தங்கம் விலை தொடர்ந்து 3வது நாளாக உயர்ந்துள்ளது நடுத்தர மக்களையும், நகை வாங்க காத்திருக்கும் இல்லத்தரசிகளையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
புத்தாண்டு பிறந்தால் புது வழி பிறக்கும் என காத்திருந்த மக்களுக்கு அதிர்ச்சி தரும் வகையில் தங்கம் விலை 2025ம் ஆண்டின் தொடக்கம் முதலே உயர்ந்து வருகிறது. கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக தங்கம் விலை கிடுகிடுவென உயர்ந்து வருவது, இனி நகையை கையால் கூடத் தொடமுடியாதோ? என்ற கவலையை நடுத்தர மக்களிடையே ஏற்படுத்தியுள்ளது.
நேற்று வரலாற்றிலேயே முதல் முறையாக தங்கம் 63 ஆயிரத்தைக் கடந்த நிலையில், இன்றும் சவரனுக்கு 200 ரூபாய் அதிகரித்து ஷாக் கொடுத்துள்ளது.
இதையும் படிங்க: ஆத்தாடி...! இனி தங்கத்தை கையால் கூட தொடமுடியாது போலயே... விண்ணை முட்டும் விலை உயர்வு!
தங்கம் விலை:
சென்னையில் இன்று (வியாழன் கிழமை) சில்லறை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் கிராமிற்கு 25 ரூபாய் அதிகரித்து 7 ஆயிரத்து 930 ரூபாய்க்கும், சவரனுக்கு 200 ரூபாய் அதிகரித்து 63 ஆயிரத்து 440 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது.

அதேபோல் 24 காரட் சுத்த தங்கம் கிராமிற்கு 27 ரூபாய் அதிகரித்து 8 ஆயிரத்து 650 ரூபாய்க்கும், சவரனுக்கு 216 ரூபாய் அதிகரித்து 69 ஆயிரம் 200 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
வெள்ளி விலை:

வெள்ளி விலையில் எவ்வித மாற்றமும் இன்றி, ஒரு கிராம் 107 ரூபாய்க்கும், கிலோஒரு கிலோ ஒரு லட்சத்து 7 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது.
தங்கம் விலை உயரக் காரணம் என்ன?

அமெரிக்க அரசாங்கத்தின் கட்டணக் கொள்கைகள், குறிப்பாக சீனா, மெக்சிகோ மற்றும் கனடா மீதானவை, பணவீக்கமாகக் கருதப்படுகின்றன. முதலீட்டாளர்கள் தங்கத்தை ஒரு பாதுகாப்பாக மாற்றுகிறார்கள். இந்திய ரூபாய்க்கு நிகரான டாலரின் மதிப்பு தொடர்ந்து உயர்ந்து வருவதும் தங்கத்தின் விலை உயர மிக முக்கியமான காரணமாக பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: Gold Rate Chennai: ஒரே நாளில் இப்படி உல்ட்டா ஆகிடுச்சே... நடுத்தர மக்களை நடுங்க வைக்கும் தங்கம் விலை!