சென்னை மக்களின் பெரும்ப பொழுது போக்காக இருக்கும் ஒரே இடம் என்றால் அது கடற்கரைகள் தான். அப்படி சென்னையில் பல்வேறு கடற்கரைகள் உள்ளன. பகல் முழுவதும் பெருசுகள் முதல் சிறுசுகள் வரை அனைவரும் அங்கு குடும்பங்களுடன் ஆட்டம் போட்டு மகிழ்வர். இதனால் கடற்கரைகளில் பகல் நேரம் மட்டுமின்றி இரவு நேரங்களிலும் மக்கள் அலை மிகுந்தே இருக்கும். இதனால் கடற்கரைகளில் உணவு கடைகள் பொழுதுபோக்கு விளையாட்டு என பல்வேறு நிகழ்ச்சிகள் அங்கு குவிந்து கிடக்கும். பலரின் வாழ்வாதாரமாக இருக்கக்கூடிய அந்த கடற்கரையில், மக்கள் சுற்றுவதற்கு குறிப்பிட்ட நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

மேலும் பாதுகாப்பிற்காக காவலர்களும் ஆப்ப போது ரோந்து பணிகளிலும் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் தான் இந்த சம்பவம் சென்னை நீலாங்கரை கடற்கரையில் அரங்கேறியுள்ளது. சென்னை குரோம்பேட்டை சேர்ந்த லட்சுமணன் மற்றும் சாய் விக்னேஷ். நண்பர்கள் ஆன இருவரும் பனி முடித்துவிட்டு மது அருந்தி மகிழ்ந்துள்ளனர். அப்போது இரவில் மது அருந்திவிட்டு அதிகாலையில் நீலாங்கரை கபாலீஸ்வரர் நகர் கடற்கரைக்கு சென்றுள்ளனர்.
இதையும் படிங்க: பாய்லர் வடித்து சிதறி தீ விபத்து.. துரித நடவடிக்கைகளால் உயிர் சேதம் தவிர்ப்பு..

பின்னர் இருவரும் போதை தலைக்கேறி அங்கேயே மயங்கி கிடந்துள்ளனர். காலையில் போதை தெளிந்து எழுந்த சாய் விக்னேஷ் நண்பன் லட்சுமணனை தேடியுள்ளார். அப்போது லட்சுமணன் காணாமல் போனது தெரிய வந்தது. இதனால் பதற்றமடைந்த சாய் விக்னேஷ் காவல் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு உள்ளார். நண்பனை கடல் அலை இழுத்துச் சென்று விட்டதாக கூறிய சாய் விக்னேஷை நம்பி தீயணைப்புத் துறையினர் காவல் துறையினர் என பலரும் கடற்கரையில் குவிந்துள்ளனர். சுமார் 2 மணி நேரமாக தீயணைப்புத் துறையினர் காவல் துறையினர் லட்சுமணனை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

அப்போது லட்சுமனின் தொலைபேசிக்கு சாய் விக்னேஷ் தொடர்பு கொள்ளவே அவர் அவரது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தது தெரிய வந்தது. இதனால் ஆத்திரமடைந்த அதிகாரிகள் இருவரின் விளையாட்டுக்கு அரசு அதிகாரிகள் தான் கிடைத்தார்களா என சாய் விக்னேசை அதிகாரிகள் வசைவாடியுள்ளனர். இது மட்டும் இன்றி சாய் விக்னேஷியும் லட்சுமணனையும் காவல் நிலையத்தில் ஆர்ஜர்படுத்துமாறு அவர்களது குடும்பத்தினருக்கு காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
இதையும் படிங்க: முன்னாள் மாணவர்கள் சந்திப்பு.. 50 வருடம் பின்னோக்கி சென்று விட்டதாக நெகழ்ச்சி..!