கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் உள்ள அரசு பள்ளியில் 13 வயதுடைய சிறுவனும், 14 வயதுடைய 3 சிறுவர்களும் 9ம் வகுப்பு படித்து வருகின்றனர். இவர்களுக்கு அதே பகுதியைச் சேர்ந்த, படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு, கட்டிடவேலைக்கு சென்று வரும் 15 வயது சிறுவனுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்கள் 5 பேரும் கட்டட வேலை நடக்கும் பகுதிகளுக்கு சென்று அங்கே வீசப்படும் பழைய இரும்பு, பிளாஸ்டிக், அட்டைகளை விற்று கிடைக்கும் அதில் கிடைக்கும் பணத்தில் ஊர் சுற்றி வந்துள்ளனர். முறையான பெற்றோர் கவனிப்பு இல்லாமல் போனதால் அடிக்கடி சமூக விரோத செயல்களிலும் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது.

இந்நிலையில் வழக்கம்போல் கடந்த சனிக்கிழமை மதியம் இந்த சிறுவர்கள் 5 பேரும் பக்கத்தில் உள்ள கட்டிட வேலை நடக்கும் இடத்திற்கு சென்றுள்ளனர். கட்டட பணி நடந்து வரும் இடத்தில் இரும்பு கம்பி போன்றவை ஏதாவது திருட கிடைக்குமா என்று தேடி பார்த்துள்ளனர். இதனை கண்ட அதேபகுதியை சேர்ந்த 4 வது மற்றும் 5வது படிக்கும் இரண்டு சிறுமிகள் சிறுவர்களை விசாரித்துள்ளனர். அவர்களை நீண்ட நேரம் நோட்டம் விட்ட சிறுவர்கள், சிறுமியின் வீட்டில் யாரும் இல்லை என்பதை தெரிந்து கொண்டனர்.
இதையும் படிங்க: உச்சநீதிமன்றம் வரை சென்ற பஞ்சாயத்து...சூடு பிடிக்கும் சீமான் பாலியல் வழக்கு!!

இதையடுத்து அத்துமீறி சிறுமியின் வீட்டிற்குள் நுழைந்த அந்த சிறுவர்கள் ஒரு சிறுமியின் வாயில் துணியை திணித்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து 13 வயது சகோதரி சிறுவர்களைத் தடுக்க முயன்றுள்ளார். ஆனால் அவர்கள் அவரது கைகளைக் கட்டி வாயை அடைத்ததாகக் கூறப்படுகிறது. இரண்டு சிறுமிகளும் மயக்கமடைந்த நிலையில், மாடிக்கு தூக்கிச் சென்று சிறுவர்கள் அவர்களை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தி உள்ளனர். சிறுது நேரம் கழித்து பக்கத்து வீட்டில் இருப்பவர் மாடிக்கு சென்ற நிலையில், இரண்டு சிறுமிகளும் மயங்கிய நிலையில் கிடந்ததை பார்த்து அவர்களது பெற்றோர்க்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் நடந்த நேரத்தில், அவர்களது பெற்றோரில் ஒருவர் வேலையில் இருந்துள்ளார். மற்றவர் வெளியூரில் இருந்துள்ளார். சனிக்கிழமை மாலை ஊருக்கு வந்த அவரது தந்தை இதுகுறித்து அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து தேடுடல் வேட்டை நடத்திய போலீசார், னிக்கிழமை இரவு மூன்று சிறுவர்களையும் ஞாயிற்றுக்கிழமை மற்ற இருவரையும் கைது செய்தனர். அவர்கள் ஐந்து பேர் மீதும் போக்சோ சட்டத்தின் பிரிவு 7 (பாலியல் வன்கொடுமை) r/w 8 இன் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு ஞாயிற்றுக்கிழமை கிருஷ்ணகிரியில் உள்ள சிறார் நீதி வாரியத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பாலியல் தொல்லை சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. பல மாதங்களுக்கு முன் பள்ளி மாணவி ஒருவருக்கு போலி என்சிசி முகாமில் கொடுக்கப்பட்ட பாலியல் தொல்லையில் அளிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதைத் தொடர்ந்து அரசுப் பள்ளியில் மாணவி ஒருவர் ஆசிரியர்களால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவமும் அரங்கேறியது. பாலியல் தொல்லை, பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை என பல்வேறு சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவது பொதுமக்களை கலக்கமடைய செய்துள்ளது. இந்நிலையில் மக்கள், குழந்தைகள் தொடர்பான புகார்களை 1098 என்ற சைல்ட்லைன் மூலம் தெரிவிக்கலாம்.
இதையும் படிங்க: தமிழகமே பேரதிர்ச்சி... 3 வயது குழந்தையை சிதைத்த 17 வயது காமுகன்... செங்கலால் அடித்ததில் உயிருக்கு போராட்டம்...!