சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப்போட்டி துபாயில் நடைபெற்றது. இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர்களின் அதிரடி பந்துவீச்சினால் அடுத்தடுத்து விக்கெட்டுகளை நியூசிலாந்து அணி இழந்தது. இதில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி சாம்பியன்ஸ் டிராபியை வென்று அசத்தியது.

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங், மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள், வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
இதையும் படிங்க: அமித்ஷா ஒரே போடு… பயமுறுத்திய செங்கோட்டையன்... அதிமுகவை ஒன்றிணைக்க சம்மதித்த எடப்பாடியார்..!
இந்நிலையில், சாம்பியன்ஸ் டிராபி வென்ற இந்திய அணிக்கு குடியரசு தலைவர் திரவுபதி முர்மு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான வாழ்த்துச் செய்தியில், ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி வென்ற இந்திய அணிக்கு மனமார்ந்த வாழ்த்துகள். இக்கோப்பையை மூன்று முறை வென்ற ஒரே அணி என்ற பெருமை இந்தியாவிற்கு கிடைத்துள்ளது. இந்த வரலாற்றை படைத்ததற்காக, வீரர்கள், நிர்வாகம் மற்றும் பயிற்சியாளர்கள் என அனைவருக்கும் பாராட்டுகள். இந்திய கிரிக்கெட்டுக்கு சிறந்த எதிர்காலம் கிடைக்க வாழ்த்துகள் என் கூறியுள்ளார்.

மேலும், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா விடுத்துள்ள வாழ்த்து செய்தியில், இந்த வெற்றி வரலாற்றை உருவாக்கி உள்ளது. ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரை வென்ற இந்திய அணிக்கு வாழ்த்துகள். நமது அனல் பறக்கும் ஆற்றலும், ஆடுகளத்தில் நமது அசைக்க முடியாத ஆதிக்கமும் தேசத்தை பெருமைப்படுத்தியது. இந்த வெற்றி புதிய அளவுகோலை அமைத்துள்ளது என கூறியுள்ளார்.

இதே போல், ராகுல்காந்தி விடுத்துள்ள வாழ்த்து செய்தியில், கோடிக்கணக்கான இதயங்களை பெருமையால் நீ நிரப்பி உள்ளீர்கள் என கூறியுள்ளார்.

அற்புதமான ஓட்டம், தனிப்பட்ட செயல்திறன் மற்றும் களத்தில் அபார ஆதிக்கத்தால் குறிக்கப்பட்டது என் அனைத்தும் உண்மையிலேயே ஊக்கமளிப்பதாக இருந்தது. வாழ்த்துகள் சாம்பியன்ஸ் என கூறியுள்ளார்.
இதையும் படிங்க: அமித் ஷா வைத்த செக்..! தமிழில் பொறியியல், மருத்துவப் படிப்புகள் இருக்கிறதா..? உண்மை நிலை என்ன..? கேள்விகளும் விளக்கங்களும்..!