தமிழ் சினிமாவில் அனைவரது அன்பையும் பாராட்டையும் பெற்றவர் தான் தளபதி விஜய். இன்று அவர் கோடான கோடி ரசிகர்களை தன் வசம் வைத்திருக்க காரணம் ஒருவர் என்றால் அவர் தான் எஸ்.ஏ.சந்திரசேகர்.
இவர் பல சிறந்த இயக்குனர்களுக்கு மத்தியில் 'புரட்சி இயக்குனர்' என்று அழைக்கப்படுபவர். சினிமாவில் தயாரிப்பாளராக, இயக்குனராக, நடிகமராக தனது திறமையை இன்றும் வெளிப்படுத்தி வருகிறார் எஸ்.ஏ.சந்திரசேகர்.

இவரது சினிமா பயணத்தை குறித்து சற்று அலசி பார்த்தால், ராமநாதபுரத்தில் உள்ள தங்கச்சிமடத்தில் பிறந்த எஸ்.ஏ.சந்திரசேகர். தனது படிப்பை முடித்துவிட்டு சென்னையில் அரசாங்க வேளையில் பணிபுரிந்து வந்தார். நல்ல வருமானம் வந்தபோதிலும் சினிமா மீதுள்ள ஆர்வம் அவரை வருடி இழுத்தது. இதனால் எம்.ஜி.ஆர் நடிப்பில் வெளிவந்த 'எங்க வீட்டு பிள்ளை' திரைப்படத்தில் சவுண்டு இன்ஜினியராக தனது திரையுலக பயணத்தை ஆரம்பித்தார்.
இதையும் படிங்க: ஸ்டைலிஷ் தமிழச்சியாக மாறிய 'சிறகடிக்க ஆசை' சீரியல் நாயகி கோமதி ப்ரியா!

அதன்பின், இயக்குனர் டி.என்.பாலுவிடம் உதவி இயக்குனராக சேர்ந்த சந்திரசேகர், அவருடன் இணைந்து எங்க வீட்டு பிள்ளை, ஆசைமுகம், நான் ஆணையிட்டால், மனசாட்சி, அஞ்சல் பெட்டி 520, வசந்த மாளிகை, எங்கள் தங்க ராஜா, திருமாங்கல்யம், உத்தமன் உள்ளிட்ட படங்களில் பணிபுரிந்து தன்னை இயக்குனராக தயார் செய்து கொண்டார்.
இதனை அடுத்து இயக்குனராக களமிறங்கிய சந்திரசேகர் 'அவள் ஒரு பச்சை குழந்தை' என்ற படத்தை எடுத்து தமிழ் சினிமாவில் இயக்குனர்கள் பட்டியலில் இடம்பெற்றார். இதனை தொடர்ந்து சட்டம் ஒரு இருட்டறை, நான் சிகப்பு மனிதன், சட்டம் ஒரு விளையாட்டு, வெற்றி, நீதிக்கு தண்டனை, தோஸ்த், முத்தம் என இதுவரை 70 பதிற்கும் மேற்பட்ட சூப்பர்ஹிட் படங்களை இயக்கியுள்ளார்.

இப்படி இருக்க, தமிழ் சினிமாவில் ஒளிப்பதிவாளராக இருந்து இயக்குனராக மாறிய தங்கர் பச்சானை தெரியாதவர்கள் இருக்க முடியாது, இவர் தனது மகன் 'விஜித் பச்சானை' கதாநாயகனாக அறிமுகப்படுத்தும் விதமாக 'டக்கு முக்கு டிக்கு தாளம்' என்கிற படத்தை இயக்கினார். ஆனால் ஒரு சில காரணங்களால் அந்த படம் வெளியாகமல் தடையாகி வருகிறது.
இந்த நிலையில், இயக்குனர் சிவப்பிரகாஷ் என்பவர் இயக்கியுள்ள 'பேரன்பும் பெருங்கோபமும்' என்கிற படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார் விஜித் பச்சான். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நடிகர் எஸ்.ஏ சந்திரசேகர் தனது அனுபவங்களை மக்களிடம் பகிர்ந்து கொண்டார்.

அவர் பேசுகையில், "தங்கர் பச்சானின் படங்களை திரைப்படங்களாக நாம் பார்ப்பதில்லை மாறாக காவியங்களாக தான் நாம் பார்த்திருக்கிறோம். அப்படிப்பட்டவர் தன் பையனை அறிமுகப்படுத்த நினைக்கும் போது அவரை முதலில் நிறைய செதுக்க வேண்டும்... அந்த பொறுப்பை இன்னொரு இளைஞரிடம் ஒப்படைப்பது என்பது சாதாரண விஷயம் அல்ல... நான் கூட அதைத்தான் நினைத்தேன்.. ஆனால் அது நடக்கவில்லை.

90காலகட்டங்களில் நான் பிஸியாக இருந்தபோது, என் மகன் விஜய் நடிக்க வேண்டும் என அதிகமாக ஆசைப்பட்ட நேரத்தில், நம் மகனுடைய படத்தை நாமே டைரக்ட் செய்தால் நன்றாக இருக்காது என நினைத்து விஜய்யின் ஆல்பத்தை வைத்துக்கொண்டு எத்தனையோ இயக்குனர்களிடம் போய் கால்கடுக்க நின்றேன். ஆனால் ஒருவரும் எனக்கு உதவி செய்ய முன்வரவில்லை.
அதனால் வேறு வழியின்றி நானே அந்த படத்தை இயக்கினேன்.. ஆனால் தங்கர் பச்சான் புத்திசாலி, இளைஞனான தன் மகன் முதல் படத்திலேயே ரசிகர்கள் மத்தியில் போய் நன்கு ஒட்டிக்கொள்ள வேண்டும் என்றால், அவரை இன்னொரு இளைஞன் கையில் கொடுத்து இயக்கினால் தான் சரியாக இருக்கும் என நினைத்து தன் மகனை ஒப்படைக்க முடிவு எடுத்த தங்கர் பச்சான் தான் புத்திசாலித்தனமான தகப்பன்" என்று கூறினார்.
இதையும் படிங்க: ஸ்லிம் லுக்... இடையை வில்லாக வலைத்து சைடு ஆங்குளில் சிக்குன்னு போஸ் கொடுத்த ரஜிஷா விஜயன்!