அண்மையில் தனியார் தொலைக்காட்சியின் ஒளிபரப்பாகி வரும் சீரியல் ஒன்றில் நடிக்கும் நடிகை ஷ்ருதி நாராயணனின் ஆபாச வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் இந்த வீடியோ இணையத்தில் தீயாய் பரவியது. சின்னத்திரையில் வாய்ப்புக்காக இந்த மாதிரி எல்லாம் செய்வர்களா? வாய்ப்பு தேடும் பெண்களை பணம் படைத்தவர்கள் இப்படியெல்லாம் பயன்படுத்துவார்களா? என்று பல கோண்ங்களில் கேள்விகள் எழுந்தன. மறுபுறம் இப்படியெல்லாம் செய்து தான் வாய்ப்பை பெற வேண்டுமா என கேள்விகளும் எழுப்பப்பட்டன.

இதுமட்டுமின்றி அந்த தனியார் தொலைக்காட்சியை சேர்ந்தவர்கள் மீதும் விமர்சனங்கள் வைக்கப்பட்டன. ஆனால் இது தன்னுடைய வீடியோ இல்லை என ஷ்ருதி நாராயணன் விளக்கம் அளித்தார். மேலும் அது ஏ.ஐ. ஆல் உருவாக்கப்பட்ட வீடியோ என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார். இப்படியான நிலையில் இந்த வீடியோ குறித்து மருத்துவர் காந்தராஜ் தெரிவித்துள்ள கருத்து பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து மருத்துவர் காந்தராஜ் பேசியது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
இதையும் படிங்க: அந்தரங்க வீடியோ லிங்க் வேணுமா.. உன் வீட்டு பெண் வீடியோவ பாரு.. கொதித்துப்போன ஸ்ருதி..!

இதுக்குறித்து அவர் பேசுகையில், வாய்ப்புக்காக வரும் பெண்களை பாலியல் ரீதியாக பயன்படுத்தும் ஆண்கள் இருந்து கொண்டு தான் உள்ளார்கள். அது ஏதோ, தொலைக்காட்சிகளில் மட்டுமோ, சினிமாக்களில் மட்டுமோ இல்லை. ஆண்களும் பெண்களும் இணைந்து பணியாற்றும் எல்லா இடங்களிலும் ஆண்கள் பெண்களை பாலியல் ரீதியாக பயன்படுத்திக் கொண்டு தான் உள்ளார்கள். தொல்லை கொடுத்துக் கொண்டுதான் உள்ளார்கள். பெண்கள் தங்களுக்கு பாலியல் தொல்லை கொடுப்பவர்கள் குறித்து நேரடியாக புகார் அளிக்க வேண்டும்.

ஒரு கட்சியின் தலைவர் 7 முறை கருக்கலைப்பு செய்ய தான் காரணம் என பொதுவெளியில் கூறுகிறார். அதனை அந்த கட்சியில் உள்ள பெண்கள் கைதட்டி சிரித்துக் கொண்டிருக்கிறார்கள். இப்படி ஆண்களும் பெண்களும் இணைந்து வேலை பார்க்கும் தளத்தில் இந்த பிரச்னைகள் உள்ளது. பெண்களும் தாங்கள் புகழ் வெளிச்சம் பெற வேண்டும் என்பதற்காக ஆண்களின் காமவெறிக்கு பலியாகி விடுகிறார்கள். இப்போது இது பலரது கவனத்திற்கு வந்துவிட்டது. சம்பந்தப்பட்ட சேனலுக்கு தான் இந்த விவகாரத்தால் கெட்டப் பெயர். இதனால் அந்த சேனலை மக்கள் பார்ப்பதை தவிர்த்து விடுவார்கள் என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: கஞ்சா வெச்சிருக்காரா..? அசல் கோலாருக்கு வந்த புது பிரச்சனை!!