மும்மொழிக் கொள்கை தொடர்பாக மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், தமிழ்நாடு அரசு இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. இந்நிலையில் பிஎம் ஸ்ரீ பள்ளிகளை நிறுவுவதற்கு தமிழ்நாடு அரசு ஒப்புதல் அளிப்பதாக அனுப்பிய கடிதத்தை வெளியிட்டு இருந்தார் தர்மேந்திர பிரதான்.
அதற்கு, பதிலளிக்கும் விதமாக, ''தவறான தகவல்களை பரப்புவதன் மூலம் உண்மைகளை மாற்றமுடியாது. கடந்த 2024ம் ஆண்டு மார்ச் 15ம் தேதி எழுதிய கடிதத்தில் தேசிய கல்விக் கொள்கையை ஏற்பதாக கூறவில்லை. குழு அமைக்கப்படும், அதன் பரிந்துரைப்படி திட்டத்தில் சேருவது பற்றி முடிவு என்றே கூறினோம். தமிழ்நாட்டின் கல்வி முன்மாதிரியானது. தவறான தகவலை பரப்புவதால் உண்மை மாறிவிடாது. தேசிய கல்விக் கொள்கையை தமிழ்நாடு தொடர்ந்து ஆரம்பம் முதலே எதிர்த்து வருகிறது. எங்கள் நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை. தமிழ்நாட்டின் கல்வி மாதிரியை குறைமதிப்பிற்கு உட்படுத்துவதால், தேசிய கல்விக் கொள்கையை எதிர்க்கிறோம்" என கூறி இருந்தார் அன்பில் மகேஷ் பொய்யாமொழி.

தேசிய கல்விக் கொள்கை குறித்து கடந்த 2024, மார்ச் மாதம் 8ம் தேதி தர்மேந்திர பிரதானை நேரில் சந்தித்து அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஒப்புக் கொண்டதாக கூறப்படுகிறது. சந்திப்பு நடந்த அன்றைய தினமே தர்மேந்திர பிரதான் இந்தச் சந்திப்பு குறித்து தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளப்பதிவில் இதனை பகிர்ந்து கொண்டிருந்தார். அதில், இருவரும் சந்தித்த இரு புகைப்படங்களை பகிர்ந்து, ''மாண்புமிகு தமிழ்நாடு பள்ளிக் கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியுடன் இன்று டெல்லியில் நல்ல சந்திப்பு.
இதையும் படிங்க: திமுக அரசின் நாடகம்... பாஜக எம்.பி-க்களுடன் டீல்: உண்மையை உடைத்த சீமான்..!

தமிழ்நாட்டில் பி.எம் ஸ்ரீ பள்ளிகளை செயல்படுத்துதல், தேசிய கல்விக் கொள்கைக்கு ஏற்ப கற்பித்தல், கற்றல் நிலப்பரப்பை வலுப்படுத்துதல், தமிழ் மொழியை மேம்படுத்துதல் குறித்து அர்த்தமுள்ள விவாதங்களை நடத்தினோம். அம்ரிட்பீதியை மேம்படுத்துவதும், 21 ஆம் நூற்றாண்டின் அறிவு மற்றும் திறன்களால் அவர்களை சித்தப்படுத்துவதும் பிரதமர் பிரதமர் மோடியின் உத்தரவாதமாகும். தமிழ்நாட்டில் மிகவும் துடிப்பான கற்றல் சூழலை உருவாக்கவும், வாய்ப்புகளின் கதவுகளைத் திறக்கவும், பிரகாசமான எதிர்காலத்தை வடிவமைக்கவும் மோடி அரசு உறுதிபூண்டுள்ளது'' எனத் தெரிவித்து இருந்தார்.
ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கென ஒன்றிய கல்வி அமைச்சகத்தின் திட்ட ஒப்புதல் குழுவால் (Project Approval Board) 2023-24 ஆம் கல்வியாண்டிற்கு ஒப்புதல் அளிக்கப்பட்ட நிதியில் 3வது மற்றும் 4வது தவணைத் தொகையான ரூ.1,138 கோடி இன்னும் முறையாக வழங்கப்படாமல் உள்ளது.… pic.twitter.com/JqOFHjdIhW
— Anbil Mahesh (@Anbil_Mahesh) March 8, 2024
இந்த பதிவை சுட்டிக்காட்டி அன்பில் மகேஷ் பொய்யாமொழியை பலரும் விமர்சித்து வருகின்றனர். '' சொல்லுங்கள் மகேஷ்... எதற்காக இந்தச் சந்திப்பு என்பதை விளக்க வேண்டும்'' என வலியுறுத்தி வருகின்றனர்.

அதே 2024, மார்ச் 8 தேதியில் அன்பில் மகேஷ் பொய்யமொழி தனது எக்ஸ் தளப்பதில் தர்மேந்திர பிரதானுடன் பேசியது என்ன? என்பதுகுறித்து பகிர்ந்துள்ளதையும் இப்போது திமுகவினர் பகிர்ந்து வருகின்றனர். அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் அந்தப்பதிவில், ''ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கென ஒன்றிய கல்வி அமைச்சகத்தின் திட்ட ஒப்புதல் குழுவால் 2023-24 ஆம் கல்வியாண்டிற்கு ஒப்புதல் அளிக்கப்பட்ட நிதியில் 3வது மற்றும் 4வது தவணைத் தொகையான ரூ.1,138 கோடி இன்னும் முறையாக வழங்கப்படாமல் உள்ளது.
ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கென ஒன்றிய கல்வி அமைச்சகத்தின் திட்ட ஒப்புதல் குழுவால் (Project Approval Board) 2023-24 ஆம் கல்வியாண்டிற்கு ஒப்புதல் அளிக்கப்பட்ட நிதியில் 3வது மற்றும் 4வது தவணைத் தொகையான ரூ.1,138 கோடி இன்னும் முறையாக வழங்கப்படாமல் உள்ளது.… pic.twitter.com/JqOFHjdIhW
— Anbil Mahesh (@Anbil_Mahesh) March 8, 2024
எனவே அந்தத் தொகையை விரைவாக தமிழ்நாடு அரசுக்கு வழங்கிடுமாறு மாண்புமிகு ஒன்றிய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானை இன்று டெல்லியில் சந்தித்து வேண்டுகோள் விடுத்தோம். அப்போது அரசுச் செயலாளர் குமரகுருபரன், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்ட இயக்குநர் ஆர்த்தி ஆகியோர் உடனிருந்தனர்'' என்கிற பதிவையும் பகிர்ந்து வருகின்றனர்
இதையும் படிங்க: 'தமிழை காட்டுமிராண்டி என்றவர்தான் உங்கள் இயக்கத்தின் அடையாளமா..? நிர்மலா சீதாராமன் நெத்தியடி..!