கடந்த வாரங்களில் சரசரவென ஏறுமுகத்தில் இருந்த தங்கம் விலை தற்போது சவரனுக்கு 60 ஆயிரத்தைக் கடந்து விற்பனையாகி வருகிறது. இதனால் தங்க நகைகளை கையால் கூட தொடமுடியாது போலயே என இல்லத்தரசிகள் கவலையில் இருந்தனர். தற்போது அவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும் விதமாக தங்கம் விலை தொடர்ந்து 2வது நாளாக குறைந்துள்ளது. நேற்று தங்கத்தின் விலை சவரனுக்கு 120 ரூபாய் குறைந்த நிலையில், இன்று டபுள் மடங்காக சரிந்துள்ளது.
தங்கம் விலை நிலவரம்:
சென்னையில் இன்று (செவ்வாய் கிழமை) சில்லறை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் கிராமிற்கு 30 ரூபாய் குறைந்து 7 ஆயிரத்து 510 ரூபாய்க்கும், சவரனுக்கு 240 ரூபாய் குறைந்து 60 ஆயிரத்து 080 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது.
இதையும் படிங்க: Gold Rate Chennai: புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை; ஒரே நாளில் இவ்வளவு உயர்வா?

அதேபோல் 24 காரட் சுத்த தங்கம் கிராமிற்கு 33 ரூபாய் குறைந்து 8 ஆயிரத்து 192 ரூபாய்க்கும், சவரனுக்கு 264 ரூபாய் குறைந்து 65 ஆயிரம் 536 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
வெள்ளி விலை:

சென்னையில் இன்று (செவ்வாய் கிழமை) எவ்வித மாற்றமும் இன்றி ஒரு கிராம் 104 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி ஒரு லட்சத்து 4 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
சரிவுக்கான காரணம் என்ன?

அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தைக் குறைக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவுவதால் தங்கத்தின் மீதான முதலீடுகள் குறைந்துள்ளன. இதனால் தங்கத்தின் விலை குறைந்திருப்பதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: வாரத்தின் முதல் நாளே இப்படியா? - இல்லத்தரசிகளுக்கு ஷாக் கொடுத்த தங்கம் விலை!