சட்டப்பேரவையில் மட்டுமல்ல சோசியல் மீடியாக்களிலும் இரண்டு கட்சியினர் இடையே விவாதங்கள் தூள் பறப்பது உண்டு. குறிப்பாக சோசியல் மீடியாவில் ஒரு கட்சியினர் மற்றொரு கட்சியினரிடம் கேள்வி எழுப்பும் போது அடிமை அதிமுக, கொத்தடிமை திமுக, 200 ரூபாய் உ.பி’ஸ், திமுக கொத்தடிமை விசிக போன்ற நாகரீகமற்ற வார்த்தைகள் பயன்படுத்தப்படுவது வழக்கமானது. சில சமயங்களில் குறிப்பிட்ட கட்சிகளைச் சேர்ந்த தொண்டர்கள் பயன்படுத்தும் வார்த்தைகள் படிக்கவே முடியாத அளவிற்கு ஆபாசமாக இருக்கவும் கூடும்.

ஆனால் சோசியல் மீடியாவில் முதல் முறையாக இரண்டு எதிர் எதிர் கட்சியைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் மரியாதையாகவும், அறிவுப்பூர்வமாகவும் விவாதித்துள்ளது தமிழக அரசியலில் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி அக்கட்சியின் கடைக்கோடி தொண்டர்கள் வரை குனிந்து நின்று கும்பிட்டே பதவி வாங்கியவர்கள் என எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.
இதையும் படிங்க: எடப்பாடியின் இமேஜை டேமெஜ் செய்ய திட்டம்... செங்கோட்டையனை வைத்து ஸ்கெட்ச் போடும் பாஜக!

தமிழ்நாட்டின் முதல்வர் ஸ்டாலினை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், எம்.பியுமான திருமாவளவன் சந்தித்தார். அப்போது, முதல்வருக்கு முன்பிருந்த மூன்று இருக்கைகளில், ஒருபக்கம் திருமாவளவனும், மறுபக்கம் உதயநிதி ஸ்டாலினும் அமர்ந்திருந்த நிலையில், நடுவில் இருந்த இருக்கை காலியாக விடப்பட்டிருந்தது. இந்தப் புகைப்படத்தை தன் சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்த அதிமுக-வின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ``ஏன் இடைவெளி....?" எனக் கேள்வி எழுப்பிடியிருந்தார்.
அதற்கு பதிலளித்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலாளர் வன்னி அரசு, “மதிப்புமிகு அண்ணன் ஜெயக்குமார் அவர்களே நீங்கள் ஏற்றுக்கொண்ட தலைவர் முன் என்றைக்காவது இப்படி சமமாக அமர்ந்ததுண்டா? அதுவெல்லாம் ஒரு ‘கார்’ காலம். இன்றைய தலைவர் எடப்பாடியார் அவர்களோ அல்லது நீங்களோ இப்படி சமமாக அமர்ந்த புகைப்படங்களை பகிரும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்” என பதிவிட்டுள்ளார்.

இந்தப் பதிவுக்கு பதிலளித்துள்ள முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “அன்பிற்கினிய தம்பி வன்னியரசு அவர்களே... இதோ நீங்கள் கேட்ட புகைப்படங்கள்! திருமாவளவனின் அரசியல் அனுபவத்திலும்-பொதுவாழ்வால் அவருக்கு வந்த நெருக்கடிகளிலும் சிறிய பகுதியைக்கூட தன் வாழ்வில் உதயநிதி பார்த்திருக்க மாட்டார். கல்லூரி காலம் முதல் திருமாவளவனை பார்த்தவன் என்ற முறையில் இந்தக் கேள்வியை எழுப்பினேன்! விடுதலை சிறுத்தைகளே விரும்பாத செயல்களை தொடர்ந்து அரங்கேற்றி வரும் திமுக அரசை நோக்கி உங்கள் கேள்வி எழுப்புங்கள்! அதை தான் உங்கள் தொண்டர்களும் விரும்புவார்கள்!
மாறாக உதயநிதி போன்ற மன்னர் பரம்பரையின் வாரிசிற்காக எங்களை நோக்கி வசை பாட வேண்டாம்! எனக் குறிப்பிட்டுள்ளார்.
இருதரப்பினரும் ஒருவரை ஒருவர் வசை பாடிக்கொள்ளாமல் மரியாதையாக அண்ணன் ஜெயக்குமார், அன்பிற்கினிய தம்பி வன்னி அரசு என பதிவிட்டுள்ளதும், திமுக விசிகவை தரக்குறைவாக நடத்துவதை ஜெயக்குமார் கண்ணியமாகவும் பதிவிட்டுள்ளது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க: செங்கோட்டையனை ரகசியமாக சந்தித்த அந்த முக்கியப்புள்ளி... பேரத்தைத் தொடங்கியதா டெல்லி..?