பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், பெண்களுக்கு சுயதொழில் வேலை வாய்ப்பை உருவாக்கி கொடுக்கவும் பிங்க் நிற ஆட்டோ திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. சமூகநலத் துறை மற்றும் மகளிர் மேம்பாட்டுத் துறை சார்பில் கடந்த ஆண்டு சட்டசபை கூட்டத் தொடரில் இந்த திட்டம் அறிவிக்கப்பட்டது.

இந்த திட்டத்தில் பெண்கள் ஆட்டோக்கள் வாங்க தமிழக அரசு தலா 1 லட்ச ரூபாய் வரை மானியம் வழங்குகிறது.
இதையும் படிங்க: பெண்கள் பாதுகாப்பிற்காக அதிரடி... விரைவில் வருகிறது தமிழ்நாடு அரசின் அசத்தல் திட்டம்...!
ஆட்டோ வாங்குவதற்கு தேவையான மீதி பணத்தை வங்கிகளில் கடனாக பெறவும் ஏற்பாடுகள் செய்து தரப்படுகிறது. இந்த ஆட்டோக்களை மானிய விலையில் பெற குறைந்தபட்சம் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சென்னையில் வசிக்க வேண்டும்.

ஓட்டுநர் உரிமம் உள்ள 25 வயது முதல் 45 வயது வரையிலான பெண்கள் பிங்க் ஆட்டோ திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம் என்றும் இதற்கான விண்ணப்ப காலம் வருகிற டிசம்பர் 10 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது எனவும் கூறப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் கைம்பெண்கள், ஆதரவற்ற பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆட்டோக்கள் பெண்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. முற்றிலும் பெண்களாலேயே இயக்கப்படும் என்பதால் ஆட்டோக்களில் பெண் பயணிகளின் பாதுகாப்பு உறுதி செய்யப்படுகிறது. மேலும், இந்த ஆட்டோக்களில் ஜிபிஎஸ் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. அதுமட்டுமல்லாது பெண்களுக்கான உதவி எண்களும் கொடுக்கப்பட்டிருக்கும். இந்த ஆட்டோ திட்டத்திற்காக மொத்தமாக ரூ 2 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதனிடையே மகளிர் பிங்க் ஆட்டோ திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிங்க் நிற ஆட்டோ திட்டத்தை தொடங்கி வைத்தார்.
முதற்கட்டமாக 100 பிங்க் நிற ஆட்டோக்கள், 150 மஞ்சள், நீல நிற ஆட்டோக்களை பெண்களுக்கு வழங்கினார்.
இதையும் படிங்க: மதுக் கடைகளை படிப்படியாக குறைப்போம்ன்னு சொன்னீங்களே செஞ்சீங்களா..? திமுக அரசை கழுவி ஊற்றிய வானதி சீனிவாசன்!