மார்ச் 8 ஆம் தேதியான நாளை மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. பெண்மையை போற்றும் விதமாக மகளிர் தினம் ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது மகளிர் தின வாழ்த்துக்களை கூறியுள்ளார்.

மேலும், பெண்களுக்கு பாதுகாப்பான சூழல் என்றைக்கு ஏற்படுகிறதோ, அன்று தான் உண்மையான மகளிர் நாளாக அமையும் என்றும் அத்தகைய நிலையை ஏற்படுத்துவதற்காக உழைக்க இந்த நாளில் அனைவரும் உறுதியேற்றுக் கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: இளையராஜா இந்தியாவுக்கே பெருமை... புகழாரம் சூட்டும் பாமக தலைவர் அன்புமணி..!

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆக்கும் சக்தியாகவும், காக்கும் சக்தியாகவும் திகழும் மகளிரைப் போற்றும் உலக மகளிர் தினம் நாளை கொண்டாடப்படும் நிலையில், உலகெங்கும் வாழும் மகளிருக்கு இனிய வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதாக கூறியுள்ளார்.
உலகம் எங்குமே பெண்கள் பலவீனமானவர்கள் என்ற பொய்யான நம்பிக்கை நிலவி வருகிறது., ஆண்களைவிட பெண்களுக்குத் தான் போர்க்குணம் அதிகம். ஆண்கள் வென்று விட்டதாக பெருமிதப்பட்டுக் கொண்டாலும், அவர்களின் வெற்றிக்கு பின்னணியில் இருப்பது பெண்கள் தான் என தெரிவித்தார் .

சங்க காலத்திலிருந்து நிகழ்காலம் வரை இதற்கு ஏராளமான நாயகியரை உதாரணமாகக் கூற முடியும் என கூறியுள்ள அன்புமணி, உலகிலேயே மகளிருக்கு மிக அதிக மரியாதை வழங்கும் சமுதாயம் தமிழ்ச் சமுதாயம் என்றும் பெண்களை கடவுளுக்கும் மேலாக வைத்து வழிபடும் சமுதாயமும் தமிழ்ச் சமுதாயம் தான் எனவும் கூறினார்.
மனித நாகரிகங்கள் வளரக் காரணமாகவும், வாழ்வாதாரம் மற்றும் பாசன ஆதாரமாகவும் திகழும் நதிகளுக்குக் கூட பெண்களின் பெயரை சூட்டியதிலிருந்தே மகளிரை தமிழ் சமுதாயம் எந்த அளவுக்கு மதித்திருக்கிறது என்பதை உணர்ந்து கொள்ளலாம் என சுட்டிக்காட்டிய அன்புமணி, நடைமுறை வாழ்விலும் அதே மரியாதை வழங்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
இதையும் படிங்க: அமித் ஷா சொன்னது நினைவிருக்கா?... ஸ்டாலினை அவசரப்படுத்தும் அன்புமணி...!