படங்களில் நடித்த வடிவேலுவையே பின்னுக்கு தள்ளியவர்.

இப்படி இருக்க, நடிகர் சந்தானத்தின் ஆரம்ப வாழக்கை லொள்ளு சபாவில் தொடங்கியது. இதனை அடுத்து அவரது நகைச்சுவை திறமைக்கு பலனாக எஸ்.டி.ஆரின் "காதல் அழிவதில்லை"படத்தின் மூலம் முன்னணி நடிகராக அறிமுகமானார். ஆனால் பெரிதும் அப்படம் பேசப்படவில்லை என்றாலும், 2004 ஆம் ஆண்டு சிம்புவின் 'மன்மதன்' திரைப்படத்தில் நடித்து தனது காமெடி கதாபாத்திரத்திற்கு தனி இடத்தை உருவாக்கினார்.
பின் சிம்புவுடன் வல்லவன், காளை, சிலம்பாட்டம், வானம் மற்றும் ஒஸ்தி போன்ற படங்களில் ஹிட் கொடுத்தார். அதனை தொடர்ந்து சிறுத்தை,சிவா மனசுல சக்தி, பாஸ் என்கிற பாஸ்கரன் மற்றும் ஒரு கல் ஒரு கண்ணாடி, என பல படங்களில் இவரது நடிப்பும் இவரது காமெடியும் இல்லாமல் இருந்ததில்லை. இதனை தொடர்ந்து தற்பொழுது டிடி ரிட்டன்ஸ், வல்லவனுக்கு புல்லும் ஆயுதம், இங்கு நான் தான் கிங்கு, குளு குளு, சபாபதி என பல படங்களில் நடித்து ஹீரோவாக வலம் வந்து கொண்டு இருக்கிறார்.
இதையும் படிங்க: இணையத்தை கலக்கும் த்ரிஷா - சிம்புவின் லேட்டஸ்ட் போட்டோஸ்!

இந்த சூழலில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் இயக்குநர் பிரேம் ஆனந்த் இயக்கத்தில் சந்தானம் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘டிடி ரிட்டர்ன்ஸ்’. ஹாரர் மற்றும் காமெடி படமாக பார்க்கப்பட்ட இந்தப் படத்தில் சுரபி, ரெடின் கிங்ஸ்லி, ‘லொள்ளு சபா’ மாறன், மொட்ட ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்தனர். இந்தப் படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதன் அடுத்த பாகம் எப்பொழுது வெளியாகும் என ரசிகர்களை கூறிவந்த விலையில், சமீபத்தில் அதற்கான அறிவிப்பு வெளியானது.
அதன்படி, ‘டிடி நெக்ஸ்ட் லெவல்’ படத்தை இயக்குனர் பிரேம் ஆனந்த் இயக்கியுள்ளார். இந்த படத்தில் நடிகர் சந்தானத்துடன் இணைந்து கௌதம் வாசுதேவ் மேனன், செல்வராகவன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அனைவரும் எதிர்பார்த்த இந்த படம் மே 16ம் தேதி அனைத்து திரையரங்குகளிலும் வெளியாக உள்ளது. இதனால் இப்படத்தை காண மக்கள் ஆவலுடன் இருக்கின்றனர்.

இதனை தொடர்ந்து, மக்களின் விருப்பத்திற்கு ஏற்ப நடிகர் ஆர்யாவுடன் இணைந்து ஒரு படத்தில் நடித்து வருகிறார் நடிகர் சந்தானம். இந்த படம் எப்பொழுது வெளியாகும் என ரசிகர்கள் ஆவலாக உள்ளநிலையில், தற்பொழுது நடிகர் சிம்பு உடன் படம் நடிக்க உள்ளதாக சந்தானம் தெரிவித்து இருப்பது ரசிகர்கள் மத்தியில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி, டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் பார்க்கிங் படத்தின் இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் வசூல் ராஜா MBBS திரைப்படத்தை போல், கமெர்ஷியல் கலந்த ஜாலி திரைப்படமாக உருவாகி வரும் STR49 படத்தில் சிம்பு நடித்து வருகிறார்.

பத்து வருடங்கள் கழித்து இந்த படத்தில் நடிகர் சிம்புவுடன் சந்தானம் காமெடியனாக நடிக்க இருப்பதாக கூறப்பட்ட நிலையில், தான் நடிக்கும் இனிப்பு செய்தியை செய்தியாளர்கள் மத்தியில் கூறியுள்ளார் நடிகர் சந்தானம். அவர் கூறுகையில், நான் 'STR 49' திரைப்படத்தில் சிம்புவுடன் நடிக்கிறேன். காரணம், திடீரென ஒரு நாள் சிம்புவிடம் இருந்து எனக்கு கால் வந்தது. என்னவாக இருக்கும் என நினைத்து பேசியபோது, என்னுடைய அடுத்த திரைப்படத்தில் உங்களால் நடிக்க முடியுமா? என கேட்டார்.

என்னால் சிம்புவுக்கு மறுப்பு தெரிவிக்க முடியவில்லை. ஏனெனில் என் சினிமா பயணத்தின் தொடக்க காலத்தில் சிம்பு எனக்கு அதிகமான உதவிகளை செய்துள்ளார். நான் STR 49 படத்தில் நடிக்கும் அதே நேரத்தில் மற்றொரு படத்தில் நாயகனாக நடிக்க ஒப்பந்தம் ஆகியிருந்தேன், ஆனால் இந்த படத்தில் நடிப்பதால் அதை நான் கொஞ்சம் ஒத்தி வைத்துள்ளேன். இதனால் அந்தப்பட தயாரிப்பாளரிடம் மனதார மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். STR 49 படத்தில் எங்கள் இருவரின் காம்போ நீங்க நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு மிக பிரம்மாதமாக இருக்கும்" என கூறியுள்ளார்.
இதையும் படிங்க: தக்லைஃப் பட ஹரோயின்கள் மேல் வருத்தப்பட்ட கமல்ஹாசன்..! மேடை பேச்சால் அதிர்ந்த மணிரத்தினம்..!