தமிழக அரசியல் களத்தில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கு நீண்ட நெடிய அனுபவம் உண்டு. எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவிற்கே பிரச்சார வியூகங்களை வகுத்துக் கொடுத்தவர்தான் செங்கோட்டையன். இப்போது எடப்பாடி பழனிசாமி மீது உள்ள அதிருப்தியால் வெளிப்படையாகவே வெடித்துக் கிளம்பியுள்ளார்.
இதுகுறித்து தனது கருத்தை தெரிவித்துள்ள அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன், ''1972ல் புரட்சித்தலைவர் கட்சி ஆரம்பித்ததில் இருந்து அதிமுகவில் இருப்பவர் செங்கோட்டையன். 1977 லிருந்து சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர். புரட்சித்தலைவர் இயக்கத்தில் மிகவும் சீனியர் அவர். அவரது ஆதங்கத்தை சொல்லி இருக்கிறார். நானும் அவரது கருத்தை ஏற்றுக் கொள்கிறேன். அம்மாவினுடைய தொண்டராய்... நானும் ஒரு அம்மாவின் உடைய தொண்டனாய் இருந்து அவர் சரியாக சொல்லியிருக்கிறார் என்று நினைக்கிறேன். அம்மாவுடைய தொண்டர்கள், அம்மாவுடைய கட்சியில் இருந்தவர்கள் எல்லாம் அம்மாவின் மறைவிற்குப் பிறகு எடப்பாடி பழனிச்சாமி எப்படி முதல்வர் ஆனார் என்பது எல்லோருக்கும் தெரியும்.

அந்த நான்காண்டு ஆட்சியில் அம்மாவினுடைய பாதையில் இருந்து எடப்பாடி பழனிசாமி விலகிச் செல்கிறார் என்கிற காரணத்தினால் தான் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் தொடங்கப்பட்டது. 2021 தேர்தலில் அவ்வளவு பணபலம், அதிகாரப்பலம் இருந்தும் எதனால் எடப்பாடி பழனிச்சாமி அந்த தேர்தலில் அம்மா கொடுத்த ஆட்சியை ஏன் தக்க வைத்துக் கொள்ள முடியவில்லை என்பது எல்லோருக்கும் தெரியும். அதனை தொடர்ந்து வந்த அனைத்து தேர்தல்களிலும் அம்மாவின் இயக்கம் தோல்வி அடைந்ததற்கான காரணம் என்னவென்று அம்மாவிடம் தொண்டர்களுக்கு தெரியும்.
இதையும் படிங்க: ஒன்றிணைகிறதா அதிமுக - அமமுக?... எடப்பாடிக்கு டிடிவி தினகரன் கொடுத்த கிரீன் சிக்னல்!
2021 இல் திமுக ஆட்சி அமைந்தது. 2024 பாராளுமன்ற தேர்தல் வெற்றி பெற்றதற்கும் மறைமுகமாக எடப்பாடி பழனிச்சாமி உதவி செய்தார். தன் மீது வழக்குகள் வந்து விடக்கூடாது, கைதாகி விடக்கூடாது என்பதற்காக எடப்பாடி பழனிச்சாமி தன்னை காப்பாற்றிக் கொள்வதற்காக புரட்சித் தலைவர்- புரட்சித்தலைவி அவர்களுடைய இயக்கத்தை கேடயமாக பயன்படுத்தி தன்னை காப்பாற்றிக் கொண்டு வருகிறார். இது தொடர்ந்து நீடித்தால் 2026 தேர்தலுக்குப் பிறகு அம்மாவினுடைய இயக்கத்திற்கு மூடு விழா நடத்தி விடுவார் என்று தொடர்ந்து நான் பலமுறை சொல்லி வருகிறேன். அதை அங்கு உள்ள தொண்டர்கள் உணர வேண்டும். நிர்வாகிகள் உணர வேண்டும். இரட்டை இலையை பணபலத்தால் எடப்பாடி பழனிச்சாமி வைத்திருக்கிறார்.

அங்குள்ளவர்கள் தொடர்ந்து அவருக்கு காவடி தூக்கினீர்கள் என்றால் நீங்கள் ஏமாந்து கொண்டிருக்கிறீர்கள். 2026 தேர்தலுக்குப் பிறகு நீங்க எல்லாம் வருத்தப்படக்கூடிய அந்த சூழல் வந்துவிடும். கட்சி பலவீனமாகி கொண்டிருக்கிறது என்பதை உணரத் தொடங்கி விட்டார்கள் அங்கிருக்கும் உண்மை தொண்டர்கள். அந்த கட்சியை சில சுயநலவாதிகள், பணத்திமிர் உள்ளவர்கள் தங்கள் வசம் வைத்துக்குக் கொண்டு ஏமாற்றி கட்சியை அழித்து விடுவார்கள் என்கிற உண்மை அங்கே நிறைய பேருக்கு புரிய ஆரம்பித்து இருக்கிறது. தமிழ்நாடு முழுவதும் தொண்டர்களின் மனநிலை எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக எதிரொலித்து வருகிறது.
அம்மாவின் தொடர்களுக்கு உண்மை நிலை தெரியும். இதில் மூடி மறைப்பது ஒன்றுமில்லை. விழித்துக் கொள்ளவில்லை என்றால் எடப்பாடி பழனிச்சாமியின் சுயநலத்தால் அவர் தன்னை காப்பாற்றிக் கொள்வதற்கு புரட்சித்தலைவர் ஆரம்பித்த கட்சியை கேடயமாக பயன்படுத்துகிறார். திமுகவின் தேர்தல் வெற்றிக்கு மறைமுகமாக உதவி வருகிறார். இந்த நிலை நீடித்து அங்குள்ளவர்கள் எடப்பாடி பழனிச்சாமிக்கு காவடி தூக்கிக் கொண்டு இருந்தால் 2026 தேர்தலுக்கு பிறகு மூடு விழாவை நடத்துவதற்கு தயாராகி விட்டார்கள் என்றே அர்த்தம்'' எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: எடப்பாடியாரின் மனமாற்றம்... உள் கூட்டணி அரசியலில் டி.டி.வி. - ஓ.பி.எஸ்..! அதிமுகவில் புதிய வியூகம்..!