அம்மா உன்னை குத்தப்போறாங்க என மகள் எச்சரித்தும் மனைவியிடம் சிக்கிக்கொண்டு கத்திக்குத்துவாங்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் தென்காசியை சேர்ந்த நபர் ஒருவர்
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அடுத்த ஓடத் தெரு பகுதியை சேர்ந்தவர் மாரியப்பன் . இவரது மனைவி கோகிலா ஆடம்பர வாழ்க்கைக்கு அடிமையாகி கணவரை அதிக அளவு கடன் வாங்க வைத்துள்ளதாக தெரிகிறது .இவர்களுக்கு 7 வயதில் பெண் குழந்தை உள்ள நிலையில் கடன் பிரச்சினை காரணமாக கணவன் மனைவியிடையே அடிக்கடி தகராறு வந்துள்ளது . ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த மாரியப்பன் கோகிலாவின் தாய் , தந்தை மற்றும் சகோதரர் குறித்து தகாத முறையில் பேசியதாக தெரிகிறது .
இதனால் ஆத்திரமடைந்த மாமியார் மாரியப்பனை கொன்றுவிடும்படி மகளிடம் சொல்லியிருக்கிறார் .
இதை கேட்ட மகள் மாரியப்பன் வீட்டுக்கு வந்ததும் அம்மா உன்னை குத்தப்போறாங்க என எச்சரித்துள்ளார் .அப்போது வீட்டில் இருந்த கத்தியை எடுத்து வந்த மனைவி கோகிலா மாரியப்பனின் முதுகில் குத்தி பதம் பார்த்துள்ளார் . வலியில் கதறிய மாரியப்பனின் குரல் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனையில் சேர்த்தனர்
இதனை அடுத்து மாரியப்பனின் வாக்குமூலத்தை அடிப்படையாக கொண்டு வழக்கு பதிவு செய்த சங்கரன்கோவில் போலீசார் கணவனை கொடூரமாக தாக்கிய மனைவி கோகிலாவை கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர்
இதையும் படிங்க: சென்னையை அலறவிட்ட முதியவர் ..நள்ளிரவில் பற்றி எரிந்த வாகனங்கள்..அதிரவைக்கும் காரணம்
இதையும் படிங்க: ஷேக் ஹசீனாவை நாடு கடத்த அழுத்தம்... இந்தியாவிடம் பூச்சாண்டி காட்டும் வங்கதேசம்... ஒப்பந்தம் அறியாத மக்கா இந்த ‘மாஸ்டர் மைண்ட்’..?