தமிழ் திரையுலக வரலாற்று நடிகைகளில் ஸ்டாராக வலம் வருபவர் என்றால் அது நயன்தாரா ஒருவரே. பல விமர்சனங்களையும், வலிகளையும் கடந்து தன் உழைப்பாலும், தன் திறமையாலும் ரசிகர்கள் மனதில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து, இன்றளவும் சூப்பர் ஸ்டார் ஜோடியாக நயன்தாரா வலம் வருகிறார்.

இன்றும் நயன்தாராவின் அறிமுகப்படமான 'ஐயா' திரைப்படம் யாராலும் மறக்க முடியாது. இயக்குநர் ஹரி இயக்கத்தில் உருவான இந்தப் படத்தில் சரத்குமாருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருப்பார். தனது வெகுளித்தனமான நடிப்பில் அப்பொழுதே ரசிகர்களை உருவாக்கியவர். அதன் பின் தமிழ், தெலுங்கு மலையாளம் போன்ற படங்களில் நடித்து வந்தவர்.
நாளடைவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் சந்திரமுகி படத்தில் நடித்து, விஜயின் சிவகாசி படத்தில் "நான் சூப்பர் ஸ்டார் ஜோடி" என்ற பாட்டுக்கு நடனமாடி நயன்தாரா என்றாலே 'சூப்பர் ஸ்டார் ஜோடி' என்ற புனைப்பெயரைப் அவரே வைத்துக்கொண்டார்.
இதையும் படிங்க: பிரதீப் ரங்கநாதனுக்கு சீமான் அப்பாவா..? விக்னேஷ் சிவனால் சூடுப்பிடித்த இணையதளம்!!

நயன்தாராவின் தனிப்பட்ட வாழ்க்கையில் நடந்த சில கசப்பான சம்பவங்களுக்கு பின்னர் திரைத்துறையை விட்டே வெளியே செல்ல முடிவெடுத்தார். ஆனால் சோதனையை சாதனையாக மாற்ற முடிவு எடுத்த நயன்தாரா தனது கடின உழைப்பால் இன்று கோலிவுட்டை தாண்டி பாலிவுட்டிலும் அடி எடுத்து வைக்கும் அளவிற்கு வளர்ந்துள்ளார்.
ஒரு காலத்தில் நயன்தாராவை விமர்சனம் செய்தவர்கள் கூட வாயடைத்துப் போகும் அளவிற்கு இந்தியா முழுவதும் ரசிகர் பட்டாளங்களை உருவாக்கி, விக்னேஷ் சிவனை திருமணம் செய்து, அழகான குழந்தைகளுக்கு தாயாக மாறி... குடும்ப வாழ்க்கையிலும், தொழிலிலும் மிகப்பெரிய இடத்தையும் பிடித்து சாதனை பெண்ணாக வலம் வருகிறார்.

அதே போல் தற்பொழுது தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட நயன்தாரா மற்றும் விக்னேஷிவனை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள், இவர்கள் இருவரும் நார்மல் பீப்பள் அல்ல. என கூறியது நெட்டிசன்கள் மத்தியில் பெரும் கிளர்ச்சியை கிளப்பி நயன்தாரா விக்னேஷிவனை சூப்பர்மேனாக சித்தரித்து பறக்க விட்டனர். இந்த சூழலில் தன்னை இனி யாரும் 'லேடி சூப்பர் ஸ்டார்' என அழைக்க வேண்டாம் என நயன்தாரா லெட்டர் பேட் மூலமாக தெரிவித்து இருந்தார். இதனால் பல சிக்கல்களை சந்தித்தார்.

அதுமட்டுமல்லாமல், விக்னேஷ் சிவன் - நயன்தாரா தம்பதியின் திருமண ஆவணப்படத்தை, நெட் ஃபிளிக்ஸ் ஓ.டி.டி. நிறுவனம் "பியாண்ட் தி ஃபேரி டேல்"(Nayanthara: Beyond The Fairy Tale) என்ற பெயரில் கடந்த ஆண்டு நவம்பரில் வெளியிட்டது. இந்த ஆவணப்படத்தின் ட்ரைலர் வெளியானபோது, அதில் "நானும் ரவுடி தான்" படத்தின் படப்பிடிப்பு காட்சிகள் இடம்பெற்று இருந்தன. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்படத்தின் தயாரிப்பாளர் தனுஷ், திடீரென ரூ.10 கோடி கேட்டு வக்கீல் நோட்டீஸை நயன்தாரா வீட்டிற்கு அனுப்பிவிட்டார்.

நடிகை நயன்தாரா நடிப்பில், தற்பொழுது "டெஸ்ட்" என்ற திரைப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாக இருக்கிறது. YNOT studio's தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளரான 'சசிகாந்த்' இயக்கத்தில், மாதவன், நயன்தாரா, சித்தார்த், முதலானோரின் நடிப்பில் உருவாகி இருக்கும் இத்திரைப்படம் ஓடிடியில் வெளியாவதால் சம்மந்தமே இல்லாமல் நயன்தாராவை திரையரங்கு உரிமையாளர்கள் வசைபாடி வருகின்றனர்.

இப்படி பல வேதனைகளையும் பழிச்சொல்லையும் தனது தலையில் சுமந்து வரும் நடிகை நயன்தாரா தனது சோர்வுகளை தனது மகன்களின் உதவியுடன் ஜாலியாக மாற்றி வருகிறார் என்பதற்கான புகைப்படத்தை வெளியிட்டு அதன் கீழ் "என் வாழ்க்கையில் ஒவ்வொரு முறையும் உங்கள் இருவரையும் தேர்ந்தெடுப்பேன்" என்று பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: சும்மா.. கிரிக்கெட் வீரனாக நடிக்க முடியாது.. அதற்கும் பயிற்சி வேண்டும்..! டெஸ்ட் பட நடிகர் சித்தார்த் ஆவேசப் பேச்சு..!