மும்மொழி கொள்கை பிரச்சனை தொடர்பாக தமிழகத்தில் நடைபெற்று வரும் தொடர் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.
பொள்ளாச்சி, சங்கரன்கோவில், குடியாத்தம் சென்னை மதுரை,நெல்லை என பல ஊர்களில் உள்ள ரயில்வே பெயர் பலகைகள் மற்றும் தபால் அலுவலகங்கள், மத்திய அரசின் பொதுவுடமை வங்கிகள் என ஹிந்தி எங்கெல்லாம் எழுதப்பட்டுள்ளதோ அவற்றையெல்லாம் கருப்பு மை கொண்டு திமுகவினர் அழித்து வருகின்றனர்.
இது மிகவும் தவறான செயல் என பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்து கண்டன அறிவிப்பும் வெளியிட்டுள்ளார்.ரயில்வே பெயர் பலகைகளை அழிக்கும் திமுக காரர்கள் ஏன்? அமலாக்க துறை மற்றும் வருமானவரித்துறை அலுவலகங்களில் உள்ள ஹிந்தி எழுத்துக்களை அழிக்க முற்படுவதில்லை என கேள்வி எழுப்பியிருந்தார்.
இதையும் படிங்க: இது இன்ப தமிழ்நாடு, இங்கு ஆதிக்கத்திற்கு இடமில்லை ஓடு! தொண்டர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்

இந்த நிலையில் பொள்ளாச்சி ரயில்வே சந்திப்பில் உள்ள ஹிந்தி எழுத்துக்களை கோவை தெற்கு மாவட்ட முன்னாள் பொறுப்பாளரான தென்றல் செல்வராஜ் தனது ஆதரவாளர்களோடு சென்று கருப்பு மையிட்டு பெயர் பலகையை அழித்தார்.
இதைக்கண்ட பாலக்காடு டிவிஷன் ரயில்வே போலீசார் உடனடி நடவடிக்கை எடுத்து தென்றல் செல்வராஜ் உள்ளிட்ட ஐந்து பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதோடு அழிக்கப்பட்ட பெயர் பலகையையும் உடனடியாக மாற்றி சரி செய்து விட்டார்கள்.
இந்த நிலையில் இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் திமுக பிரமுகரான தென்றல் செல்வராஜ் குறித்து கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

பொள்ளாச்சி இரயில் நிலையத்தில் உள்ள ஹிந்தி எழுத்துக்களை கருப்பு மையினால் அழித்தவர் பெயர் "தென்றல் செல்வராஜ்". இவர் கோவை தெற்கு மாவட்ட திமுக முன்னாள் பொறுப்பாளராக இருந்தவர்!
தற்போது திமுக சட்டதிட்ட திருத்தக் குழு உறுப்பினர், இவரது "பேரன்"அதாவது மகன் மணிமாறனின் மகன் மூன்று மொழிகள் கற்றுத்தரும் சாந்திநிகேதன் தனியார் பள்ளியில் படித்து வருகிறார்.
தென்றல் செல்வராஜின் மகள் வழி பேரன். மூன்று மொழிகள் கற்றுத் தரும் சுபாஷ்வித்யா மந்திர் தனியார் பள்ளியில் பயின்று வருகிறார்.
திமுக பிரமுகர்களின் மகன்கள் பேரன் பேத்திகள் மட்டும் ஹிந்தி படிக்கலாம்.சாதாரண ஏழை மக்களின் பிள்ளைகள் அரசுப்பள்ளிகளில் வேறுமொழி கற்றுக்கொள்ள தடுப்பார்கள். மத்திய அரசு உதவினாலும் தடுப்பார்கள், என ஹிந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் காட்டமாக விமர்சனம் செய்துள்ளார்
இதையும் படிங்க: வெட்கக்கேடானது..! தீயசக்தி திமுக எங்களை 2026ல் தெரிந்து கொள்ளும்... எடப்பாடியார் ஆவேசம்..!