தமிழகத்தில் ஒரே நாளில் இரண்டு இடங்களில் சிறுமிகளை பள்ளி ஆசிரியர்களே, பாலியல் சீண்டல்களில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்த கேள்விக்கு பதில் அளித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். இதை என்னிடம் ஏன் கேட்கிறீர்கள்? அப்பான்னு ஒருத்தர் இருக்காரு அவரிடம் போய் கேளுங்கள் என நக்கலாக பதில் அளித்தார்.
இது போன்ற செய்திகளை இதுவரை நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா ? வெறும் இரண்டு தான் வெளியே தெரிந்திருக்கிறது. வெளியில் தெரியாது எத்தனையோ சம்பவங்கள் இதுபோன்று நடந்து கொண்டுதான் இருக்கிறது.
இதையும் படிங்க: கலகலத்து வரும் நாம் தமிழர் கட்சி... மேலும் ஒரு மாவட்டச் செயலாளர் விலகல்...

இதை என்னிடம் கேட்கக் கூடாது, அப்பா என்று சொல்கிறாரே அவரிடம் போய் கேளுங்கள். அப்பா என்று வார்த்தையில் மட்டும் சொன்னால் போதாது.
நாடெங்களும் இது போன்ற பிரச்சினைகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பிள்ளைகளை பள்ளிக்கூடம் அனுப்ப முடியவில்லை, பேருந்தில் அனுப்ப முடியவில்லை, ஆட்டோவில் அனுப்ப முடியவில்லை. தமிழகம் தற்போது போதைகளின் நிலமாக மாறிவிட்டது, கலாச்சாரம் சார்ந்த நீதி சார்ந்த ஒழுக்கம் சார்ந்த நிலமாக இருந்த இடம் தற்போது மாத்திரை வடிவாகவும், அஞ்சல் தலை வடிவாகவும், சாக்லேட் வடிவமாகவும் போதை பரவி உள்ளது.
எனக்கு தெரிந்த தம்பி தங்கைகள் ஆசிரியர்களாக இருக்கும் பள்ளிக்கூடங்களில் மாணவர்கள் பயன்படுத்துவதை வேதனையோடு தெரிவிக்கிறார்கள். அவர்கள் கண்டித்தால் பெற்றோர்களும் என் பிள்ளையை நீங்கள் கண்டிக்க யார்? என கூறுவதாகவும் தெரிவிக்கிறார்கள் இந்த அளவிற்கு மோசமாக உள்ளது சூழல்.

உண்மையிலேயே தமிழக முதல்வர் அப்பாவாக வேண்டுமென்றால் கொடுஞ்செயல்களை எல்லாம் தடுக்கிற அளவிற்கு ஆட்சியை செய்ய வேண்டும். இதை செய்தால்தான் அந்த அப்பா என்ற உண்மையான உணர்வு வரும். அதை விடுத்து பிராண்டிங் செய்பவர்களை அழைத்து வந்து விளம்பர படம் எடுப்பது சரிவராது திராவிட மாடல். ஆட்சியில் தற்போது அப்பா பிராண்டிங் நடைபெற்று வருகிறது.
நாடெங்கும் பள்ளிக்கூடம் திறந்து படிக்க வைத்த எனது தாத்தன் காமராஜரையே மக்கள் அப்பா என்று சொல்லவில்லை. நாடெங்கிலும் கடையை திறந்து குடிக்க வைத்த உங்களை அப்பா அப்பா என சொல்ல வேண்டுமென சொன்னால் மயக்கத்தில் தலை சுத்துது அப்பா என்று தான் சொல்ல வேண்டும் என கிண்டலும் கேலியும் ஆக தெரிவித்தார்.
இன்று ஒரே நாளில் தமிழகத்தின் இரு பள்ளிகளில் மூன்று வயது சிறுமி மற்றும் 7 வயது சிறுமியை அவர்களது வகுப்பு ஆசிரியர்களே மோசமான பாலியல் சீண்டலுக்கு ஆளாக்கி உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: செல்லுமிடம் எல்லாம் சீமானுக்கு ஆப்பு... ராணிப்பேட்டை கிழக்கு மாவட்ட நாதக நிர்வாகி பரபர அறிப்பு...!