தமிழகத்திற்கு கல்வி, பேரிடர் நிதி தர மறுக்கும் மத்திய அரசை கண்டித்தும், கோவை வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வருகையை கண்டித்தும் நடத்தப்பட்ட இந்த ஆர்ப்பாடத்தில் காங்கிரஸ் கட்சி மாநில தலைவர் செல்வபெருந்தகை பங்கேற்றார். கையில் கருப்பு கொடிகளுடனும், கருப்பு பலூன்களுடனும் , அமத்ஷாவிற்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பாதகைகளுடன் காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் பங்கேற்றனர்.

ஆர்ப்பாட்டத்தில் பேசிய செல்வபெருந்தகை, அம்பேத்கர், இந்திரா காந்தி ஆகியோரை இழிவாக பேசிய உள்துறை அமைச்சரை கண்டித்தும்,
தமிழ்நாட்டில் முன்மொழிக் கொள்கையை நடைமுறை படுத்துவோம், இந்தியை திணிப்போம், புதிய கல்விக் கொள்கையை திணிப்போம் என்று இறுமாப்போடு சொல்லி வருகின்ற ஒன்றிய அரசை கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடக்கின்றது என தெரிவித்தார்.
இதையும் படிங்க: காங்கிரஸை எதிர்த்தால் மட்டுமே செல்வாக்கு... சிங்கப்பாதைக்கு அடிப்போட்ட சசி தரூர்..!

அரசு இயந்திரங்கள் அனைத்தையும் கையில் வைத்துக் கொண்டு இந்த ஜனநாயகத்தை ஒன்றிய அரசி சீர்குலைக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள் எனவும், நம்முடைய அரசியல் அமைப்பு சட்டம் என்பது வலிமையான சட்டம், இந்த அரசியல் அமைப்பு சட்டத்தை நசுக்க வேண்டும் என்று துடித்துக் கொண்டிருக்கிறார்கள் என தெரிவித்தார். ஒரே தேர்தல் , ஒரு நாடு ஒரு ரேஷன் அட்டை , ஒரு மொழி, ஒரு அதிபர் என்ற திட்டத்தில காய் நகர்த்திக் கொண்டிருக்கிறார்கள் எனவும், இதன் உச்சபட்சமாக தான் 39 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்கும் தமிழ்நாட்டடில், மக்கள் தொகை விகிதாச்சாரத்தின் அடிப்படையில 8 நாடாளுமன்ற உறுப்பினர்களை குறைத்து 31 ஆக மாற்றப்போவதாக கொக்கரிக்கிறார்கள் என தெரிவித்தார்.

இந்த தேசத்தில் மக்கள் தொகையை கட்டுப்படுத்த வேண்டும் என்று குடும்ப கட்டுப்பாடு திட்டம் கொண்டு வரப்பட்டதில் தமிழ்நாடு முதன்மையாக செயல்பட்ட மாநிலம் எனவும், விழிப்புணர்வு பேரணி நடத்தி, விழிப்புணர்வு பிரச்சாரங்களை கொடுத்து குடும்ப கட்டுப்பாடு ஏன் வேண்டும் என்பதை உணர்த்தி அதை கொண்டு வந்து முன்னோடியாக தமிழ்நாடு திகழ்ந்து கொண்டு இருக்கின்றது எனவும், நாம் கட்டுப்பாடோடு ஒன்றிய அரசு சொல்லுகின்ற இந்த தேசத்திற்கான திட்டத்தை நடைமுறைப்படுத்தினோம், இந்த நாட்டிற்கான திட்டத்தை நடைமுறைப்படுத்தினோம் எனவும், ஆனால் அதை தவறு என்று விகிதாச்சாரப்படி மக்கள் தொகை கணக்கெடுப்பபடி நீங்கள் குறைந்திருக்கிறீர்கள் என மத்திய அரசை சாடினார்.

உத்தரபிரதேசத்தில் மக்கள் தொகை உயர்ந்திருக்கிறது அதனால் இங்கே எட்டு தொகுதி குறைப்போம், அங்கே 8 தொகுதியை அதிகப்படுத்துவோம் என்று சொன்னால் இதுதான் வரலாற்று சிறப்புமிக்க தவறு எனவும் தெரிவித்தார்.
இந்த தவறை கண்டித்து தான் வருகின்ற ஐந்தாம் தேதி அனைத்து கட்சி கூட்டத்தை நம்முடைய முதல்வர் கூட்டி இருக்கின்றார் எனவும் தெரிவித்தார். இருமொழிக் கொள்கையை படித்துத்தான் அப்துல் கலாம் , மயில்சாமி அண்ணாதுரை போன்ற ஏராளமான விஞ்ஞானிகளை உருவாக்கி இருக்கிறோம் எனவும் தெரிவித்த அவர்,
இந்தி திணிப்பு இருக்காது , விரும்பும் வரை இரு மொழி கொள்கை மட்டும் இருக்கும் என நேரு அரசாணை கொடுத்து இருக்கின்றார் எனவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: அமித் ஷா முன்பு அசிங்கப்பட்ட செல்வப்பெருந்தகை... கதறவிட்ட காங்கிரஸ் கதர் சட்டைகள்...!