இந்தியாவை பூர்வீகமாக கொண்ட மலேசியர் பன்னீர்செல்வம் பரந்தாமன். சிங்கப்பூருக்கு போதைப்பொருளை இறக்குமதி செய்ததாக கூறி இவர் மீது கடந்த 2017ம் ஆண்டு குற்றம் சாட்டப்பட்டது. இதனை விசாரித்த நீதிமன்றம் பன்னீர் செல்வம் ப்ரந்தாமனுக்கு மரண தண்டனையை விதித்தது.

இந்நிலையில் மரண தண்டனை நிறைவேற்றப்படவிருந்த நிலையில், கடைசி நேரத்தில் அந்நாட்டின் மேல்முறையீட்டு நீதிமன்றம் தண்டனையை நிறுத்தி வைத்தது. இது தொடர்பாக ஆணை பிறப்பித்த மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி வூ, 2024ம் ஆண்டு வெளியான புதிய சட்டத்தின்படி, போதைப்பொருளை ஒருவர் வைத்திருந்ததாக குற்றம் சாட்டப்பட்டால் அவரே தான் குற்றமற்றவர் என நிரூபிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பார்லிமென்டில் பச்சை பொய்..! இந்திய வம்சாவளி எம்.பிக்கு ரூ.9 லட்சம் அபராதம்..!

இது 2017ம் ஆண்டு குற்றம் சாட்டப்பட்ட பன்னீர் செல்வம் பரந்தாமனுக்கு பொருந்துமா என்பதில் சட்டசிக்கல் உள்ளது. மேலும், தனது வழக்கறிஞர் இந்த வழக்கை முறையாக கையாளவில்லை என்ற பன்னீர் செல்வத்தின் குற்றச்சாட்டும் கருத்தில் கொள்ளப்படுகிறது. இந்த வழக்கில், பன்னீர் செல்வம் ப்ரந்தாமன் ஊக்கத்தின் அடிப்படையிலேயே குற்றம் சாட்டப்பட்டுள்ளார். அவரது மேல்முறையீட்டு மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொண்டால் அவரது மரண தண்டனையில் மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது என்றும் சுட்டிக்காட்டினார்.
இதையும் படிங்க: சீரியஸ் ரேப்பிஸ்ட் கைது..! சிறுமிகளை மட்டும் குறிவைத்து சிதைக்கும் சைக்கோ..!