உலகம் முழுவதும் விமானங்கள் மூலம் கடத்தல் சம்பவங்கள் அரங்கேறி வருவது வாடிக்கையாகி உள்ளது. ஒரு நாட்டில் இருந்து மற்றொரு நாட்டிற்கு எளிதாகவும், விரைவாகும் பொருளை கடத்தி செல்ல முடியும் என்பதால் பெரும்பாலும் கடத்தல்காரர்களின் குறி விமானமாகவே உள்ளது. இதனை கட்டுப்படுத்தவே, ஓவ்வோரு நாட்டிலும் சுங்கத்துறை அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். திரைப்படங்களில் காட்டுவது போல, பல்வேறு பொருட்களில் மறைத்து வைத்து கடத்தப்படும் பொருட்களையும் சுங்கத்துறை அதிகாரிகள் தங்களது திறமையால் மடக்கி பிடித்துவருகின்றனர்.

இவ்வாறு கடத்தப்படும் பொருட்களில் அதிகமாக கடத்தபடுவதும், அதிக டிமாண்ட் உள்ள பொருளாக பார்க்கப்படுவதும் தங்கம் தான். குண்டுமணி அளவாவது தங்கம் அணிய வேண்டும் என விரும்பும் பெண்கள் அதிகம் உள்ள இந்தியாவில் தங்கத்தின் டிமாண்ட் என்றுமே குறைவதே இல்லை. இதன் காரணமாக பல்வேறு பகுதிகளில் இருந்து இந்தியாவிற்கு தங்கம் கடத்தி வருவதும் அதிகரித்துள்ளது. உடைக்குள் மறைத்து வைத்திருந்தும், பல்வேறு பொருட்களில் மறைத்து வைத்தும் தங்கம் கடத்தி வருவது தொடர்கிறது. சில நேரங்களில் தங்கத்தை உருக்கி, பேஸ்ட் வடிவிலும் தங்கம் கடத்தி வரும் சம்பவங்களும் அரங்கேறி உள்ளது. இதன் ஒருபகுதியாக திருச்சி விமான நிலையத்தில் ஐஸ் உடைக்கும் இயந்திரத்தில் மறைத்து வைத்து தங்கத்தை கடத்தி வந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: டெல்லி வந்த விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்: அவசர அவசரமாக ரோமில் தரை இறக்கம்..!

துபாய், சார்ஜாவில் இருந்து திருச்சி விமான நிலையத்திற்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் மூலம் தங்கம் கடத்தி வருவதாக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் சுங்கத்துறை அதிகாரிகள் பாதுகாப்பை தீவிரப்படுத்தினர். அதன்படி சார்ஜாவில் இருந்து திருச்சி விமான நிலையத்திற்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளிடம் திருச்சி விமான நிலைய மத்திய வருவாய் நுண்ணறிவுப் பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினர்.

அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் இருந்த பயணி ஒருவரை சுங்கத்துறை அதிகாரிகள் தனியே அழைத்து சென்றனர். அவரிடம் தீவிரமாக சோதனை செய்தனர். அப்போது அவர் தனது உடைமையில் வைத்திருந்த ஐஸ் உடைக்கும் எந்திரம் போலீசாருக்கு விநோதமாக பட்டது. அதை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்ததில் அதில் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தியது தெரியவந்தது. அந்த எந்திரத்தை அதிகாரிகள் உடைத்து பார்த்தனர். அப்போது, அதில் 1.39 கிலோ எடை கொண்ட ரூ.1 கோடியே 22 லட்சம் மதிப்பிலான தங்கம் இருந்தது தெரிந்தது. இதையடுத்து தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் அந்த பயணியிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: வயசுக்கு வந்த புள்ளைய தூக்கிட்டு போய் கற்பழிச்ச மாதிரி கதறுறீங்க... நாதக மகளிரணி முன்னிலையில் சீமான் சர்ச்சை பேச்சு...!