026 சட்டமன்றத் தேர்தல் பணிகளை தொடங்க தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் கட்சி நிர்வாகிகளுக்கு அறிவுரை வழங்கி இருப்பதாகக் கூறப்படுகிறது.
நான்கு மண்டலங்களாகப் பிரித்து வாக்குச்சாவடி முகவர்களுக்கு பயிற்சி அளிக்க முடிவு செய்திருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. 2026 சட்டமன்ற தேர்தல் பணிகளை தீவிரமாக தொடங்க விஜய் உத்தரவிட்டுள்ளார். ஒவ்வொரு வாக்குச்சாவடிகளிலும் 10 முதல் 15 முகவர்களை நியமிக்க அவர் உத்தரவிட்ட்டுள்ளார். தமிழக வெற்றி கழகத்தின் உட்கட்டமைப்புகளை வலுப்படுத்துவதற்காக விஜய் தொடர்ச்சியாக மாநில நிர்வாகிகளுடன் ஆலோசித்து வருகிறார்.

அதன் முதற்கட்டமாக ஆதவ் அர்ஜுனாவிடம் இந்த பொறுப்பை ஒப்படைத்துள்ளதாக கூறப்படுகிறது. தேர்தல் மேலாண்மை பொதுச் செயலாளர் என்கிற அடிப்படையில் அவர் இந்தப்பணிகளை மேற்கொள்ள இருக்கிறார். 2026 தேர்தல் சட்டமன்ற தேர்தல் நெருங்கி கொண்டிருக்கக் கூடிய சூழலில் தமிழக முழுவதும் உள்ள வாக்குச்சாவடிகளில் முகவர்கள் பயிற்சி கூடங்கள் அமைக்கவும் திட்டமிடப்பட்டிருக்கிறது.
இதையும் படிங்க: தமிழகம் முழுவதும் தடம் பதிக்கப்போகும் விஜய்... முக்கிய அறிவிப்பால் திக்குமுக்காடும் தவெக தொண்டர்கள்...!
மண்டல வாரியாக வாக்கு சாவடி முகவர்கள் பயிற்சி கூடங்களை நடத்த விஜய் திட்டமிட்டு இருக்கிறார். ஒவ்வொரு வாக்குச் சாவடிகளிலும் 10 முதல் 15 முகவர்களை நியமித்து, அதில் பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. மாவட்ட செயலாளர்களை நியமிக்கும் முன் மூன்றில் ஒரு பங்கு பெண்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படும் என்று கூறப்பட்டது. ஆனால், பெரும்பாலான மாவட்டங்களுக்கு ஆண் மாவட்டச் செயலாளர்களே நியமிக்கப்பட்டுள்ளனர்.

இருப்பினும் வாக்குச்சாவடி முகவர் நியமனத்தில் பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 10 லிருந்து 15 முகவர்களில் அதிகமாக பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. திமுக, அதிமுக, விசிக பாணியில் இல்லாமல் புதிய திட்டத்தை பயன்படுத்த ஆடஹவ் அர்ஜூனாவுக்கு விஜய் அறிவுறுத்தி இருப்பதாக கூறப்படுகிறது. 2026 சட்டமன்றத் தேர்தலை ஒட்டி அனைத்து தொகுதிகளிலும் வாக்குச்சாவடி முகவர்களை நியமனம் செய்து, தேர்தல் பணிக்கான பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
2023 ஆம் ஆண்டு விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இணைவதற்கு முன்னதாகவே 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற பொதுத் தேர்தலை ஒட்டி அனைத்து நாடாளுமன்ற தொகுதி வாக்குச் சாவடிகளில் முகவர்களை நியமனம் செய்து தேர்தல் பணிக்கான பயிற்சி அளித்தவர் ஆஅதவ் அர்ஜூனா. அவரின் அந்த அனுபவம் தவெகவுக்கு கைகொடுக்கும் என நம்பப்படுகிறது. தமிழகதை நான்கு மண்டலமாக பிரித்து விசிக முகவர்களை நியமித்து அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

இந்த நிலையில் திமுக, விசிக, அதிமுக எடுத்த பாணியில் இல்லாமல் புது யுக்தியில் இந்த முகவர்கள் நியமனத்தில் கடைப்பிடிக்க விஜய் அறிவுறுத்தி இருக்கிறார். இந்த விஷயத்தில் வேறு எந்த கட்சியும் செயல்படுத்த திட்டங்களை செயல்படுத்த வேண்டும் எனவும் அவர் உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. மிக விரைவில் அதாவது, வரும் 26 ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் ஆண்டு நிறைவு விழாக்குப் பிறகு களத்தில் இறங்கி வேலைகள் செய்ய விஜய் அறிவுரை வழங்கியிருப்பதாகவும் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: தவெகவுக்கு கமல் சொன்ன திடீர் எச்சரிக்கை, புரிந்துக்கொள்வாரா விஜய்?