கிரிப்டோ கரன்ஸியை வெளியிடப்படாத வருமான இனங்களில் சேர்க்கவும் புதிய வருமானவரி மசோதாவில் வகை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 1964 வருமானவரி சட்டத்துக்கு மாற்றாக, புதிய வருமான வரிச் சட்டத்தை மத்திய அரசு கொண்டுவர உள்ளது. இதற்காக வருமானவரி மசோதா 2025 வை மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்வார் எனத் தெரிகிறது.
இந்த புதிய வருமானவரிச் சட்டத்தில் சட்டங்கள், விதிகள் எளிமையாக்கப்பட்டு, வரிமுறைகள் நவீனப்படுத்தப்பட்டுள்ளன. 23 பகுதிகளாகவும், 16 பட்டியல்களையும், 536 பகுப்புகளையும் புதிய வருமானவரி மசோதா கொண்டுள்ளதாக இருக்கும் எனத் தெரிகிறது.

இதுநாள்வரை வரிசெலுக்குவோருக்கு அசெஸ்மென்ட் இயர் என்று வார்த்தை மாற்றப்பட்டு, “டேக்ஸ் இயர்” என்ற சொற்பதம் பயன்படுத்தப்படும். “ப்ரீவியஸ் இயர்” என்ற வார்த்தை மாற்றப்பட்டு “ பைனாஸ்சியல் இயர்” என்ற சொற்பதம் பயன்படுத்தப்படும். ஏப்ரல் 1முதல் மார்ச் 31வரையிலான 12 மாதங்கள் கணக்கில் கொள்ளப்படும். இந்த புதிய வருமானவரி மசோதா இருஅவைகளிலும் நிறைவேற்றப்பட்டால் 2026ம் ஏப்ரல் மாதத்திலிருந்து நடைமுறைக்கு வரும் எனத் தெரிகிறது.
இதையும் படிங்க: அப்படி என்னதாங்க இருக்கு புதிய வருமானவரி மசோதாவில்.. .
வல்லுநர்கள் கூற்றுப்படி, “புதிய மசோதா தற்போதுள்ள பழைய வருமானவரி சட்டத்தின் ‘காலாவதியான’ பல பிரிவுகளை நீக்கி, வழக்குகளைக் குறைத்து, வரி செலுத்துவோருடன் இணக்கத்தை மேம்படுத்தும். வரிச் சட்டங்களை எளிமைப்படுத்தி, வெளிப்படையாகவும், விளக்க எளிதாகவும், வரி செலுத்துவோருக்கு ஏற்றதாகவும் இருக்கும் “ எனத் தெரிவித்தனர்.

இந்தபுதிய வருமானவரி மதோவான் கீழ் கிரிப்டோ கரன்சி வர்த்தகத்தில் ஈடுபடுவது, அதில் வருமானம் ஈட்டுவதை “வெளியிடப்படாத வருமானம்” என்ற பிரிவில் குறிக்கிறது. குறிப்பாக கிரிப்டோ சொத்துக்கள் பரிமாற்றம், டிஜிட்டல் பரிமாற்றங்களுக்கான விதிகள் கடுமையாக்கப்படுகிறது. கிரிப்டோ சொத்துக்கள் வெளியிடப்படாத வருமானம் என்று குறிப்பிடப்படும்.

இதன்படி ஒருவர் கிரிப்டோ கரன்சிகளை வைத்திருந்தாலோ அல்லது விற்பனை செய்தாலோ அதை அரசுக்கு தெரிவிக்காமல் செய்தால், அது குற்றமாகக் கருதப்படும், தண்டைக்குரிய குற்றமாகும். அதாவது கருப்புப்பணம், தங்கம், நகைகளை வைத்திருப்பது போலாகும்.

வெளியிடப்டாத கிரிப்டோ கரன்சிகள் என்பது வரி ஏய்ப்பாகக் கருதப்படும். என்எப்டி மற்றம் கிரிப்டோ மூலம் டிஜிட்டல் பரிமாற்றம் செய்து வருமானம் ஈட்டினால் அது வரிவிதிப்புக்குள் வரும், போலியான வரிக்கணக்கு காண்பித்தால், அபராதம்,தண்டனை விதிக்கப்படும்.
கிரிப்டோ கரன்சி வர்த்தகத்தில் தற்போது இருக்கும் 30 சதவீத வரியில் பெரும்பாலும் மாற்றம் இருக்காது. அதேசமயம், கிரிப்டோ வர்த்தகத்துக்கு வரிச் சலுகையோ, வருமானத்துக்கு வரிவிலக்கு அளிக்கப்படாது, அனைத்து கிரிப்டோ வர்த்தகத்துக்கும் ஒரு சதவீதம் டிடிஎஸ் பிடிக்கப்படும்.
இதையும் படிங்க: பண வீக்கம், விலை உயர்வு, வேலையின்மை இல்லையா? எந்த கிரகத்தில் வாழ்கிறார் நிர்மலா? பிரியங்கா ஆவேசம்