அதிமுகவின் கோட்டையாக இருந்த கோவையில் மாவட்டத்தில்,10க்கு 10 தொகுதிகளில் அதிமுக வென்று தற்போது 10 எம்எல்ஏக்கள் அதிமுக வசம் உள்ளனர்.
அதில் முக்கியமானவர் தான் கோவை வடக்கு தொகுதியின் அம்மன் அர்ஜுனன். வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கூறி லஞ்ச ஒழிப்பு போலீசார் இன்று அதிரடி சோதனை செய்தனர்.
2016ஆம் ஆண்டிலிருந்து 2022 ஆம் ஆண்டு வரை எம்எல்ஏவாக இருந்த காலத்தில் அம்மன் அர்ஜுனன் தனது வருமானத்திற்கு அதிகமாக சுமார் 71.19 சதவீதம் அளவிற்க்கு கூடுதல் சொத்து சேர்த்திருப்பதாக காவல்துறை வழக்கு பதிவு செய்து சோதனை நடத்தி இருக்கிறது.
இதையும் படிங்க: வெட்கக்கேடானது..! தீயசக்தி திமுக எங்களை 2026ல் தெரிந்து கொள்ளும்... எடப்பாடியார் ஆவேசம்..!

இதுகுறித்து கடும் கண்டனம் தெரிவித்திருந்த தமிழக எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, கோவை மாநகர மாவட்ட கழக செயலாளரும், கோவை வடக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான அன்புச் சகோதரர் அம்மன் அர்ஜுனன் மீது லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையை ஏவியுள்ள திராவிட மாடல் திமுக அரசுக்கு எனது கடும் கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
தற்போது தமிழ்நாட்டில் நடக்கும் விடியா திமுகவின் ஸ்டாலின் மாடல் ஆட்சியில் ஊழல் நடக்காத துறையே இல்லை. நாடறிந்த ஊழல் திலகங்களான இவர்கள் நாட்டில் நடக்கும் பிரச்சினைகளையும் அதனை சரி செய்ய வக்கில்லாத தங்கள் நிர்வாக திறமையின்மையையும் மறைக்க திசை திருப்ப ஏவும் ஆயுதங்களில் ஒன்றாக மாறிவிட்டது தான் இந்த லஞ்ச ஒழிப்பு துறை சோதனை.

அதிலும் கடந்த சில வாரங்களாக ஊர் ஊராக செல்லும் முதல்வர் ஸ்டாலின் தான் நடத்தும் காட்டாட்சிக்கு மக்களிடையே இருக்கும் பெரும் வெறுப்பையும் அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என்ற மக்களின் ஒருமித்த எண்ணத்தையும் உணர்ந்ததன் வெளிப்பாடு தான் நம் கழக சட்டமன்ற உறுப்பினர் மீது ஏவப்பட்டுள்ள இந்த சோதனை.
இரண்டாவது முறையாக சட்டமன்ற உறுப்பினராக உள்ள அன்புச் சகோதரர் அம்மன் கே.அர்ஜுனன் திறம்பட வேலை செய்து வரும் கழகப் பணியை தடுக்கும் விதமாக லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையை செய்வது வெட்கக்கேடானது. இது எங்களை எதிர்த்து எதுவரேனும் எவர்வரினும் துஞ்சாத எதிர்கொள்வோம். 2026 இல் கழக ஆட்சி அமைப்போம் என எடப்பாடி பழனிச்சாமி தனது கண்டன அறிக்கைகள் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேட்டி அளித்துள்ள கோவை வடக்கு சட்டமன்ற உறுப்பினர் அம்மன் அர்ஜுனன் காலையில் நடை பயிற்சி செய்து கொண்டிருந்தபோது தகவல் வந்தது. நான் வந்து முழு ஒத்துழைப்பு கொடுத்தேன். இந்த சோதனை முன்பே வரும் என எதிர்பார்த்தேன் என கேஷுவலாக கூறினார்.
சோதனை தொடர்ந்து நடந்து கொண்டிருக்கும் வேளையில் அதிமுக மூத்த தலைவர்களில் ஒருவரான செங்கோட்டையனும், உள்ளூர் முன்னாள் அமைச்சராக இருந்த எஸ் பி வேலுமணியும், அருண்குமார் எம்எல்ஏ எம்எல்ஏ உள்ளிட்ட பல அதிமுக பிரமுகர்கள் தொண்டர்கள் அம்மன் அர்ஜுன் வீட்டிற்கு வந்து குவிந்த வண்ணம் இருந்தனர்.
இதையும் படிங்க: அதிமுக எம்.எல்.ஏ., வீட்டில் ரெய்டு..! ஆதரவாளர்கள் எதிர்ப்பு... கோவையில் பரபரப்பு..!