தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் கட்சி தொடங்கி ஓராண்டு நிறைவடைந்ததால், அதனை கொண்டாடும் வகையில் அறிக்கை வெளியிட்டுள்ளார். இரண்டாம் ஆண்டு தொடக்க நாள் நிகழ்ச்சியில் தனது கட்சியின் கொள்கை தலைவர்களின் மார்பளவு சிலையை பணியூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் விஜய் திறந்து வைத்தார்.
இரண்டாம் ஆண்டு தொடக்க நிகழ்வை ஒட்டி தனது தொண்டர்களுக்கு கடிதம் வழியாக அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளார். இதயம் மகிழும் தருணத்தில் உங்களோடு பேசவே இந்த கடிதம் என ஆரம்பித்து நீண்ட இரண்டு பக்க கடித அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

அதில், 'இன்று ஒரு வெற்றிப் பெரும்படையின் இரண்டாம் ஆண்டு தொடக்கம்.. ஆம் தமிழக வெற்றிக்கழகம் என்னும் அரசியல் பெரும்படையை கட்டமைத்து அதனை இந்த ஆண்டு பிப்ரவரி இரண்டாம் தேதியோடு ஓராண்டு நிறைவு பெறுகிறோம் மக்கள் இயக்கமாக மக்களுக்கான நலத்திட்டங்களை செய்து வந்த நாம் அரசியல் களத்தை கையாள தொடங்கி இதோ இப்போது இரண்டாம் வருடத்தின் வாயிலில் பயணிக்கத் தொடங்கியுள்ளோம்' என விஜய் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: பட்ஜெட் 2025: ஜன்னல், தாடி, மெழுகு வர்த்தி, ஏன்....'பேச்சலர்' வாழ்க்கைக்கும் வரி; சுவாரஸ்ய தகவல்கள்
மேலும் 'மக்களுக்கான அரசியலை மக்களோடு நின்று நாம் நடத்திக் கொண்டிருக்கிறோம். அதன் ஒரு பகுதியாக மாபெரும் மாநாட்டை நடத்தி அரசியல் களத்தில் அத்தனை திசைகளையும் அதிர வைத்தோம். இந்த ஓராண்டுக்குள் எத்தனை எதிர்ப்புகள் கடந்து இருப்போம், எதற்கும் அஞ்சாமல் எதைக் கண்டும் பதறாமல் நம் கருத்திலும் கருத்தியலிலும் நின்று நிதானித்து நேர்மையாக நடை போட்டு வருகிறோம்' என தெரிவித்துள்ளார்.

பரந்தூர் விமான நிலையத்திற்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருவதையும் மேலும் தவெ க கட்சியின் உட்கட்டமைப்பை உறுதிப்படுத்தி விரிவாக்கம் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் விஜய் தெரிவித்துள்ளார்.
அடுத்தாண்டு நடைபெறவிருக்கும் தமிழ்நாடு சட்டமன்ற பேரவைக்கான தேர்தலில் மக்கள் சக்தியுடன் நாம் கரம் கோர்த்து நமது வலிமையை நாட்டுக்கு பறைசாற்றி அதிகார பகிர்வுடன் (அதாவது கூட்டணி கட்சியுடன் சேர்ந்து) ஆகப்பெறும் ஜனநாயகப் பெரு நிகழ்வை தமிழகத்தில் உருவாக்கி காட்டப் போவதாகவும் அந்த அரசியல் வெற்றி நோக்கி நீங்கள் இப்போதே உழைக்கத் தொடங்க வேண்டும் என்றும் விஜய் தனது அறிக்கையில் விளக்கமாக கூறியுள்ளார்.
விஜய் தனது அறிக்கையில் அதிகார பகிர்வுடன் கூடிய ஜனநாயக பங்களிப்பு என்ற வார்த்தையை பயன்படுத்தி உள்ளதால் நிச்சயம் கூட்டணி கட்சியோடு தான் வரும் தேர்தலில் அவர் போட்டியிடுவார் என்ற விஷயத்தை மீண்டும் ஒருமுறை அழுத்தம் திருத்தமாக இந்த அறிக்கை வாயிலாக கூறி இருக்கிறார்.
இதையும் படிங்க: பெரியாரிஸ்டுகளே உடனே மன்னிப்பு கேளுங்க..! ரிவர்சில் வாங்கி அடிக்கும் சீமான்..