ஒருவர் தன் வலைதள பக்கத்தில் எதை பதிவிட்டாலும் நெட்டிசன்களிடம் வாங்கி கட்டி கொள்வார் என்றால் அது பூனம் பாண்டே, ஆரம்பத்தில் இவரை ரசித்த ரசிகர்கள் இவர் செய்த செயலால் எப்போது பார்த்தாலும் திட்டியே வருகின்றனர். அந்த அளவிற்கு இரிட்டெட்டிங் நடிகையாக மாறி இருக்கிறார் பூனம் பாண்டே.

பூனம் பாண்டே, 2010 இல் ஒரு வடிவழகியாக (மாடலிங்) தனது வாழ்க்கையைத் தொடங்கி , "கிளாட்ராக்ஸ் மேன்கன்ட் அண்ட் மெகாமாடல்" போட்டியில் கலந்து கொண்டு அப்போட்டியின் முதல் ஒன்பது போட்டியாளர்களில் ஒருவரானார். இதனால் தனியார் பத்திரிகையின் அட்டைப் பக்கத்தில் தோன்றி சில ரசிகர்களை தன்வசப்படுத்தினார். பின் 2013 ஆம் ஆண்டு வெளிவந்த நாசா திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமாகி பலரது கவனத்தையும் ஈர்த்தார்.பின் உலகமே தன்னை பார்க்க வேண்டும் என தனது நிர்வாண வீடியோக்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு சர்வதேச அளவில் வேறு மாதிரி பாப்புலர் ஆனார்.
இதையும் படிங்க: கும்பமேளாவில் தமன்னா பட டீசர் ரிலீஸ்... இங்க தியேட்டர்ல ரிலீஸ்.. 'தேவசேனா' ரிட்டன்ஸ்..!

ஆனால் கிடைத்த ரசிகர்களை சரியாக பயன் படுத்த தெரியாத பூனம், ஐயா படத்தில், தான் இறந்தால் எத்தனை பேர் இறுதி சடங்கிற்கு வருகிறார்கள் என்பதை பார்க்க பிரகாஷ்ராஜ் எப்படி இறந்து போனது போல் நடித்து அனைவரையும் ஏமாற்றுவாரோ.. அதே போல் 2024 அன்று, கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயால் பூனம் பாண்டே இறந்துவிட்டதாக இவரது சமூக வலைதள பக்கத்தில் வெளியிடப்பட்டது. இதனால் ரசிகர்கள் கவலையில் இருக்க, அடுத்த நாள், இது நோய் பற்றிய விழிப்புணர்வுக்காக ஏற்படுத்திய நாடகம் என கூறி அன்பான ரசிகர்களை ஆக்ரோஷமான ரசிகர்களாக மாற்றிய பெருமையும் இவரையே சேரும். அதுமட்டும் அல்லாமல் தான் காதலித்து திருமணம் செய்துக் கொண்ட கணவர் "சாம் பாம்பே" ஹனிமூனில் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் அளித்து உலகில் தன்னை நேசித்த ஒருவரையும் விவாகரத்து செய்து சர்ச்சைகளில் சிக்கினார்.

இந்த நிலையில் மும்பையில் ரோட்டில் நின்று போட்டோவுக்கு போஸ் கொடுத்து கொண்டிருந்த பூனம் பாண்டேவை பார்த்த ரசிகர், என்ன நினைத்தாரோ தெரியவில்லை திடீரென ஒரு செல்பி என கேட்க, பாண்டே போட்டோ தான எடுத்துக்கப்பா என அனுமதித்து உள்ளார். தூரத்தில் இருக்கும் வரை அம்பியாக இருந்த ரசிகர், அவர் அருகில் நிற்கும் போது சட்டென ரெமோவாக மாறி முத்தம் கொடுக்க பாய்ந்தார். இதனால் அதிர்ச்சியான பாண்டே ஒரு நொடியில் "கங்கா சந்திரமுகியாக மாறுவதை போல்" மாறி விளாசி எடுத்தார்.

இந்த பதிவுகள் இணையத்தில் வைரலாக இதுவரை பாண்டேவை திட்டுவதற்காக மட்டும் வரும் நெட்டிசன்கள் முதன் முறையாக "ஏண்டா... அந்த பொண்ணு ஆபாச புகைப்பட நடிகையாகவே இருந்தாலும், கவர்ச்சி புகைப்படங்கள் வெளியிட்டாலும், அவர் ஒரு பெண் என்ற அறிவு கூட இல்லாமல் பொதுவெளியில் இப்படி தான் செய்வார்களா என திட்டி தீர்த்து வருகின்றனர்.
ஆனாலும் இதுவும் மரண நாடகம் போல பெண்களுக்கான நாடகம் என பதிவிடுவாரோ, அப்படி மட்டும் பதிவிட்டால் பார்த்துக்கொள்ளலாம் என திட்டியவர்கள் பூனம் பாண்டேவின் அடுத்த பதிவுக்காக காத்திருக்கின்றனர்.
இதையும் படிங்க: கும்பமேளாவில் வெளியானது மந்திரவாதி தமன்னாவின் ஓடேலா 2 டீசர்....! பேய் பிசாசுடன் சுற்றும் கதாநாயகி..!