வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தென்மாவட்டங்களில் இன்று மிக கனமழையும், டெல்டா மாவட்டங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

பூமத்திய ரேகையை ஒட்டிய, வடகிழக்கு இந்திய பெருங்கடல், தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல், வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால், தமிழகத்தில் அனேக இடங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்காலில், இன்று இடி மின்னலுடன், மிதமான மழை பெய்யலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: அர்ஜென்டினா: பொத்துக்கிட்டு ஊத்தியதோ வானம்?.. 8 மணி நேரத்தில் கொட்டித்தீர்த்த 1 ஆண்டுக்கான 'பேய்' மழை..!
கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, துாத்துக்குடி மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ள தாகவும், இந்த மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலெர்ட் விடுக்கப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.

விருதுநகர், சிவகங்கை, மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களில், ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும், இன்று கனமழை பெய்யலாம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும், கன்னியாகுமரி, திருநெல்வேலி, துாத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில், நாளை கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும் மழை எச்சரிக்கை பட்டியலில் வராத, பிற மாவட்டங்களில், இன்றும், நாளையும், பகல் நேர வெப்பநிலை இயல்பை விட, 3 டிகிரி செல்ஷியஸ் வரை கூடுதலாக பதிவாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், வானம் ஓரளவு மேகமூட்டமாக காணப்படும் என்றும் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. எனவும் கூறப்பட்டுள்ளது.
மேலும், 13 மாவட்டங்களில் இன்று லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.

கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: உஷார் மக்களே! நண்பகலில் வெளியே போனால் உஷார்!!