சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் பொறுப்பாளர்களுடன் கலந்தாய்வு கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், பீகார் போல தமிழ்நாடு மாறிவிட்டது. மக்களுக்கு பாதுகாப்பு இல்லை என திமுக மீது குற்றச்சாட்டினார்.

விஜய் ரசிகர்களை சந்தித்து தேர்தலுக்கு வருகிறார். நான் மக்களை சந்தித்து வருகிறேன். விஜய் உடைய அரசியல் குறித்த கவலை அவருக்குத்தான் எனக்கு இல்லை எனத் தெரிவித்தார். மேலும் தமிழ்நாடு அரசு ஒன்பதரை லட்சம் கோடி கடனில் உள்ளது. மாணவர்களுக்கு குடுத்த லேப்டாப்பை ஏன் நிறுத்திவைத்தார்கள், இப்போது ஏன் புதிதாக கொடுக்கிறீர்கள் என கேள்வி எழுப்பினார்.
இதையும் படிங்க: அதை நாங்கதான் செய்யணும்.. நீங்க ஏன் போராடுறீங்க அண்ணாமலை..? சீமான் சுளீர் கேள்வி.!

பெரியார் விருதை திருப்பி அளித்தது கோபி நயினார் தன்மானத்தை காட்டுவதாக கூறிய அவர், ஒரே நாடு ஒரே தேர்தலை முதலில் ஆதரித்து பேசியவர் கலைஞர் என்று கலைஞரைப் போல மிமிக்கிரி செய்தார்.

அப்போது கூட்டணி குறித்த கேள்விக்கு என்னை போல் செய்தியாளர்கள் கேட்கும் கேள்விக்கெல்லாம் இப்படிப்பட்ட தலைவர் யாராவது பதில் சொல்ல முடியுமா? குறிப்பாக டாஸ்மார்க் ஆயிரம் கோடி ஊழல் ,தமிழ்நாட்டில் கொலைகள் நடக்கிறது என திமுக கூட்டணியில் உள்ளவரிடம் இந்த கேள்வி கேட்டு அவர்கள் பதில் சொல்லிவிட்டால் நான் கூட்டணி வைக்கின்றேன் என்று கூறினார்.
இதையும் படிங்க: இன்னும் ஏன் சரி பண்ணல? தன்னைத்தானே மண்ணுக்குள் புதைத்துக் கொண்ட நாதக நிர்வாகி!