கடந்த 2017 ஆம் ஆண்டு, பாலிவுட் திரையுலகில் தன்னுடைய நடிப்பு பயணத்தை துவங்கியவர் நிதி அகர்வால்.

பாலிவுட் திரையுலகில் இவர் நடித்த படங்களுக்கு பெரிதாக வரவேற்பு கிடைக்காத நிலையில், தெலுங்கு திரைப்படங்களில் நடிக்க துவங்கினார்.

இதையும் படிங்க: ஹீரோயினுடன் சேர்ந்து பீடி பிடிக்கும் சசிகுமார்.. வெளியானது மை லார்ட்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக்!
பின்னர் இவரை தமிழிலும் நடிக்க வைக்க இயக்குனர்கள் ஆர்வம் காட்டினர்.

அந்த வகையில் கடந்த 2021 ஆம் ஆண்டு. இயக்குனர் சுதீந்திரன் இயக்கத்தில் உருவான ஈஸ்வரன் படத்தில் கதாநாயகியாக நடித்தார்.

முதல் படத்திலேயே நடிகர் சிம்புவுக்கு ஜோடியாக நடித்த நிதி அகர்வால், இந்த படத்தில் நடித்த பூங்கொடி கதாபாத்திரம் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த படத்தில் நடித்து கொண்டிருக்கும் போதே ஜெயம் ரவி நடிப்பில் உருவான பூமி படத்திலும் நடிக்கும் வாய்ப்பை பெற்றார்.

இந்த இருபடங்களும் ஒரே நாளில் வெளியான நிலையில், இரண்டு படங்களும் தோல்வியை தழுவியது.

இறுதியாக கடந்த 2022 ஆம் ஆண்டு, உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியான கழகத் தலைவன் திரைப்படத்தில் நிதி அவரால் நடித்திருந்தார்.

தற்போது மீண்டும் பாலிவுட் மற்றும் டோலிவுட் திரையுலகில் கவனம் செலுத்தி வரும் இவரது லேட்டஸ்ட் புகைப்படங்கள் அதிகம் பார்த்து ரசிக்கப்பட்டு வருகிறது.

குறிப்பாக மகாராணி தோற்றத்தில், இவர் எடுத்து கொண்ட சில போட்டோ ஷூட் புகைப்படங்கள் வைரலாக பார்க்கப்பட்டு லைக்குகளை குவித்து வருகிறது.
இதையும் படிங்க: ஸ்டன்னிங் உடையில்... இடையழகை காட்டி மயக்கும் மடோனா செபஸ்டியன்!