பெர்முடா கிராஸ் என்று சொல்லக்கூடிய அருகம் புல்லில் இருக்கும் நன்மைகளைப் பார்த்தால் நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தும். ஐந்து அறிவு ஜீவன்களான நாய், பூனைகள் கூட வயிற்றில் அஜீரண கோளாறு ஏற்பட்டு உடல் பலவீனமற்று போகும் போது அருகம்புல்லை தேடிச்சென்று சாப்பிட்டு சிறிது நேரத்தில் செரிமானம் ஆகாத பொருளை வாந்தி எடுத்து தன்னை இயற்கையாகவே தானே சரி செய்து கொள்ளும் குணாதிசயம் கொண்டது.
அறிவியல் பூர்வமாக அறுகம்புல் வைத்து எலிகளில் பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்ட போது பல வியத்தகு பதில்கள் கிடைத்தன. குறிப்பாக எலிகளில் இதயத்தை அடைத்து செயல் இழக்கக் கூடிய உணவுகள் மற்றும் ரசாயன மருந்துகள் கொடுத்து அதனை உடல் ரீதியான தொந்தரவுகளுக்கு உள்ளாக்கி, இதயத்தில் இரத்த குழாய் அடைப்பு, மாரடைப்பு என செயற்கையான வழிகளை உண்டாக்கினர். பின்னர் இந்த அருகம் புல் ஜூஸ் உணவாக கொடுத்து வந்தனர். சில நாட்களுக்கு பிறகு மீண்டும் அந்த எலியை பரிசோதனை செய்து பார்த்ததில் இரத்த குழாயில் இருந்த அடைப்பு சரியாகி மிகவும் சுறுசுறுப்புடன் ஆரோக்கியமாக இருந்ததை பார்த்து ஆராய்ச்சியாளர்கள் வியந்து போயினர். அருகம்புல்லில் உள்ள சைனாடன் டாக்டிலான் என்ற வேதிப்பொருள் தான் இதயத்தை பாதுகாப்பாக வைக்க உதவியதாக தெரிய வருகிறது. மேலும், விட்டமின் சி, பால்மிடிக் ஆசிட், பீட்டா கரோட்டின், அல்கலாய்டுகள், சாபோலின்கள் சத்துக்கள் இதயத்திற்கு செல்லக் கூடிய ரத்தக்குழாயில் படிந்துள்ள கொழுப்புகளை கரைக்கும் பண்புகளை கொண்டுள்ளதாக தெரியவந்தது. மேலும் கொலெஸ்ட்ரோல் ட்ரைக்ளிசிரைடு கெட்ட கொழுப்புகளை குறைக்கும் பண்புகளை கொண்டுள்ளது என ஆராய்ச்சிகளில் தெரிய வந்தது. எனவே இது இதயத்தை பாதுக்காக்க மிகவும் துணை புரிகிறது.

அருகம்புல் ஜூஸ் தயாரிக்கும் முறை;
அருகம்புல் - 1 கைப்பிடி
தண்ணீர் - 1 டம்பளர்
மிளகு - 1/4 தேக்கரண்டி
எலுமிச்சை சாறு - 1/2 தேக்கரண்டி
மிக்சி ஜாரில் அருகம்புல், தண்ணீர் சிறிது சிறிதாக விட்டு அரைத்து பின்னர் வடிகட்டி அதில் மிளகு, எலுமிச்சை சாறு விட்டு பருகி வரவும். இதனை தினமும் அல்லது வாரம் மூன்று முறை என நோயின் தன்மைக்கு ஏற்ப பருகி வரலாம்.
இதையும் படிங்க: நீண்ட நாள் வாழ வேண்டுமா ? உங்க இதயம் என்ன சொல்லுது...
அருகம்புல் ஜூஸ் பலன்கள் ;
உடல் பருமன் இருப்பவர்கள் தினமும் குடிப்பதால் பசி உணர்வை கட்டுப்படுத்தி LDL கொலெஸ்ட்ரோல் அளவை கட்டுப்படுத்தி எடை வேகமாக குறைந்து ஆரோக்கியமாக வாழ முடியும். மூலம் வியாதி உள்ளவர்கள் இதை தினமும் குடித்து வர மலசிக்கல் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளும். நரம்பு மண்டலத்தை சீராக்கி நரம்பு தளர்ச்சி ஏற்படாமல், நரம்புகளை வலுவடையச் செய்து மூளையை சுறுசுறுப்புடன் வைத்துக் கொள்ளும். சக்கரை அளவுகளை குறைக்கவும் அருகம்புல் மிகவும் பயன்படுகிறது. இதனை காலையில் வெறும் வயிற்றில் ஜூஸ் ஆக குடித்து வரலாம். சிறுநீரகத்தை பலப்படுத்தி, சிறுநீர் கழிக்கும் போது வரும் எரிச்சல், சிறு நீரகத்தில் கல், அடைப்பு இருந்தால் அதனை எளிதில் அகற்ற இந்த ஜூஸ் பருகி வரலாம்.

இதிலுள்ள கால்சியம் மற்றும் மக்னீசியம் மூட்டு வலி, மூட்டுத் தேய்மானம் வராமல் தடுத்து எலும்புகள் வலுப்பெறச் செய்யும். மேலும் பல் சம்மந்தமான வியாதிகளை தடுப்பதற்கும், ஈறு ஆரோக்கியத்திற்கும் மிகவும் துணை புரியும்.அனைத்து வகையான புற்று நோய் வராமல் தடுப்பதற்கு இந்த அருகம் புல் சாறு மிகவும் பயன் தரும். மாரடைப்பு வராமல் தடுப்பதற்கான தன்மை அருகம் புல் சாறில் நிறைந்துள்ளது.

பெண்கள் தினமும் குடித்து வந்தால் மாதவிடாய் கோளாறுகள், மாதவிடாய் சுழற்சி சரி செய்து, உடல் சோர்வு, கை, கால் வலியை குறைத்து புத்துணர்ச்சியோடு வைத்துக் கொள்ளும். ஆஸ்துமா வியாதிகள் சுவாசக் கோளாறு பிரச்சினைகளை சரி செய்யும் பண்பு இதில் நிறைந்துள்ளது. இரத்த சோகை உள்ளவர்கள் இதை தினமும் பருகி வந்தால் சிகப்பணுக்கள் அளவை அதிகமாகி விரைவில் ஹீமோக்ளோபின் அளவை அதிகரிக்கச் செய்யும்.
குழந்தைகளுக்கு இதை கொடுத்து வரலாமா என்று அதற்கான முயற்சியில் இறங்கும் போது, சில குழந்தைகளுக்கு உடலில் அரிப்பு உள்ளிட்ட ஒவ்வாமையை ஏற்படுதியது ஆகையால் அனைத்து குழந்தைகளுக்கும் இது சாத்தியமில்லாத ஒரு பொருள்.
இதையும் படிங்க: அன்னாசிப் பழத்தில் இத்தன்னை நன்மைகளா ? யாரெல்லாம் சாப்பிடக் கூடாது...