ஒரு காலத்தில் உனக்கு எந்த மாதிரி பொண்ணு வேண்டும் என கேட்டால் எனக்கு சிம்ரன் மாதிரி ஒல்லியா அழகா பெண் வேண்டும் என பல ஆண்கள் கூறும் வண்ணம் இருந்தது. அந்த வகையில் சிம்ரனை யாராலும் மறக்க முடியாது. அவரது நடிப்பில் வந்த 'பேட்ட' படத்தில் ரஜினிக்கு ஜோடியாக சிம்ரனை பார்த்த பொழுது மக்கள் அனைவரும் மகிழ்ச்சியில் உறைந்து போயினர்.
அதேபோல் "குட் பேட் அக்லி" படத்திலும் நடிகர் அஜித்துக்கு முன்னாள் காதலியாக வந்து, தற்பொழுது உள்ள பல இளசுகளின் மனதையும் கொள்ளையிட்டு சென்றுள்ளார். மேலும் இப்படத்தில் வந்த "தொட்டு தொட்டு பேசும் சுல்தானா" பாடலை கேட்டதில் இருந்து இணையத்தில் சிம்ரன் ஆடிய நடனத்தை பார்க்க வரும் கூட்டமும் பெருகியுள்ளது.

இப்படி பட்ட சிம்ரன் தமிழ் திரையுலகில் 1997ம் ஆண்டு வெளியான "ஒன்ஸ்மோர்" என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர். இதனை அடுத்து நடிகை சிம்ரன் தமிழில் பல படங்களில் நடிக்க அவருக்கென தனி ரசிகர்கள் பட்டாளமே உருவானது. மேலும், 2000-ம் ஆண்டு காலகட்டத்தில் தமிழ் திரையுலகில் ஒரு படத்திற்கு ரூ.75லட்சம் சம்பளம் வாங்கிய முதல் நடிகையும் இவர் தான். இதனை அடுத்து, தமிழ் திரையுலகில் மட்டும் 10 விருதுகளை இதுவரை வென்றுள்ளார். மேலும், 4 பிலிம்பேர் விருதுகளையும் பெற்றுள்ளார்.
இதையும் படிங்க: கேமராவுக்கு பின் நடிகர்களின் கோர முகம்..! ஹீரோக்கள் மீது மாளவிகா மோகனன் குற்றச்சாட்டு..!

மும்பையில் பிறந்து வளர்ந்த சிம்ரன் தமிழில் இதுவரை, ஒன்ஸ்மோர், நேருக்கு நேர், அவள் வருவாளா, கொண்டாட்டம், நட்புக்காக, ஜோடி, துள்ளாத மனமும் துள்ளும், வாலி, உன்னை கொடு என்னை தருவேன், பிரியமானவளே, 12 B, பார்த்தாலே பரவசம் , பஞ்சதந்திரம், பம்மல் கே. சம்பந்தம், ரமணா, கன்னத்தில் முத்தமிட்டாள், யூத், கோவில்பட்டி வீரலட்சுமி, உதயா, பிதாமகன், நியூ, ஆய்த எழுத்து, நம் நாடு, சத்தம் போடாதே, சேவல், வாரணம் ஆயிரம், ஐந்தாம் படை, தநா -07 அல 4777, பேட்ட, பாவ கதைகள், மகான், ராக்கெட்ரி: நம்பி விளைவு, கேப்டன், அந்தகன், குட் பேட் அக்லி, உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

இந்த நிலையில், சிம்ரன் நடிப்பில் வெளியாக உள்ள 'டூரிஸ்ட் ஃபேமிலி' படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியானது. இந்த ட்ரெய்லரை பார்த்த பலருக்கும் படம் பிடித்து போக, தற்பொழுது படத்தின் வெளியீட்டுக்காக காத்துகொண்டு இருகின்றனர். இப்படத்தின் அறிமுக விழாவில் பேசிய நடிகர் சிவகுமார், ஒரு படம் நடிப்பதற்கு முன்பு கண்டிப்பாக நன்றாக வரும் என்கின்ற 100 சதவீத நம்பிக்கையில் தான் படம் செய்கிறோம்.
ஆனால் அதே நம்பிக்கை, ஊக்கம், ரசிகர்களிடமிருந்து வரும்போதுதான் அது மனதிற்கு நிறைவாகிறது. பள்ளி கல்லூரிகளில் தேர்வு எழுதிவிட்டு ரிசல்ட்டுக்காக காத்திருக்கும் மாணவனை போல இந்த படத்தின் ரிசல்ட்டுக்காக மே-1ம் தேதி வரை நாங்கள் அனைவரும் காத்திருப்போம்.

இந்த படத்தின் இயக்குனருக்கு வயது என பார்த்தால் வெறும் 24 வயதுதான். அதனாலேயே தயாரிப்பாளர்கள் முதல் எல்லோரும் பயந்தார்கள். ஆனால் நான் தான் வயது முக்கியமில்லை, கதைதான் முக்கியம் என்று நடிக்க ஒப்புக் கொண்டேன். 18 வயது பையனுக்கு அப்பாவாக நடிக்க எந்த ஹீரோவும் ஒப்புக் கொள்ள மாட்டார்கள் என்பது எனக்கு நன்றாக தெரியும். அதனாலேயே இந்த படம் எங்கு சென்றாலும் மீண்டும் என்னிடம்தான் வரும் என்று நம்பினேன் அப்படியே வந்தது.

எனக்கு ஜோடி சிம்ரன் என்றதும் எல்லோரும் ஆச்சர்யப்பட்டார்கள். பார்ப்பவர்கள் எல்லாரும் சிம்ரன் எப்படிங்க உங்க கூட நடிக்க சம்மதிச்சாங்க என்று கேட்கிறார்கள். ஏன் நான் சிம்ரனோடு நடிக்க கூடாதா. அந்த தகுதி எனக்கில்லையா என்ன? என்னைப்போலவே அவரும் கதையை நம்பித்தான் இந்த படத்திற்கு நடிக்க வந்தார். அவர் இப்போதும் ஹீரோயின்தான். இந்த படத்திலும் நான் ஹீரோ, அவர் ஹீரோயின் என கூறியிருந்தார்.

இதனை பற்றி அறிந்த நடிகை சிம்ரன், "இந்த படம் நல்ல குடும்ப கதையாக இருப்பதால் 'டூரிஸ்ட் பேமிலி' படத்தில் நடிக்க உடனடியாக சரி என்று கூறிவிட்டேன். மற்றொரு காரணம், இயக்குனரும் நடிகருமான சசிகுமார். அவர் ஒரு மிகப்பெரிய இயக்குனர் மற்றும் நடிகர். அவருடன் நடிப்பது எனக்கு பெருமை தான். அதைவிட நீண்ட நாள் ஆசை என்றே சொல்லலாம். சினிமாவை நீங்கள் தான் பிரித்து பார்க்கிறீர்கள்.

உண்மையில், சினிமாவில் ஜூனியர், சீனியர் என்ற பேதம் இல்லை, அப்படி இருக்கவும் கூடாது. திறமைக்கு தான் இங்கு முதலிடம். அந்த வகையில் சசிகுமாருடன் இணைந்து நடித்ததை எனது வாழ்நாள் அதிர்ஷ்டம் என்று தான் சொல்வேன். இனி அடுத்தடுத்து குடும்ப சென்டிமெண்ட் கதைகளில் பெரும்பாலும் நடிக்க திட்டமிட்டுள்ளேன். அதேபோல இனி வரும் காலங்களில் சண்டைபோடும் ஆக்சன் வேடங்களில் நடிக்கவும் ஆசைப்படுகிறேன்.

இந்த நிலையில், கொஞ்ச நாள் நடிப்புக்கு லீவு விடுகிறேன். காரணம் தற்போது லண்டனில் உள்ள எனது மூத்த மகன் படிப்பு சம்பந்தமாக அவருக்கு உதவியாக இருக்கிறேன். விரைவில் இந்தியா திரும்புவேன். வந்த பின்பு அடுத்தடுத்த படப்பிடிப்புகளில் நடித்து கலக்குவேன் என தெரிவித்தார்.
இதையும் படிங்க: 'வீரா ராஜ வீரா' பாடலுக்கான மெட்டுக்களை எடுக்க இதுதான் காரணம்..! ஏ.ஆர் ரகுமான் தரப்பு விளக்கம்..!