மாநகரம் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் லோகேஷ் கனகராஜ். பின்னர் கைதி, மாஸ்டர், விக்ரம் என அடுத்தடுத்து பிளாக்பஸ்டர் படங்களை கொடுத்து தற்போது முன்னணி இயக்குநர்களில் ஒருவராக திகழ்கிறார். அவர் கடைசியாக நடிகர் விஜய்யை வைத்து லியோ படத்தை இயக்கியிருந்தார். அந்த படம் பெரும் வரவேற்பை பெறவில்லை. இதை அடுத்து தற்போது ரஜினிகாந்தை வைத்து கூலி படத்தை இயக்கி வருகிறார்.

கூலி படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நாகார்ஜுனா, உபேந்திரா, செளபின் சாஹிர், சத்யராஜ், ஸ்ருதிஹாசன் மற்றும் பாலிவுட்டின் முன்னணி நடிகரான அமீர்கான் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தற்போது கூலி படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டதாக கூறப்பட்டது. இதை அடுத்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. ரஜினிகாந்த் அடுத்ததாக நெல்சன் இயக்கத்தில் நடிக்க ஆரம்பித்துவிட்டார்.
இதையும் படிங்க: 50-வது ஆண்டில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்.. அபூர்வ ராகங்கள் முதல் கூலி வரை..!

இந்நிலையில், கூலி படத்தின் புரமோஷன் பணிகளின் போது மீண்டும் சோஷியல் மீடியா பக்கம் வருகிறேன். இப்போதைக்கு சில மாதங்கள் சோஷியல் மீடியா பக்கம் வரமாட்டேன் என லோகேஷ் கனகராஜ் சற்றுமுன் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். இது ரசிகர்களை ஷாக் ஆக்கியுள்ளது. இந்த பதிவுக்கு முன்பு அவரது முதல் படத்தின் ஹீரோவான ஸ்ரீ பற்றி பதிவிட்டிருந்தார். அதில், நடிகர் ஸ்ரீயை கண்டு பிடித்து மருத்துவமனையில் சேர்த்துவிட்டோம். அவர் குணமாகி வருகிறார்.

அவரை பற்றிய அவதூறு கருத்துக்களையோ, தவறான தகவலையோ யாரும் பதிவிட வேண்டாம் என்றும் மீடியா மற்றும் யூடியூப் சேனல்களுக்கு லோகேஷ் கனகராஜ் கோரிக்கை வைத்திருந்தார். தொடர்ந்து ஸ்ரீ பற்றிய கேள்விகளை லோகேஷ் கனகராஜை டேக் செய்து நெட்டிசன்கள் கேட்டு வந்த நிலையில், தான் இப்படியொரு அறிவிப்பை லோகேஷ் கனகராஜ் வெளியிட்டுள்ளாரா? என்கிற கேள்வி எழுந்துள்ளது.
இதையும் படிங்க: நாளை வெளியாகிறது கூலி படத்தின் புது அப்டேட்... உச்சகட்ட எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!!