இலங்கையை சேர்ந்த செய்தி வாசிப்பாளரான லாஸ்லியா, பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போது கொழுகொழு அழகில் ரசிகர்களை வசீகரித்தார்.

இவரின் அழகில் மயங்கிய கோலிவுட் ரசிகர்கள் , இவருக்கு தான் பிக்பாஸ் சீசன் சீசன் 3 நிகழ்ச்சியில் முதல் ஆர்மி துவங்கி ஆர்ப்பரிக்க துவங்கினர்.

இதையும் படிங்க: பிக்பாஸ் சீசன் - 8: TICKET TO FINALE வென்ற ரயான், வெளியேற்றப்பட்ட மஞ்சரி...
பிக்பாஸ் வீட்டுக்குள் இருக்கும் போது கவினின் காதல் வலையில் சிக்கினார் லாஸ்லியா. இவரின் பெற்றோர் உள்ளே வந்த போது இதற்காக லாஸ்லியாவை திட்டியதும், கவினை புறக்கணித்ததும் பேசுபொருளாக மாறியது.

கவின், லாஸ்லியா விளையாட்டு திசை திரும்ப, நாம் தான் காரணம் என்கிற குற்ற உணர்ச்சியில், பிக்பாஸ் வீட்டில் இருந்து 5 லட்சம் பணத்துடன் வெளியேறினார் கவின்.

கவின் வெளியே சென்றதால், லாஸ்லியா பிக்பாஸ் ஃபைனலில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது.

ஆனால் கவின் என்பவர் யார் என்றே தெரியாதது போல் லாஸ்லியா நடந்து கொண்ட விதம் சர்ச்சைக்கு வித்திட்டது.

பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறியதும், ஹர்பஜன் சிங் நடித்த 'ஃபிரென்ட்ஷிப்' திரைப்படத்தில் நடித்தார். இந்த படம் படுதோல்வியை சந்தித்தது.

இதை தொடர்ந்து இவர் நடித்த படங்களும் சரியாக போகவில்லை. பின்னர் உடல் எடையை குறைத்து, கவர்ச்சி அவதாரம் எடுத்தார்.

தற்போது சுமார் 2 வருடங்கள் கழித்து, 'மிஸ்டர் ஹவுஸ் கீப்பிங்' என்கிற படத்தில், யூ டியூப் பிரபலத்துக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

படவாய்ப்புக்காக அடிக்கடி போட்டோ ஷூட் நடத்தி வரும் இவர், புத்தகங்களுக்கு நடுவே அழகிய பட்டாம்பூச்சி போல் எடுத்து கொண்ட போட்டோஸ் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க: கைவிட்ட பிக்பாஸ்! மீண்டும் கவர்ச்சி கோதாவில் குதித்த தர்ஷா குப்தா - சும்மா சுர்ருன்னு ஈர்க்கும் போட்டோஸ்!