திருப்பரங்குன்றத்தில் நடந்த சம்பவத்தை வெறும் அரசியல் கண்ணோட்டமாக பார்க்காமல், அதன் பின்னுள்ள வணிக அரசியல் அல்லது அடுத்த பத்தாண்டுகளில் மதுரை அடையப்போகும் மாற்றம் ஆகியவை குறித்து அலச வேண்டியது இந்த நேரத்தில் அவசியம் என்று தோன்றுகிறது.
நடப்பது காவி மற்றும் பச்சை அரசியல் என்று பெரும்பாலானோர் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் உலகின் மாபெரும் வல்லரசு நாடுகள் எடுக்கும் போர் முதலான முடிவுகள் கூட அதன் பின்னால் உள்ள வணிக பலன்களுக்காக என்பதை நாம் மறுத்து விட முடியாது. வளைகுடா போர் என்பது பெட்ரோல் மீதான ஆதிக்கத்திற்காக, சீனாவின் தைவான் மீதான ஆதிக்கம் என்பது வணிகப் போர் அல்லாமல் வேறென்ன.

சரி நம்ம ஊர் உதாரணத்தை எடுத்துக் கொள்வோம்.. தமிழ்நாட்டின் தொழில்நகரம் என்றால் அது கொங்கு மாவட்டம், குறிப்பாக கோயம்புத்தூர். மூலப்பொருட்களும், மனிதவளமும் நிரம்பிய இப்பகுதியில் சுதந்திரத்திற்கு பிறகு அதிக அளவில் ஆலைகள் வர ஆரம்பித்தன. பம்பாய், சூரத் போன்ற பகுதிகளுடன் வியாபாரம் செழித்து காணப்பட்டது. விளைவு, 1960,70-களில் குஜராத்திகள் முதலில் இங்கு வர ஆரம்பித்தனர். அதன்பின்னர் ராஜஸ்தானில் இருந்து மார்வாடிகள் அதிக அளவில் கோவையில் குவிய ஆரம்பித்தனர். பாப்னா, மேத்தா, டிப்ரிவால் ஆகிய உட்பிரிவைச் சேர்ந்தவர்கள். தாய்மொழியான மால்வாரி கூட பெரிதாக தெரியாது, ஆனால் இந்தியில் தான் பேசிக் கொள்வார்கள்.
இதையும் படிங்க: தை மாதம் சுற்றுப்பயணத்தைத் தொடங்கும் எடப்பாடி பழனிசாமி... கோவையில் இருந்து அரசியல் யுத்தத்தைத் தொடங்கும் இபிஎஸ்...
குஜராத்திகள் தங்களுக்காக கிக்கானி பள்ளியை துவக்கினார்கள். உடனே கோவை ஆர்.எஸ்.புரத்தில் ராஜஸ்தானி சங்கத்தை இவர்கள் தொடங்கினார்கள். பின்னர். நேரு வித்யாலயா பள்ளியை ஆரம்பித்தார்கள். அது இப்போது கலை,அறிவியல் கல்லூரி என பிரமாண்ட வளர்ச்சி அடைந்துள்ளது. இவர்களுடைய மதம் என்பது வணிகம் தான். ஆம், தங்கள் ரத்த சொந்தத்துக்குள் மட்டுமே திருமணம்.. கொடுக்கல் வாங்கல் வைத்துக் கொள்வார்கள். பெயருக்கு பின்னால் கட்டாயம் சாதிப் பெயர் போட்டுக் கொள்வார்கள்.

டெக்ஸ்டைல், எலெக்ட்ரிகல், ஹார்டுவேர், ஸ்வீட்ஸ் இந்த நான்கும் தான் இவர்களது அடிப்படைத் தொழில்கள். (இன்று எல்லா துறையிலும் புகுந்து விட்டார்கள் என்பது தனிக்கதை).. ஆனால் இவர்களுக்கு இங்குள்ள தமிழர்களில் சிலபிரிவினரும், இஸ்லாமியர்களும் வியாபாரத்தில் போட்டியாக இருந்தார்கள். 1990-களில் கோவையில் அரசியல்ரீதியாக காலூன்ற முயன்ற பாஜக, இஸ்லாமிய எதிர்ப்பு எனும் ஆயுதத்தை பரிட்சித்து பார்க்க முயன்றது. ஒருகட்டத்தில் அது கோவை குண்டுவெடிப்பு என்ற அளவுக்கு எரிமலையாக வெடித்துச் சிதறியது. விளைவு, வியாபாரத்தில் அதுவரை ஆதிக்கம் செலுத்தி வந்த இந்துக்களும், இஸ்லாமியர்களும் வாழ்வாதாரத்தை இழந்து நடுத்தெருவுக்கு வந்தனர். கோவையின் ஒட்டுமொத்த வணிகமும் இன்று மார்வாடிகளின் கையில்.
கோவையின் அதே பார்முலாவை இப்போது மதுரைக்கு பொருத்திப் பாருங்கள்.. மதுரை பெரியார் பேருந்து நிலையம், மாட்டுத்தாவணி, ஞாயிறு சந்தை என எல்லா பகுதிகளிலும் தமிழர்கள் 90 சதவிதம் பேர் வியாபாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களில் சிறுபான்மையினரான இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்களும் உண்டு. ஆனால் இப்போது திருப்பரங்குன்றம் மலை கந்தனுக்கா? சிக்கந்தருக்கா? என்ற முழக்கம் வெறும் அரசியல்ரீதியாக மட்டும் நின்றுவிடுமா? நாளை அது இனமோதலாக வெடித்தால் இருதரப்பிலும் தான் இழப்பு.. ஆதாயம் யாருக்கு?.. இப்போதே மீனாட்சி அம்மன் கோயிலை சுற்றிஉள்ள மாசி வீதிகளில் மார்வாடிகள் தான் கடை நடத்தி வருவார்கள். கோவையில் நடந்தது போல் ஒரு சம்பவம் நடந்தால், மதுரை முழுக்க இனி மார்வாடிகள் வணிக மையங்களாக மாறுவார்கள்.. தமிழர்கள் பழம்பெருமை பேசி மடிந்து போக வேண்டியது தான்.

நடக்கின்ற விஷயங்களை அரசியலாக பார்ப்பது எவ்வளவு முக்கியமோ அவ்வளவு பொருளாதார கண்ணோட்டத்திலும் பார்க்க வேண்டியது அவசியம்.. இன்று திரும்பிய திசையெல்லாம் வடஇந்திய தொழிலாளர்கள் தான். லட்சக்கணக்கான வடஇந்தியர்கள் தமிழ்நாட்டில் இருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. தமிழக காவல்துறை அதிகாரிகளையே தாக்கக் கூடிய அளவுக்கு அவர்கள் பெருகி நிற்கிறார்கள். தமிழ்நாடு அரசும், தமிழ் வணிகர்களும் இந்த விவகாரத்தில் கூடுதல் கவனம் செலுத்தினால் மட்டுமே, தமிழ்நாடு தமிழர்களுக்கான நாடாக இருக்குமே தவிர அசட்டைக் காட்டினால் இது மார்வாடி தேசமாக மாறிவிடக் கூடிய அபாயம் இருக்கிறது.
இதையும் படிங்க: 'பாஜகவை வளரவிட்டு வேடிக்கைப் பார்க்கிறதா திமுக அரசு..?' கொதிக்கும் சீமான்..!