தமிழகத்தில் ஆளும் திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகளுக்கும், பாஜகவுக்கும் இடையே மொழி தொடர்பான விவாதங்கள் கடுமையாக இருந்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு ஒதுக்கும் நிதியைவிட, சம்ஸ்கிருதத்துக்கும், இந்தி மொழி வளர்ச்சிக்கும் மத்திய அரசு ஒதுக்கும் நிதி அதிகமாக இருப்பதாக தமிழ் மொழி ஆர்வலர்கள் ஆதங்கம் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சூழலில் ரவிச்சந்திரன் அஸ்வின் கருத்து அந்த விவாதத்தை மேலும் சூடாக்கியுள்ளது.

சென்னையில் நேற்று தனியார் கல்லூரி பட்டளமளிப்பு விழா நிகழ்ச்சி ஒன்றில் இந்திய அணியின் முன்னாள் வீரர் ரவிச்சந்திர அஸ்வின் பங்கேற்றார். அப்போது அஸ்வின் பேசுகையில் “ இங்கு அமர்ந்துள்ள மாணவர்களுக்கு தமிழ் அல்லது ஆங்கிலம் அல்லது இந்தி எத்தனைபேருக்குப் புரியும். ஆங்கிலம் மட்டும் வீட்டில் பேசுகிறவர்கள் சத்தமிடுங்கள், தமிழ்(மாணவர்கள் கோஷமிட்டனர்), இந்தி( என்றவுடன் மாணவர்கள் சத்தம் குறைவாக இருந்தது)” என்று கேட்டார். அப்போது மாணவர்கள் அமைதியாக இருந்தனர்.

அதன்பின் பேசிய அஸ்வின் “யாரேனும் இந்தியில் கேள்வி கேட்கிறீர்களா(சரியான பதில்இல்லை) நான் ஒன்றை இங்கு சொல்ல விரும்புகிறேன். இந்தி நமது தேசிய மொழி அல்ல. அது அலுவல் மொழிதான்.
கேப்டன் பொறுப்பெல்லாம் எனக்கு சரியாக வராது சிலர் என்னைப் பார்த்து என்னால் முடியாது என்றபோது, நான் எனுக்குள் எழுந்து அதை செய்து முடித்தேன். அதே சிலர் என்னால் முடியும் என்று சொல்லியிருந்தால், அதன் விருப்பத்தை இழந்திருப்பேன். நான் பொறியியல் பட்டதாரி. பொறியியல் பேராசிரியர்கள் யாரேனும் நான் கேப்டனாக வரமுடியாது என்று கூறியிருந்தால், நான் கடினமாக உழை்திருப்பேன். ஆதலால் மாணவர்கள் தங்கள் குறிக்கோளில் கவனமாகவம், நிலையாகவும் இருக்க வேண்டும்.
இதையும் படிங்க: தந்தையின் இதயத்தை உடைத்த அஸ்வின்... மனம் உடைந்த கடைசி நிமிடம்..!

நமது வாழ்க்கை முழுவதும் கற்றுக்கொள்ள வேண்டும். மாணவராக இருந்தால், நீங்கள் கற்பதை நிறுத்தவே கூடாது. கற்பதை நிறுத்தினால் நீங்கள் தேங்கிவிடுவீர்கள்” எனத் தெரிவித்தார்
தமிழகத்தில் இந்தி மொழிப் பிரச்சினை என்பது கலாச்சார, வரலாற்று, அரசியல் ரீதியாகவே சிக்கலுக்குரிய விஷயமாக இருந்து வருகிறது. கடந்த 1930 முதல் 1940களில் தமிழகத்தில் இந்தி மொழியை பள்ளிகளிலும், அரசு நிர்வாகத்திலும் அமல்படுத்த கடும் எதிர்ப்புக் கிளம்பியது. தமிழகத்தில் திராவிட இயக்கங்கள் தோன்றியபின், தமிழ் மொழியைக் காக்கவும், இந்தி மொழி திணிப்பை எதிர்த்தும் கடுமையான போராட்டம் நடத்தினர். இந்தி திணிப்பால் தமிழகத்தில் கலாச்சார, மொழிப்பாரிம்பரியத்துக்குரிய முக்கியத்துவத்தை குறைக்கிறது என்று போராட்டம் நடத்தப்பட்டது.
தமிழத்தில் திராவிட அரசியல் கட்சிகள் மாநில மொழியான தமிழுக்குத்தான் முக்கியத்துவம் அளிக்கின்றன. இந்தி மொழியை ஊக்கப்படுத்துவது என்பது, மாநில மொழியான தமிழையும், உள்நாட்டு மக்களையும் சிறுமைப்படுத்துவது போலாகும் என்று கூறுகின்றன
இதையும் படிங்க: இந்திய அணியின் மோசமான ஆட்டம்... ரோஹித் - விராட் கோலியை கதறவிடும் ரசிகர்கள்..!