தமிழகம் முழுவதும் பத்திற்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்டு வருகின்றனர். சென்னையில் உள்ள டாஸ்மார்க் தலைமை அலுவலகத்திலும் சோதனை நடைபெற்று வருகிறது.
இந்த சோதனைக்கும் அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கிற்கும் என்ன தொடர்பு இருக்கிறது மேலும் எங்கெங்கெல்லாம் இந்த சோதனை நடைபெற்று வருகிறது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
சென்னை உட்பட தமிழகம் முழுவதும் பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத் துறையினர் இன்று காலை முதலே தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக சென்னை, கரூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இந்த சோதனையானது நிகழ்த்தப்பட்டு வருகிறது. சிஆர்பிஎப் வீரர்கள் உதவியுடன் இந்த சோதனையானது நடைபெற்று வருகிறது. அதாவது குறிப்பாக அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய புகாரை அடுத்து இந்த புதிதாக அமலாக்கத் துறையினர் ஒரு வழக்கை பதிவு செய்துள்ளனர். இதையடுத்து அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் இந்த சோதனையானது நிகழ்த்தப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க: செந்தில் பாலாஜிக்கு குறி.. மதுபான நிறுவனங்களிலும் ரெய்டு- பின்னணியை விளக்கிய ED அதிகாரி..!
அமைச்சர் செந்தில் பாலாஜியின் நண்பர் மற்றும் அவர் பொறுப்பு வகித்துள்ள மதுபானம் மற்றும் ஆயர் தீர்வு தொடர்புடைய இடங்களிலும் சோதனையானது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதாவது இந்த மதுபான கொள்முதல் தொடர்பாக எழுந்த முறைக்கேடு புகார்கள் குறித்து இந்த சோதனையானது நடைபெறுகிறது.

மதுபான ஆலையை நடத்தி வரக்கூடிய எஸ்என்ஜே குரூப்ஸ் மற்றும் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் தொடர்புடைய இடங்கள்ல இந்த சோதனையானது நிகழ்த்தப்பட்டு வருகிறது. 100க்கும் மேற்பட்ட வீரர்களுடன் எட்டுக்கும் மேற்பட்ட கார்களில் வந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் தீவிரமாக சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாகத்தான் எழும்பூரில் இருக்கக்கூடிய தாளமுத்து நடராஜன் மாளிகையில செயல்படக்கூடிய டாஸ்மாக் தலைமை அலுவலகத்திலும் சோதனையானது தொடர்ந்து வருகிறது. டாஸ்மாக் உடைய தலைமை அலுவலகத்தில் நான்கு மற்றும் ஐந்தாவது தளங்களில் எட்டுக்கும் மேற்பட்ட அமலாக்கத் துறையினர் அதிகாலை முதலே இந்த சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

குறிப்பாக யார் யாருக்கெல்லாம் டெண்டர் விடப்பட்டது. கடந்த நான்கு ஆண்டுகளில் எவ்வளவு டெண்டர் வாங்கப்பட்டது. அதில் சம்பாதித்த சொத்துக்கள் எவ்வளவு உள்ளிட்ட பல்வேறு ஆவணங்களை ஆராய்ந்து வரும் அமலாக்கத்துறையினர், அதில் ஏதேனும் சட்டவிரோத பணப்பரிமாற்றம் நிகழ்ந்திருக்கிறதா? என ஆய்வு செய்து வருகின்றனர். அதேபோல் தொடர்புடையவர்களுக்கு சம்மன் அனுப்பி, அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்துவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: டாஸ்மாக் தலைமை அலுவலகம்- திமுக எம்.பி நிறுவனத்தில் ED ரெய்டு..! செந்தில் பாலாஜிக்கு செக்..?