கடந்த 2024ம் ஆண்டு 18ம் தேதி கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணயம் வெளியிடப்பட்டது. அந்த நாணயத்தில் இந்திலும், ஆங்கிலத்திலும் 'தமிழ் வெல்லும்' என்ற சொல் மட்டும் ஆங்கிலத்தில் இருந்தது.
தமிழக முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான மறந்த கருணாநிதியின் நூற்றாண்டு விழா கடந்த 2023 ஜூன் மூன்றாம் தேதி முதல் ஓராண்டாக திமுகவினரால் கொண்டாடப்பட்டது. கலைஞரின் நூற்றாண்டு விழாவை ஒட்டி 100 ரூபாய் நினைவு நாணயத்தை வெளியிட தமிழக அரசு மத்திய அரசிடம் அனுமதி கேட்டு இருந்தது. மத்திய அரசு அனுமதி மத்திய அமைச்சர் ராஜநாத் சிங் கலந்து கொண்டு 100 ரூபாய் நினைவு நாணயத்தை வெளியிட்டார்.

அந்த நாணயம் வெளியிடப்பட்டபோதே பெரும் சர்ச்சைகள் வெடித்தன. ''இந்திய அரசு வெளியிடும் அனைத்து நாணயங்களிலும் இந்தி இடம் பெற்றிருக்கும். இதற்கு முன்னர் அண்ணா, எம்.ஜி.ஆருக்கு வெளியிடப்பட்ட நினைவு நாணயங்களிலும் இந்திதான் இருந்தது. அண்ணா மீது ஆணையாக சொல்கிறேன். தமிழகத்தின் உரிமைகளை ஒருபோதும் விட்டுக் கொடுக்க மாட்டோம்.நாட்டு நடப்பை தெரிந்திருக்க வேண்டும் அல்லது மண்டையில் மூளையாவது வேண்டும்" என ஆவேசப்பட்டு இருந்தார் மு.க.ஸ்டாலின்.
இதையும் படிங்க: அமித் ஷா போட்ட பதிவுல இதை கவனிச்சீங்களா?.... துள்ளாட்டம் போடும் அண்ணாமலை ஆதரவாளர்கள்...!
இப்போது மும்மொழி கொள்கையை ஏற்றுக் கொள்ள மறுத்து வருகிறார். தமிழக அரசு மும்மொழிக் கொள்கையை ஏற்றுக் கொண்டால் மட்டுமே கல்வி நிதியை விடுவிப்போம் என இரு தரப்பும் பிடிவாதம் காட்டி வருகின்றன.

''இந்தப் போரில் ஒருபோதும் சமரசமில்லை. நம் உயிர்நிகர்த் தலைவர் முத்தமிழறிஞர் கலைஞர் நமக்கு வழங்கியுள்ள ஐம்பெரும் முழக்கங்களில் மூன்றாவது முழக்கம், 'இந்தித் திணிப்பை என்றும் எதிர்ப்போம்' என்பது. இன்றும் அதனை எதிர்க்கிறோம். 'இந்தி படிக்காதே!" என்று யாரையும் தடுக்கவில்லை'' என விடாப்பிடி காட்டி வருகிறார் மு.க.ஸ்டாலின்.
இந்நிலையில்தான், ’கருணாநிதிக்கு 100 ரூபாய் நாணயம் வெளியிட்டில் இந்தி மொழி இருக்கிறது. இந்நிலையில், கலைஞர் நூற்றாண்டு நாணயத்தில் மட்டும் இந்தி இனிக்குதா? எனக் கேட்டு திமுகவுக்கு கிடுக்குப்பிடி போட்டு வருகின்றனர் பாஜகவினர்.
அந்த நாணயத்தில், "கலைஞர் M.கருணாநிதி கீ ஜன்ம சதாப்தி " அதாவது கலைஞர் எம் கருணாநிதி நூற்றாண்டு என்று இருக்கிறது.நாணய வெளியீட்டின் போது இரு மொழியே போதும். இந்தி வேண்டாம் என்று மறுக்காதது ஏன்? பாஜக எதிர்ப்பை அரசியல் நாடகத்திற்கு பயன்படுத்தும் திமுக மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், மத்திய அமைச்சர் எல். முருகன், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோரை அழைத்தது ஏன்?

ரயில் நிலையத்தில் இந்தி மொழியை அழிக்கும் போலி இந்தி எதிப்பு அரசியல் கோமாளிகளே கருணாநிதி நாணயத்தில் இந்தி இருக்கிறதே... இந்த நாணயமும் வேண்டாம், நாணய வெளியிடும் விழாவும் வேண்டாம் என்று சொல்லி புறக்கணித்து இருக்கலாமே... 100 ரூபாய் நாணயத்தை 6 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கிய அதிமேதாவிகள் இன்று நடந்து கொள்வது சந்தர்ப்பவாத அரசின் தோல்வியை மறைக்கும் மடைமாற்றும் அரசியல்'' எனக் கொதிக்கிறார்கள்.
இதையும் படிங்க: 'பாசிசத்துக்கும்-பாயாசத்திற்கும் சண்டை..' இட்ஸ் வெரி ராங் ப்ரோ… திமுக- பாஜகவை வெளுத்தெடுத்த விஜய்..!