தமிழகம் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையால் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வருகின்றனர். அவர்களது படகுகள், வலைகள், மீன்கள் அனைத்தும் பறிமுதல் செய்யப்படுகிறது. கைது செய்யப்படும் மீனவர்கள் சிறையில் அடைக்கப்படுகின்றனர். அதுமட்டுமல்லாது அதிக தொகை அபராதமாக அவர்களுக்கு விதிக்கப்படுகிறது.

மீனவர்கள் கைது விவகாரம் தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி நிரந்தர தீர்வு காணவேண்டும் என்றும் தங்களது வாழ்வாதாரம் பாதிக்காத வண்ணம் நடவடிக்கை எடுக்குமாறு மீனவர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
இதையும் படிங்க: தூத்துக்குடிக்கு உடனே புது ரோடு வேணும்..! நிதின் கட்கரியிடம் கறார் காட்டிய கனிமொழி..!
இதனிடையே இன்று நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 3 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். மேலும், மீனவர்களின் விசைப்படகையும் பறிமுதல் செய்துள்ளனர். எல்லைத்தாண்டி மீன் பிடித்ததாக ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை குற்றம் சாட்டி உள்ளது. கைது செய்யபட்ட மீனவர்கள் காங்கேசன்துறை கடற்படை முகாமுக்கு இலங்கை கடற்படையினர் அழைத்து சென்றனர்.

இப்படி ஒவ்வொரு முறை மீனவர்கள் கைதாகும் போதும் முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்ஷங்கருக்கு கடிதம் எழுதி வருm நிலையில் அடுத்த மாதம் பிரதமர் மோடி இலங்கை செல்ல உள்ளார். எனவே இந்த விவகாரத்திற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்ற எதிர்பார்ப்பு மீனவர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

இந்த நிலையில், தமிழ்நாடு மீனவர்கள் இலங்கை கடற்படையால் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வரும் நிலையில் திமுக எம்பி கனிமொழி மத்திய வெளியுறவுத் துறை அமைச்சரை நேரில் சந்திக்க நேரம் கேட்டு கடிதம் எழுதியுள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக மீனவர் சங்க பிரதிநிதிகளுடன் சந்திக்க வருவதாகவும், விரிவாக ஆலோசிக்க நேரம் ஒதுக்குமாறும் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்ஷங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
மார்ச் 6ஆம் தேதி 14 மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் இதுவரை 107 மீனவர்கள் இலங்கை அரசால் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர் எனவும் கனிமொழி தெரிவித்துள்ளார். 227 படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்று தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ள கனிமொழி, இந்த விவகாரம் தொடர்பாக விரிவான ஆலோசனை நடத்த நேரம் ஒதுக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.
இதையும் படிங்க: தமிழக மக்களை முட்டாளாக்க முடியாது... ஜெயலலிதா அவமானப்படுத்தப்பட்டதை வரலாறு மறக்காது- தர்மேந்திர பிரதான்..!