மத்தியில் மோடி தலைமையிலான பிஜேபி கூட்டணி அரசு நடைபெற்று வருகிறது தமிழகத்தில் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்தியா டுடே தொலைக்காட்சி வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பில் தமிழகத்தில் இன்று நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றால் ஆளும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் 52% வாக்குகளையும், தேசிய ஜனநாயக கூட்டணி அதாவது என்டிஏ 21% வாக்குகளையும் அஇஅதிமுக 20 % வாக்குகளையும் பெறும் என கணிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2024 நாடாளுமன்றத் தேர்தலில் NDA தேசிய ஜனநாயக கூட்டணி 18% வாக்குகளையும் தற்போது அது 3% கூடியுள்ளது,இந்தியா கூட்டணி திமுகவை பொருத்தவரை 47% சதவீதமாக 2024ல் இருந்த வாக்கு சதவீதம் தற்போது 5 சதவீதம் கூடியதாக கூறப்படுகிறது. 23 சதவீதமாக இருந்த அதிமுகவின் வாக்கு வங்கி தற்போது 20% அதாவது 3 சதவீத வாக்குகள் குறைந்துள்ளதாக கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.

இதன் அடிப்படையில் திமுக மொத்தம் உள்ள 39 சீட்டுகளில் 38 இலிருந்து 39 சீட்டுகளை பிடிக்கலாம் எனவும் கருதப்படுகிறது. திமுக மற்றும் இந்தியா கூட்டணிக்கு எதிரான வலுவான கூட்டணி இல்லாததும் எதிர்க்கட்சிகள் சிதறி கிடப்பதுமே மிக முக்கியமான காரணம் என கருத்துக் கணிப்பு வெளியிடும் விவாதத்தில் கலந்து கொண்ட அரசியல் வல்லுநர்கள் கருத்து தெரிவித்தனர்
இதையும் படிங்க: ஜாமின் கோரி ஜாபர்சாதிக் மனுதாக்கல்.. அவகாசம் கோரிய அமலாக்கத்துறை...

தற்போது தமிழகத்தில் அரசியல் களம் சூடு பிடித்துள்ள நிலையில் இந்த கருத்துக்கணிப்பு வெளியிடப்பட்டுள்ளது குறிப்பாக தவெக தலைவர் விஜயை பிரபல அரசியல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் சந்தித்த நிலையில் இந்த கருத்துக்கணிப்பு வெளியாகி உள்ளது. இந்த கருத்துக்கணிப்பு எண்ணிக்கையின் அடிப்படையில் கட்சிகள் தங்களுடைய வியூகங்களை மாற்றி அமைக்கவும் வாய்ப்புள்ளது
இந்தியா டுடே கருத்துக்கணிப்பு வெளியானவுடன் திமுக அமைச்சர்கள் மற்றும் தொண்டர்கள் குதூகலத்தோடு கருத்துக்கணிப்பு முடிவுகளை சோசியல் மீடியா பக்கங்களில் அதிக அளவில் பகிர்ந்து வருகின்றனர்
இதையும் படிங்க: அண்ணாமலையால் ஒரு புல்லைக் கூட பிடுங்க முடியாது.. திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ.பாரதி ஆவேசம்..