முதல்நாளில் தனது உரையை வாசிக்காமல் அவையை விட்டு வெளியேறி இதற்கு பிள்ளையார்சுழி போட்டார் ஆளுநர் ஆர்.என்.ரவி. அவையின் தொடக்கத்திலும், இறுதியிலும் தேசியகீதம் பாட வேண்டும் என்பது ஆளுநரின் வலியுறுத்தல். முதலில் தமிழ்த்தாய் வாழ்த்தும், கடைசியில் நாட்டுப்பண்ணும் இசைக்கப்படும் என்பதே தமிழக சட்டப்பேரவையின் மரபு என்பது திமுகவின் வாதம். இந்த விவகாரம் ஒருபக்கம் போய்க் கொண்டிருக்கிறது.

2-வது நாளில் அவை கூடியதும், மறைந்த உறுப்பினர் தமிழ்மொழி ராஜதத்தன் மற்றும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், முன்னாள் எம்எல்ஏ ஈவிகேஎஸ் இளங்கோவன் ஆகியோருக்கு இரங்கல் குறிப்புகள் வாசிக்கப்பட்டு அவை ஒத்திவைக்கப்பட்டது.
இதையும் படிங்க: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்... ரெட்டை இலை சின்னம் விவகாரம்... ஆழம் பார்க்க போட்டியிடும் அதிமுக..
3-வது நாளான இன்று ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெற உள்ளது. இந்நிலையில், தமிழக சட்டப்பேரவைக்கு அதிமுக எம்எல்ஏக்கள் கருப்புச் சட்டை அணிந்தபடி வந்தனர். அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் அரசை கண்டித்தும், காவல்துறையை கண்டித்தும் அவர்கள் கருப்புச் சட்டை அணிந்து வந்தனர்.

ஏற்கனவே யார் அந்த சார் என்ற பதாகைகளை ஏந்தி அவர்கள் அவையில் முழக்கமிட்டனர். சபாநாயகர் அப்பாவு அதற்கு எதிர்ப்பு தெரிவிக்க அதிமுகவினர் வெளிநடப்பு செய்து பேரவை வளாகத்தில் அரசுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பினர். அண்ணா பல்கலை விவகாரத்தில் உண்மைக் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட வேண்டும் என்றும் யாரோ ஒருவரை காப்பாற்ற அரசு முயல்வதாகவும் அவர்கள் குற்றஞ்சாட்டினர்.

இன்றைய தினமும் அவை நடவடிக்கைகளில் அதிமுக முழுதாக பங்கேற்காமல் வெளிநடப்பு செய்யவே வாய்ப்பு அதிகம் என்று கருதப்படுகிறது. குளிர்காலமான ஜனவரியில் கூடியுள்ள சட்டப்பேரவையை அண்ணா பல்லைக்கழக மாணவி விவகாரம் திகுதிகுவென எரியச் செய்கிறது என்பதே உண்மை.
இதையும் படிங்க: 7 முறை சம்மன்.. அசால்டா இருந்த கதிர் ஆனந்த்...!! கைதாகவும் வாய்ப்பு...பகீர் தகவல்