உலக அழகியான ஐஸ்வர்யா ராய், பாலிவுட் நடிகையாக அவதாரம் எடுத்ததும், ரசிகர்களின் கனவு கன்னியாக திகழ்ந்து வந்தார். அந்த சமயத்தில் அவரது பேட்டிகள் இடம் பெறாத பத்திரிகைகள் மற்றும் ஊடகங்களே இல்லை என்று சொல்லலாம்.
அந்த அளவிற்கு அகில இந்திய அளவில் ஐஸ்வர்யா ராய் பிரபலமாக விளங்கினார். அப்போது முன்னணி நடிகர்களாக இருந்த பல நடிகர்களுடன் அவரை இணைத்து வந்த "கிசு கிசு" செய்திகளுக்கும் பஞ்சமில்லை. தற்போது அவர் திருமணம் செய்திருக்கும் அபிஷேக் பச்சனுடன் (அப்போதைய சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனின் மகன்) இணைத்தும், 'அவரைத்தான் திருமணம் செய்து கொள்ள போகிறார் ஐஸ்வர்யாராய்' என்றும் பரபரப்பாக செய்திகள் வந்த நேரம் அது.

அப்போது 21 வயது நடிகையாக இருந்த ஐஸ்வர்யா ராய் அளித்த பேட்டி ஒன்று, சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாக பரவி வருகிறது. கடந்த 2007 ஆம் ஆண்டு நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அவரிடம் ஊடகவியலாளர் ஒருவர் பேட்டி கண்டார். இந்த பேட்டி வீடியோவில் திருமணம் குறித்த தன்னுடைய எண்ணங்களை ஐஸ்வர்யா ராய் பகிர்ந்து கொண்டிருந்தார்.
இதையும் படிங்க: மதுரையை நோக்கி நடக்கும் சேஸிங்.. குழந்தையின் உயிரை காப்பாற்றுவார்களா? பரணி - ஷண்முகம்! அண்ணா சீரியல் அப்டேட்!
"எனக்குப் பிடித்த சரியான ஒரு நாயகனை, சரியான நேரம் மற்றும் இடம் வரும் போது தான் திருமணம் செய்து கொள்ளப் போவதாக "அந்த பேட்டியில் அவர் குறிப்பிட்டு இருந்தார். சுவாரசியமான அந்த பேட்டியின் ஒரு கேள்விக்கு பதில் அளித்த ஐஸ்வர்யாராய், "பேரின்பம் அளிக்கும் இனிய திருமண வாழ்க்கையையும், தாய்மையின் மகிழ்ச்சியையும் நான் அனுபவிக்க விரும்புகிறேன்.

வாழ்க்கையிலேயே மிகவும் அழகான சிறப்பு வாய்ந்த நாட்களில் ஒன்றாக எனது திருமண நாள் இருக்கும்" என்று உற்சாகம் பொங்க கூறி இருந்தார். கேள்விகளுக்கு பதில் அளித்த போது வெட்கப்பட்டு கொண்டு அவர் பேசிய விதமும், அந்த நேரத்தையும், பேச்சுத் திறமையும் அவருடைய ரசிகர்கள் மீது நீட்டித்த தாக்கத்தை ஏற்படுத்தியது.
அதே நேரத்தில், அவருடைய நேர்த்தியையும் வசீகரத்தையும் ஆங்கில மொழியில் அவருக்கு இருந்த சரளமான நடையும் தெளிவாக புரிந்தது. "திருமணத்திற்கு முந்தைய உறவு" பற்றிய கேள்வி. அமெரிக்காவைச் சேர்ந்த அந்த ஊடக செய்தியாளர், திருமணத்திற்கு முந்திய உறவு குறித்த கேள்வி ஒன்றையும் எழுப்பி இருந்தார். அதற்குப் பதிலளித்த ஐஸ்வர்யா ராய்," திருமணத்திற்கு முந்தைய உடலுறவு தவறு" என்பதை அழுத்தமாக குறிப்பிடத் தவறவில்லை.

அத்துடன் 'திருமணத்திற்கு முன்பு முத்தமிடுவதற்கு கூட இந்திய பெண்கள் விரும்ப மாட்டார்கள்" என்று, தனக்கே உரிய இயல்பான உடல் மொழியில் வெட்கப்பட்டு கொண்டு அவர் கூறியதையும் ரசிகர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.
ஐஸ்வர்யா ராய் உலக அழகி பட்டம் வென்ற பிறகு தான் இந்திய பெண்களின் அழகு உலக அளவில் பிரபலமானது. அதன் பின் நிறைய இந்திய பெண்கள் உலக அழகி பட்டத்தை வெல்லத் தொடங்கினார்கள். உடல் அழகில் யார் வேண்டுமானாலும் வெல்லலாம். ஆனால் அந்த போட்டியில் கேட்கப்படும் அறிவுபூர்வமான கேள்விக்கு அவர்கள் என்ன பதில் அளிக்கிறார்களோ அதன் அடிப்படையில் தான் வெற்றிக்கு அவர்கள் தகுதி பெறுவார்கள்.

எனது நினைவுக்குத் தெரிந்த வரை இது போன்ற அறிவுபூர்வமான கேள்விகளுக்கு ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட இந்திய அழகிகள் அளித்த பதில் மிகவும் சிறப்பாக இருந்தது என்பதை, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட பல அழகிகளின் வெற்றி பேட்டிகளை செய்தியாக்கியவன் என்ற முறையில் நினைவு கூர முடிகிறது.
அதே நேரத்தில், ஒரு உலக அழகி யான பாலிவுட் பிரபலத்தின் இந்த பேட்டி, தற்போதைய சூழ்நிலையில் திருமணம், தாய்மை, திருமணத்துக்கு முந்திய உறவு (ரிலேஷன்ஷிப்) பற்றிய அவருடைய கருத்துக்கள் எந்த அளவுக்கு பொருந்தும் அல்லது பொருந்தாது என்பதை வாசகர்களாகிய நீங்கள் தான் சொல்ல வேண்டும்.!
இதையும் படிங்க: பெண் கேட்டு வரும் பரமேஸ்வரி; ரேவதி கல்யாணத்தில் நடக்க போவது என்ன? கார்த்திகை தீபம் இன்றைய அப்டேட்!