இது தொடர்பாக தமிழக அரசு தலைமை கொறடா கா.ராமச்சந்திரன் வெளியிட்ட அறிக்கையில், “தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெறுகிறது. இன்று வெள்ளிக்கிழமை மாலை 6.30 மணிக்கு சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தின் கலைஞர் அரங்கில் நடைபெறும். இதில் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ள வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டுப் 2025-2026ம் ஆண்டுக்கான பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. காலையில் 9.30 மணியளவில் தமிழக பட்ஜெட்டை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்கிறார். பின்னர் நாளை வேளாண் துறை மீதான பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தாக்கல் செய்கிறார். இதையடுத்து மானியக் கோரிக்கை மீதான விவாதங்களும் நடைபெறவுள்ளது. பட்ஜெட் கூட்டத்தொடர், தமிழக அரசின் நலத்திட்டங்களின் நிலை குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது.
இதையும் படிங்க: 'மு.க.ஸ்டாலின் அவர்களே...இது பெரிய முட்டாள்தனம்..!' அண்ணாமலை ஆத்திரம்..!
இதற்கிடையே பட்ஜெட் தாக்கல் தொடர்பான அறிவிப்பில் ₹ என்பதற்கு பதிலாக தமிழ் எழுத்தான ரூ என்பதை குறிப்பிட்டு பட்ஜெட் அறிவிப்பு வெளியானது. இந்த ரூ குறியீடு பெரிதளவில் கவனம் பெற்றது. தேவனாகிரி எழுத்தில் இருந்த ₹ பயன்படுத்தாமல் ரூ என்ற தமிழ் எழுத்தை முதலமைச்சர் ஸ்டாலின் பயன்படுத்தி இருப்பது தேசிய அளவில் விவாதப்பொருளாகவும் மாறியுள்ளது. இதனால் தமிழக பட்ஜெட்டை மற்ற மாநிலங்கள் உற்று நோக்க தொடங்கியுள்ளனர்.

தமிழக அரசின் இந்த முடிவுக்கு மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், மாநில பாஜக தலைவர் அண்ணாமலை என பாஜகவினர் கடுமையான விமர்சனங்களை தெரிவித்து வருகின்றனர். மும்மொழி கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் தமிழக அரசு ₹ க்கு பதில் தமிழுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ரூ பயன்படுத்துவதால் சர்ச்சையாகியுள்ளது.
இந்த சூழலில் திமுக கூட்டம் நடைபெற உள்ளதால் முதலமைச்சர் எந்த மாதிரியான அறிவிப்பை திமுக உறுப்பினர்களுக்கு கூற உள்ளார் என்பதில் எதிர்பார்ப்பு உள்ளது.
இதையும் படிங்க: நாளை தாக்கலாகிறது தமிழக பட்ஜெட்.. சென்னையில் 100 இடங்களில் நேரலையில் பார்க்க ஏற்பாடு.!