இடைத்தேர்தல் தேதி அறிவிப்பால், ஈரோடு கிழக்கு தொகுதியில் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவரும், ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினருமான ஈவிகேஎஸ் இளங்கோவன் மரணத்தை தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக தமிழ்நாடு சட்டப்பேரவை செயலகம் அறிவித்தது. இந்த நிலையில் பிப்ரவரி 5ஆம் தேதி ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் நடைபெறும் என இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் அறிவித்துள்ளார்.

ஈரோடு கிழக்கு தொகுதிக்கு வேட்புமனு தாக்கல் ஜனவரி 10ம் தேதி தொடங்கவுள்ளது. வேட்புமனுக்கள் மீது ஜனவரி 17ம் தேதி முடிவெடுக்கப்படும் என்றும், வேட்புமனு பரிசீலினை ஜனவரி 18ம் தேதி நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. வேட்புமனுக்களை திரும்ப பெறுவதற்கான கடைசிய நாளாக ஜனவரி 20ம் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு ..வேட்பளார் தேர்வு தீவிரம் ..!

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை அடுத்து ஈரோட்டில் தேர்தல் நடந்தை விதிகள் அமலுக்கு வந்தன. ஈரோடு மாநகராட்சி மேயர் மற்றும் துணை மேயர் அறைகள் சீல் வைக்கப்பட்டன. ஈரோடு கிழக்கு தொகுதியில் அரசு அலுவலகங்கள் மற்றும் மாநகராட்சி அலுவலகத்தில் இருந்த முதலமைச்சர் மற்றும் அரசியல் கட்சி தலைவர்களின் புகைப்படங்கள் அகற்றப்பட்டன.
அரசியல் கட்சி தலைவர்களின் பெயர்களை மறைக்கும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். பன்னீர் செல்வம் பூங்காவில் உள்ள தலைவர்களின் சிலைகளை மூடவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: Erode East By-Election: ஈரோடு கிழக்கு தொகுதிக்கு தேர்தல் எப்போது? - தேதியை அறிவித்தது தேர்தல் ஆணையம்!